தெய்வங்கள்

தெய்வங்கள்

பருகச்சொல்லி அழைப்பாரா.....

இமை இரண்டும் சேர்ந்திருக்க
இதழிரண்டில் தேனொழுக
அமைதியான ஆற்றலுடன் -அவன்
அடியெடுத்து வைத்தவுடன்

தடைசொல்லி மறுப்பாரா
தயவினையும் வெறுப்பாரா
இடையிடையே சிணுங்கி-இன்பமதை
இறுக்கமின்றி விடுவாரா

சிரிப்புடனே செவ்விதழை
சினுங்காமல் கடிப்பாரா
சின்னச்சின்ன அசைவுகளை-வெறுத்து
சினத்துடனே இழப்பாரா

கதை தொடர காத்திருந்து
கதவை மூடி வைப்பாரா
படையெடுத்து வருபவரை-ஏற்று
பாங்குடனே வைப்பாரா

பத்துமாதம் முடியுமுன்னே
பாசமதை தடுப்பாரா
பழுத்துவிட்ட கனியதனை-குழந்தையை
பருகச்சொல்லி அழைப்பாரா


Comments

  1. அவரின் மனநிலையைப் பொறுத்து...

    ReplyDelete
    Replies
    1. அன்பரே புரிஞ்சிகிட்டீங்க நன்றி

      Delete
  2. வெள்ளைத்தாளில் சிந்திய வண்ணமையைப்போல்
    எண்ணத்துள் சூட்சுமமாய் இயற்றிவிட்டீர் ஓர்கவிதை
    வெள்ளமென அணையுடைத்து வியாபிக்கும் உம்கருத்து
    திண்ணமாய் திரட்டிடுமே வாழ்த்துடன் புகழையுமே...

    வாழ்த்துக்கள் சகோதரரே!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் ஆழமான கருத்து பதிந்தமைக்கு மிக்க நன்றி

      Delete
  3. இலக்கியத்துடன் கலந்துவிட்டீர்கள் இந்த கவிதையில்

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க .உங்களின் சிந்தனைக்கு நன்றி

      Delete
  4. நிலாவைக் கானாது நீண்ட நேரம் நின்றிருந்தேன்.காரிருள் கருப்பாக சூழ்ந்திருந்தது. யாரோ தோளில் தட்டியது போல் உணர்ந்து திரும்பிப் பார்த்தால் நிலா நீல நிற டி சர்டில். இங்கே என்ன செய்கிறாய் என்றேன். சும்மா வாக்கிங் வந்தேன் என்று சொல்லி விட்டு வானில் ஏறித் தேய ஆரம்பித்தது. அம்மா சொன்னாள், அம்மாவசை அன்னைக்கு வெளியே போகதேன்னு சொன்னா கேட்டியா ? என்று

    கவிதை நல்லாருக்கா சார்

    ReplyDelete
  5. சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி,சுரேஷ் வாழ்த்துக்கு நன்றி

      Delete
  6. ஆசைகள் பலவிதம்!

    ReplyDelete
    Replies
    1. ஆசையிருக்கு உண்மைதான் அய்யா

      Delete
  7. அழகான கவிதை ஐயா...

    அன்புருவாம் இச்செல்வத்துக்கு
    அலையாய் அலைபவர் கோடியுண்டு
    இன்னலென பழித்து
    நசுக்குவோர் பலருண்டு....
    சுயமும் சூழலும்
    முடிவேடுக்க்றதோ...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் தோழரே
      உலகமிதைச் சொல்லுதே
      நல்ல சொல்லை கூறி
      நயமாய் சொன்னமைக்கு
      நன்றி நன்றி.

      Delete


  8. வணக்கம்!

    தமிழைப் பருகிடவே தந்தகவி யாழி
    அமிழ்தம் சுரக்கம் அறி!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. நயமிகுந்த வார்த்தையாலே
      நாளெல்லாம் கவிப் படைக்கும்
      அமுதமொழி கவிஞரே
      அருமை அருமை

      Delete
    2. இருவரின் கவிதையையும்
      நெஞ்சு முட்ட முட்ட
      பருகினேன் ! ஆழ்கடலில் மூழ்கினேன்.

      கவிஞர். ஞானசாமி
      செயலர்: செங்குட்டுவன் இலக்கியபேரவை. சேத்தியாதோப்பு

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more