தெய்வங்கள்

தெய்வங்கள்

துரோகியே மடிவாய் நீயே

அழுகின்ற குரலென்றும்
அடங்காமல் போகாது
அடக்குமுறை எந்நாளும்
அறவழியாய் ஆகாது

துடிக்கின்ற உயிரென்றும்
துணையின்றிப் போகாது
துன்பமே எல்லோர்க்கும்
வழித்துணையாய்  மாறாது

விழுகின்ற நொடிஎல்லாம்
விரல்துடிக்க மறவாது
விழுந்தாலும் மனதால்-உணர்வை
வீழ்த்திவிட முடியாது

கடுமையான வார்த்தையாலே
நெடுந்துயரம் தீராது
கயவனாகி போனதனால்-உனக்கு
கண்ணுறக்கம் இனியேது

காற்றடிக்கும் திசையெங்கும்
கண்டபடிச் செய்திட்ட
கற்பனைகெட்டாத காரியத்தால்
தூற்றித் துறத்தும் காலம் தூரமில்லை

நேற்றுவரைச் செய்ததை
நினைத்துப் பார்த்து
தோற்றுவித்த துரோகத்தை
ஏற்றுக்கொண்டு மடிவாய்  நீயே

கவியாழி.




Comments

  1. சகலாரதனையுடன் கூடிய சம்போகித சித்திரமாய் விவரித்துள்ளீர்கள் ஒரு துரோகியின் செயலை. அண்ணா உங்கள் நண்பர்களில் நான் ஒருவன் என் மேல் சந்தேகம் வேண்டாம்

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க .தொடர்ந்து படிங்க

      Delete
  2. துரோகத்தால் துடிக்கும் மனதின் நொறுங்கும் வேதனையை இந்தக் கவிதை அருமையாய்ச் சொல்லுகிறது. எந்த துரோகத்திற்கும் மன்னிப்பென்பது ஏது? காலம் மட்டுமே எந்த துரோகத்திற்கும் உண்டான தகுந்த தண்டனையைத் தரும்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் நடக்கும் நேர்மையே வெல்லும் நிம்மதிக் கிடைக்கும்

      Delete
  3. காலம் அவர்களுக்கு பாடம் சொல்லும்!

    ReplyDelete
    Replies
    1. பாடமும் சொல்லும் ,காலமும் வெல்லும்

      Delete
  4. வீறு கவி படித்த சோதராரே வாழ்த்துக்கள்!

    வீணாக மனக்கலக்கம்வேண்டாம் எமக்கு
    அவன் தன் நாளெண்ணும் காலம் ஆரம்பம்....

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் காலம் நெருங்கிவிட்டது

      Delete
  5. காலம் மாறும் காட்சிகள் மாறும்

    ReplyDelete
  6. நிச்சயம் மாறத்தான் வேண்டும் .மனமாற்றம் தேவைதான்.நீங்க வந்ததுக்கும் கருத்துப் பகிர்ந்தமைக்கும் நன்றி

    ReplyDelete
  7. அருமையான படைப்பு! தூற்றித் துறத்தும் காலம் தூரமில்லை! உண்மைதான்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க சுரேஷ்.நிச்சயம் நடக்கும் நிம்மதியை கெடுக்கும்

      Delete
  8. நெஞ்சு கண்டு பொறுக்குதில்லையே தான். ஆனால் காலம் மாறும்,காட்சிகளும் மாறும். பொறுத்து தான் ஆக வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதாங்கம்மா.நாமெல்லாம் இயலாதவர் ஆகிவிட்டோமா?

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more