தெய்வங்கள்

தெய்வங்கள்

புறப்படு தமிழா ! புறப்படு !!



புறப்படு புறப்படு
புயலென விரைந்திடு
புதைந்தவர் கனவினை
புரிந்திட்டுப் புறப்படு

வதைபடு உதைபடு
வாழ்பவர் துயர்நீக்க
வந்திடும் சிரமங்கள்
வென்றிடப் புறப்படு

எழுந்திடும் உணர்வுகள்
இணைந்திடப் புறப்படு
எம்மினம் என்றே
உணர்வுடன் புறப்படு

மாணவர் உணர்ச்சியை
மழுக்கிட முடியாது
மக்களின் உணர்ச்சியை
மறுத்திடக் கூடாது

மாணவர் கிளர்ச்சியே
மனதுக்கு மகிழ்ச்சியே
மாண்டிட்ட மக்களின்
மறுபடி எழுச்சியே





Comments

  1. ஒற்றுமையோடு வரும் தடைகளை தகர்த்தெறிந்து வெற்றி பெறவும் வேண்டுகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ,தடைகளை தகர்த்தால் விடையே வெற்றிதானே நிச்சயம் நடக்கும் நிம்மதி கிடைக்கும்

      Delete
  2. மாணவர் உணர்ச்சியை
    மழுக்கிட முடியாது
    மக்களின் உணர்ச்சியை
    மறுத்திடக் கூடாது

    என்ன ஒரு ஆளுமையான வரிகள் கவிதை ரொம்ப நல்லா இருக்கு. நன்றி

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் வெற்றி அவர்களுக்குண்டு நிம்மதியும் நமக்குண்டு ,
      வாருங்கள் வாழ்த்துவோம்

      Delete
  3. சகோதரரே!....
    அருமை. படைத்திட்ட கவி தந்திடுது நல்ல வேகத்தை. வாழ்த்துக்கள்!!!

    புறப்படச்சொல்லி புறப்பட்ட கவிகண்டு
    பறகின்ற எண்னமுடன் பதிந்திட்டேன் வாழ்திதனை...

    ReplyDelete
    Replies
    1. கருத்துரைக்கவும் கவிபடைக்கும் இளமதியே.தமிழ்ப் புவி இங்கு இடமுண்டு போராட வாருங்கள் தோள் சேருங்கள் .நிச்சயம் வெற்றி நமக்கே

      Delete
    2. நன்றி சகோதரா..
      என் தோள் இணைப்பு என்றுமே என் தமிழுக்குண்டு.
      உன் வருகையை விரும்பும் என்வலைப்பூவும் உணர்வோடு....

      Delete
    3. //புறப்படுப் புறப்படு//

      தேவையே இல்லாம எதுக்கு இங்க ஒரு ஒற்று துருத்திக்கிட்டு இருக்கு ? ஒற்று பிழைகூட தெரியலை இதில கவிதை வேறயாம்........பிஸ்ஜ்க்

      //என் தோள் இணைப்பு என்றுமே என் தமிழுக்குண்டு.
      உன் வருகையை விரும்பும் என்வலைப்பூவும் உணர்வோடு....//

      என்னப்பா ரெண்டு *** பேசறாப்லே! - நார்மலா பேசமாட்டீங்களா ?

      Delete
    4. நன்றி உங்க கருத்துக்கு

      Delete
  4. உணர்ச்சிப் பெருக்கு!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்.ஆனால் இன்ற இளைஞர்களைபோல உணர்ச்சிபூர்வமா முடியல

      Delete
  5. எழுதட்டும் புதிய விதியை எழுச்சியுடன்

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் நடக்கும் லட்சியம்வெல்லும்

      Delete
  6. மாணவர் கிளர்ச்சியே
    மனதுக்கு மகிழ்ச்சியே
    மாண்டிட்ட மக்களின்
    மறுபடி எழுச்சியே

    மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

      Delete


  7. உணர்ச்சி மிகு கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்கய்யா

      Delete
  8. எழுச்சிமிகு வார்த்தைகள்!
    அருமையாக உள்ளது கவியாழி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கம்மா நமக்குதெரிந்ததை சொல்லலாமே

      Delete
  9. இப்பதான் வந்தேன் அதுக்குள்ள புறப்பட சொல்லறீங்களே! (சும்மா..பாஸ் )
    கவிதை நல்லா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. aஆதரவு தருவதற்கு புறப்படலாமே?

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more