தெய்வங்கள்

தெய்வங்கள்

நண்பனே திரும்பி வா


நண்பனே நண்பனே நலமா
நம்மூரில் எல்லோரும் நலம்
நாடுகடந்த நம் நட்பு
நாதியத்து போனதாலே

வீதியெங்கும் பேசுகிறார்
வேதனையாய் சொல்லுகிறார்
சோதனையான நட்புக்கு-ஆறுதல்
சொல்லும்படி இல்லையே

காடுக் கம்மாய் சுத்தியது
கிணத்துக்குள்ளே மூழ்கியது
திருட்டு மாங்காயும் புளியும்
திரும்பவும் உண்ணத்தோணுது

நம்மூரு உணவுக்கு
நானிங்கே அடிமை
நண்பன் நீ சென்றதாலே
நாக்கும்கூட தனிமை

ஏக்கமாய் உள்ளது
எப்போது நீ வருவாய்
இருவருமே இங்கே-உழைக்க
இணைந்தே செல்லலாமே


சுற்றமும் நட்பும்
சூழ்ந்து வாழ நீ வா
உற்றதுணை எல்லோரும்
உடனிருக்க திரும்பி வா

+++++++கவியாழி+++++++



Comments

  1. மனதில் இருக்கும் ஏக்கம்...
    அழகிய கவிதையில்...

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க நண்பரே வந்தமைக்கும் கருத்துப் பகிர்ந்தமைக்கும்

      Delete
  2. இனிய நினைவுகள்
    நினைந்து சுகிக்க வைக்கும் வரிகள்
    "காடுக் கம்மாய் சுத்தியது
    கிணத்துக்குள்ளே மூழ்கியது
    திருட்டு மாங்காயும் புளியும்
    திரும்பவும் உண்ணத்தோணுது.."

    ReplyDelete
    Replies
    1. பழைய ஞாபகம் எப்போதும் இனிமையானவை

      Delete
  3. மலரும் நினைவுகள் என்றும் மங்காத நினைவுகள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சகோ .நன்றி

      Delete
  4. இனிய நினைவுகள் எனக்கும் மீட்டியதென்பதோ உண்மை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க .எல்லோருக்கும் வரும் இன்பத்தருணமே

      Delete
  5. கவிதை வழி கடிதமா !

    ReplyDelete
  6. நீங்க வந்து கருத்துச் சொன்னதுக்கு நன்றி ஜெய் .

    ReplyDelete
  7. சீக்கிரம் நண்பர் வரட்டும்! ஏக்கம் தீரட்டும்! நல்ல கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நம்ம ஊருக்கு வந்தாலே நாளெல்லாம் சந்தோசமே

      Delete
  8. கவிதை நண்பனை திரும்ப அழைத்து வரட்டும் ..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்மா திருந்தி வரட்டும்

      Delete
  9. அந்த நாள் நினைவுகளைக் கவிதை கடிதமாகி விட்டீர்கள்.
    உங்கள் நண்பன் சீக்கிரமே வரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. இந்த நாளிலும் மறக்க முடியாத தருணமல்லவா

      Delete
  10. சுற்றமும் நட்பும்
    சூழ்ந்து வாழ நீ வா
    உற்ற துணையெல்லாம்
    உடனிருக்க திரும்பி வா// அருமை

    ReplyDelete
  11. எல்லா நண்பர்கள் யோசிக்க வேண்டியது

    ReplyDelete
  12. சுற்றமும் நட்பும்
    சூழ்ந்து வாழ நீ வா
    உற்றதுணை எல்லோரும்
    உடனிருக்க திரும்பி வா//
    சிறுவயது தோழனை பிரிந்த ஏக்கமும் அவரை திரும்பி வரச்சொல்லும் அன்பு அழைப்பும் கவிதையில் மிளிர்கிறது.
    நண்பர் திரும்பி வந்து பழங்கதை பேசி மகிழ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தோழரின் தோழமை மறக்குமா அதனால்தான் மீண்டும் அழைக்கிறேன்

      Delete
  13. நட்புக்கு ஒரு கவிதை அழகோ அழகு. நண்பேண்டா.

    ReplyDelete
  14. என்ன இருந்தாலும் நம்ம ஊரைப்போல வருமா? நண்பர் வந்து விடுவார்.

    ReplyDelete
    Replies
    1. எல்லோருக்கும் சொல்லுங்க நம்ம ஊரு நடப்புப் பற்றி

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more