தெய்வங்கள்

தெய்வங்கள்

பெத்தவங்களை போற்றுங்க




கற்றதனால் மறக்குமோ
பெற்றோரின் கடமைகள்
காசுக்கெங்கும் கிடைக்குமோ-அன்பு
கடையிலும் கிடைக்குமோ

கனிவுடனே பேர்சொல்ல
கண்குளிரப் பார்த்திருக்க
மீண்டும் வந்து பிறப்பாரா
மகிழ்ச்சியோடு அழைப்பாரா

மற்றவரும் நினைப்பாரோ
மகிழ்ச்சியாக சிரிப்பாரோ
உற்றாரும் வாருவாரோ
உடனிருந்து பார்ப்பாரா

கருவுற்ற நாள்முதல்
கண்ணுறக்கம் பாராமல்
உருவாக்கி வளர்த்தாரே
உதிரத்தை உணவாக்கி

பெத்தவங்களை போற்றினாலே
பேரிண்ப தடையேது  மகிழ்ச்சி
பெற்றதனால் பிள்ளைகளின்
பெருமைக்கு வேறென்ன புகழ் ஈடு


Comments

  1. அருமையான கருத்துடன் கூடிய பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்க சார்.

      Delete
  2. ஐயா தாயின் பெருமையை அழகாய் வரைந்தீர்கள் கவிதையாக!!!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் .உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  3. பெற்றோரை போற்றுவதை விட வேறென்ன கடமை பெரிது !
    அருமை மேலும் தொடர வாழ்த்துக்கள் ஐயா .

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நட்பே.இப்போதெல்லாம் தனிக் குடித்தனம் எனும்பெரில் பெத்தவங்களை நிர்கதியாக்க்கி விடுகிறார்கள்

      Delete
  4. மிகவும் அருமையான கருத்துக்களுடன் கவிதை நல்லா இருக்கு. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க,தொடர்ந்து வாங்களேன் ஆதரவு தாங்களேன்

      Delete


  5. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அய்யா.உங்களைப்போன்ற தமிழாசிரியர்கள் முதன்முதலில் கற்றுத் தந்தது

      Delete
  6. பெத்தவங்களை போற்றினாலே
    பேரிண்ப தடையேது மகிழ்ச்சி
    பெற்றதனால் பிள்ளைகளின்
    பெருமைக்கு வேறென்ன புகழ் ஈடு//
    அருமையான கருத்துக்களை கொண்ட பாடல். முதல் தெய்வங்கள் பெற்றோர் அல்லவா!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நட்பே.கடவுளையே காண்பித்த கடவுள்கள்

      Delete
  7. பெற்றோர்களை போற்றுபவர்கள் ஒரு நாள் அவர்களும் தங்கள் பிள்ளைகளால் போற்றப்படுவார்கள்...!

    ReplyDelete
  8. அவர்களுக்கு ஈடு இணை ஏதும் உண்டோ...?

    ReplyDelete
    Replies
    1. யாரால் மறுக்க முடியும் ? உண்மைதானே

      Delete
  9. நமது தெய்வங்களை பேணுவோம்.

    ReplyDelete
    Replies
    1. ஆம். உண்மைதான் பெற்றவர்கள்தான் முதல் தெய்வம் மற்றதெல்லாம் பிறகுதான்

      Delete
  10. அழகான கருத்தோவியம். எழுதிக் கொண்டே இருங்கள்!

    ReplyDelete
  11. நன்றிங்க நீங்க என் தளத்துக்கு வந்து கருத்துடன் ஊக்கமளித்தமைக்கு நன்றிங்க செல்லப்பா சாமி அவர்களே

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more