தெய்வங்கள்

தெய்வங்கள்

வெற்றி பெறவே துடிக்குது..............

நேற்றைய வாழ்க்கை முடிந்தது
நேரமும் காலமும் கழிந்தது
நிம்மதி சிலநாள் கிடைத்தது
நேர்மையாய் உணர முடிந்தது

பார்ப்பவர் எண்ணம் புரிந்தது
பாதையும் தெளிவாய் தெரிந்தது
பகலும் இரவும் போலவே
பசுமை வெறுமை கடந்தது

இன்றைய நாளில்  நடப்பது
இன்பம் விரும்பி வாழ்வது
இளமை  வெறுமை இழந்தது
இனிமை வாழ்க்கை ஏங்குது

துன்பம் மெல்ல விலகுது
துயரம் தாண்டி செல்லுது
தூயநல்  நட்பும் தொடருது
துணையாய்  அருகில் வாழுது

நாளைய ஏக்கம் தொடருது
நல்லதும் கெட்டதும் தெரியுது
நாணயம் என்னுள் இருப்பதால்
நன்மையும் தீமையும் தெளிந்தது

வேதனை சிலதும் மறைந்தது
வெளிச்சமும்  அதனால் வந்தது
வேண்டி  விரும்பி  மனதுமே
வெற்றி பெறவே  துடிக்குது


-----கவியாழி------

Comments

  1. ///நாணயம் என்னுள் இருப்பதால்
    நன்மையும் தீமையும் தெளிந்தது///
    நாணயமும்
    நா நயமும்
    இருந்தால்
    வெற்றியின் இலக்கை அடைதல்
    இயல்பான எளிதாம்..
    அழகுற உரைத்தமை
    இனிமை பாவலரே...

    ReplyDelete
    Replies
    1. வெற்றி பெற நன்றிங்க மகேந்திரன்.

      Delete
  2. //துன்பம் மெல்ல விலகுது
    துயரம் தாண்டி செல்லுது
    தூயநல் நட்பும் தொடருது
    துணையாய் அருகில் வாழுது//
    ரசித்த வரிகள்!

    ReplyDelete
    Replies
    1. ஆம்.துணையின்றி உறவேது

      Delete
  3. விலகட்டும் துன்பமெல்லாம் ..இன்பம் நிறையட்டும் உங்கள் உள்ளமெல்லாம் !
    த .ம 5

    ReplyDelete
    Replies
    1. நீங்க சோக்காளி என்பதால் தவறான தகவல் தர வேண்டாமே

      Delete
  4. /// நாணயம் என்னுள் இருப்பதால்
    நன்மையும் தீமையும் தெளிந்தது... ///

    அருமை வரிகள்... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  5. அதனாலதான் நாணயத்திற்கு நாணயம் என்ற பெயர் வந்துருக்கு இல்லையா ? சூப்பர்ப் அண்ணே....!

    ReplyDelete
  6. வணக்கம்
    ஐயா

    வேதனை சிலதும் மறைந்தது
    வெளிச்சமும் அதனால் வந்தது
    வேண்டி விரும்பி மனதுமே
    வெற்றி பெறவே துடிக்குது

    உண்மையான வரிகள்..... பதிவுஅருமை வாழ்த்துக்கள்..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. வேதனை சிலதும் மறைந்தது
    வெளிச்சமும் அதனால் வந்தது
    வேண்டி விரும்பி மனதுமே
    வெற்றி பெறவே துடிக்குது

    தன்னம்பிக்கை வரிகளுக்கு வாழ்த்துகள்..!

    ReplyDelete
  8. நாணயம் என்னுள் இருப்பதால்
    நன்மையும் தீமையும் தெளிந்தது
    அருமை

    ReplyDelete
  9. வெற்றி உமதே !

    ReplyDelete
  10. வெற்றி பெற வாழ்த்துகள் அண்ணா!

    ReplyDelete
  11. நம்பிக்கை வெளிச்சம் படரச்
    செய்து போகும் பகிர்வுக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. வெற்றி..
    நல்ல கவிதை...

    டேஷ்போர்ட்ல காமிக்கற ஒரு பதிவு இங்க காணல அண்ணா...


    ReplyDelete
    Replies
    1. அப்படியா பார்கிறேன் தம்பி

      Delete
  13. நாளைய ஏக்கம் தொடருது
    நல்லதும் கெட்டதும் தெரியுது
    நாணயம் என்னுள் இருப்பதால்
    நன்மையும் தீமையும் தெளிந்தது // பிடித்த வரிகள்! அருமையான படைப்பு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றிங்க சுரேஷ்

      Delete
  14. வாழ்க்கை பற்றிய சிந்தனையை கவியாய் தந்த விதம் அருமை அய்யா. மேற்கோள் காட்ட வரிகளைத் தெரிவு செய்யலாம் என்று பார்த்தால் எதை விடுவது என்ற வினா பிறக்கிறது. தங்களின் கவிவரிகள் அனைத்துமே அருமை. பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  15. தங்களின் வருகைக்கு நன்றிங்க பாண்டியன்

    ReplyDelete
  16. மனது வெற்றி பெறட்டும்.
    வேதா. இலங்காதிலகம்:

    ReplyDelete
  17. வரிகள் அமைப்பாய் விழுந்திருக்கின்றன. அருமை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிங்க ஸ்ரீராம்

      Delete
  18. நேற்று...இன்று..நாளை..அருமையாகக் கவிபடைத்துவிட்டீர்கள்!
    பகிர்வுக்கு நன்றி கவியாழி ஐயா! த.ம.10

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் நன்றிங்க கிரேஸ்

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more