தெய்வங்கள்

தெய்வங்கள்

ஓய்வு கொடுக்க வேண்டுமா








ஆண்டுகள் பதினெட்டும்  என்னோடு
ஆனந்த பயணம் செய்துவந்த
அடிக்கடி நிற்காதக் களைக்காத
ஆதவனின் நண்பன் கடிகாரம்

வேதனையும் நாளும் கண்டவன்
வேடிக்கை பலதும் பார்த்தவன்
வீறிட்டு அழத்தெரியாத  பண்பன்
வேகமாய் செல்லாத துணைவன்

சாப்பிடும் நேரம் சொல்பவன்
சாதனைக் கண்டே ரசித்தவன்
சரிநிகர் சமமாய்  இருந்தவன்
சங்கடம் பலதும் கண்டவன்

அடிக்கடிப் பார்த்திடும் கடிகாரம்
ஆன்மா இல்லாத அவதாரம்
அனைவரும் விரும்பும் பலநேரம்
அதுவே எல்லோருக்கும் ஆதாரம்

உடலோடு உறவாட தவறவில்லை
உயிரின்றி  என்றுமே நின்றதில்லை
உள்ளமும் என்றுமே வெறுத்ததில்லை
உறவாக என்னையும் பிரிந்ததில்லை

ஓய்வு வேண்டியே விரும்பியே
ஓடிக்கொண்டே இருந்தாலும் வயதால்
ஒளியிழந்து கையில் துடிக்கிறான்
ஓய்வு கொடுக்க வேண்டுமா


------கவியாழி------

Comments

  1. அப்படியே ஓடட்டும்... ரசித்தேன் ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

      Delete
  2. தொடர்ந்து தங்கள் கைகளை அலங்கரிக்கட்டும்.....

    த.ம. 3

    ReplyDelete
  3. ஓய்வு வேண்டியே விரும்பியே
    ஓடிக்கொண்டே இருந்தாலும் வயதால்
    ஒளியிழந்து கையில் துடிக்கிறான்
    ஓய்வு கொடுக்க வேண்டுமா

    ஓடட்டும் காலமும் கடிகாரமும் ..!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிங்கம்மா

      Delete
  4. உங்களுடன் உயிராய்க் கலந்தது தெரிகிறது கவியில்!
    ஓய்வு கொடுக்க வேண்டாம் ஐயா, உங்கள் கையிலேயே இருக்கட்டும்..
    அருமையான கவிதை! ta.ம.4

    ReplyDelete
  5. ஓய்வு ஒழிச்சல் இன்றி நின்றவாரே ஓடும் கடிகாரத்திற்கு ஓய்வு கொடுக்க வேண்டுமா ? காலச்சக்கரம் சுழலட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வேண்டாம்.கையிலேயே கட்டிக் கொள்கிறேன்

      Delete
  6. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே'

    ReplyDelete
  7. பதினெட்டு வருஷா நட்பா... ? நட்பிற்கு கொஞ்சம் மெருகு போட்டு விடுங்கள்... புதியதாய் தோன்றும்...

    ReplyDelete
    Replies
    1. அப்படியே செய்கிறேன் உஷா அவர்களே

      Delete
  8. வணக்கம்
    ஐயா

    உடலோடு உறவாட தவறவில்லை
    உயிரின்றி என்றுமே நின்றதில்லை
    உள்ளமும் என்றுமே வெறுத்ததில்லை
    உறவாக என்னையும் பிரிந்ததில்லை

    பரியாமல் உங்களுடன் இருக்கட்டும் உங்கள் கடிகாரம்
    கவிதை அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. Replies
    1. ஆம்.இன்னுமே ஓடட்டும்

      Delete
  10. கை அணியாக வந்த கடிகாரத்திற்கு அழகான கவிதை! தொடர்ந்து ஓடி அதுவே இளைப்பாறட்டும்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. விட்டு விடுகிறேன் சுரேஷ்

      Delete
  11. இன்னும் எவ்வளவு நாள் அதே ஓட்டைக் கடிகாரத்துடன் காலம் தள்ளுவீர் அய்யா! (த.ம.7)

    ReplyDelete
    Replies
    1. மனைவியைப் போல உடலோடு இன்னும் ஒட்டிவருவதால் காத்து வருகிறேன்.

      Delete
  12. கடிகாரத்தால் தங்கள் கைகளும், தங்கள் கைகளால் கடிகாரமும் சிறப்பு பெறட்டும். கடிகாரத்திலுள்ள சின்ன முள், பெரிய முள்-ளுக்கு ஒரு கவிதையை எதிர்பார்க்கிறேன். நல்லதொரு பகிர்வு அய்யா. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா அடுத்தமுறை பார்க்கலாம்

      Delete
  13. எதையெல்லாம் எழுதலாம்
    எனத் தெரியாமல் தவிப்போருக்கு
    உங்கள் வலைத்தளம்தான் வழிகாட்டி
    வாழ்த்துக்களுடன்....

    ReplyDelete
  14. அடடா.. எது எப்படியானாலும் பழையதின் மவுசு குறையாது...

    புதுசு வந்தாலும் பழசும் இருக்கட்டும்.. ஞாபகத்துக்காகவேனும்..:)

    ReplyDelete
    Replies
    1. ஆம்.மறக்காமல் வைத்துக் கொள்கிறேன்

      Delete
  15. ரசிக்க வைத்த கவிதை....

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றி

      Delete
  16. தங்களின் கடிகாரம் யாருக்கும் ஒரு சடப்பொருளாகத் தோன்றவில்லை... ரத்தமும் சதையுமாக உயிருள்ள சீவனாகவே தோன்றுகிறது... தோன்ற வைத்ததில் தெரிகிறது உங்கள் வரிகளின் வெற்றி...!

    முடிவில்லா காலத்தைக் காட்டும் கடிகாரமும் முடிவில்லாமல் ஓடட்டும் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. அப்படியே செய்கிறேன் நண்பரே

      Delete
  17. ஓய்வு வேண்டியே விரும்பியே
    ஓடிக்கொண்டே இருந்தாலும் வயதால்
    ஒளியிழந்து கையில் துடிக்கிறான்
    ஓய்வு கொடுக்க வேண்டுமா
    //
    ஒய்வு இல்லாமல் அதுவே ஓடும் போது ஒய்வு ஏன் கொடுக்க வேண்டும்!

    ReplyDelete
  18. நல்ல யோசனை .நன்றி

    ReplyDelete
  19. நானும் இப்படி ஒன்றை வைத்திருந்தேன். நண்பர் பரிசளித்தது. இருபத்திரண்டு ஆண்டுகள் உழைத்தது. சமீபத்தில்தான் ஓய்வு கொடுக்கப்பட்டது - வேறு வழியில்லாமல்.

    ReplyDelete
    Replies
    1. அதுவும் நண்பனாய் கூடாவே இருந்ததோ?

      Delete
  20. உடன் பிறவா உறவாய், உங்களுடன் எப்பொழுதும் ஒட்டி உறவாடும் உறவிற்கு எதற்கு ஓய்வு.

    ReplyDelete
    Replies
    1. ஆம்.உண்மைதான் என்னிடமே ஓய்வாகவே இருக்கட்டும்

      Delete
  21. பழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்தின் கட்டாயம் ஆயிற்றே !

    ReplyDelete
    Replies
    1. இது மனைவிக்குத் தெரியவில்லையே

      Delete
  22. வேண்டாம் !என்னிடம் தரலாம்!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் ஐரோப்பா சென்றபோது சுவிஸ்ல் எனக்கு வாங்கி வந்திருந்தால் கொடுத்திருப்பேன்

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more