தெய்வங்கள்

தெய்வங்கள்

ஈஸ்டர் நேசம் என்ற எனது வகுப்பாசிரியயை



ஈஸ்டர் நேசம் என்ற எனது வகுப்பாசிரியயை என்னை மிகவும் கவர்ந்த பிடித்த ஆசிரியை. நான் சாதாரண அரசுப் பள்ளியில் படிக்கும்போது எனக்குப் பிடித்த ஆசிரியையை  இன்னும் என்னால் மறக்கமுடியவில்லை. நல்ல சிகப்பாய் மிகவும் அழகாக இருப்பார்கள் .அடிக்கவே மாட்டார்கள்.கன்னத்தை கிள்ளி செல்லமாய் முத்தமிடுவார்கள்.இன்னும் அவரின் முகமும் முத்தமும் அன்பும்  நினைவில் இருக்கிறது.

 அப்போது ஏழு அல்லது எட்டு வயதிருக்கும் இரண்டாவது படிக்கும்போது  . மதிய நேரத்தில் நிறைய மாணவர்கள் தூங்கி வழிவார்கள் நானும் அப்போது அப்படித்தான் தூங்கினேன். இதை மறுக்க யாராலும் முடியாது அப்போதைய வயது அப்படித்தான் இருக்கும்.ஆனால் அந்த நேரத்தில் அவர்கள் கதை சொல்ல தொடங்கினால் எல்லோருமே தூங்காமல் இருந்ததுண்டு

அப்போதெல்லாம் நல்ல கான்கிரீட் கட்டிடங்கள் இருக்கவில்லை  ஓடுபோட்ட கூரைகள்தான் இருந்தது. ஆனால் நல்ல உஷ்ணமான காற்றோட்டமாய் 
இருக்கும்.அவ்வாறான மதிய வேளையில் சில நேரங்களில் நானும் அசந்து தூங்கி வழிந்திருக்கிறேன்.அப்போதெல்லாம் சிறு குச்சியை வைத்து அடிப்பதுபோல்  மிரட்டுவார்கள்.

இன்னும் சில ஆசிரியர்களோ வீட்டுப்பாடம்  எழுதாமல் தலைசீவி வாராமல் இருக்கும் மாணவர்களுக்கு கொடுக்கும் அதிகபட்ச தண்டனைகள் காலில் மண்டியிட்டு வகுப்பறையின்  மூலையில் உட்காரச் சொல்வார்கள் . இந்த தண்டனைதான் சின்ன வயதில் மாற்றத்தை ஏற்படுத்த அல்லது படிக்கவைக்க தரும் தண்டனையை இருந்தது.

ஆனால் இன்று  மாணவர்கள் மனதளவில் பாதிக்கும் தண்டனைகளே ஆசிரியர்கள் கொடுக்கும் அதிகபட்ச தண்டனைகளாய் இருக்கிறது.இது மாணவர்களை விரக்தியின் உச்சத்திற்கு கொண்டுபோய் தற்கொலைகள் செய்யும் அளவுக்கு அல்லது அவமானப்படுத்தி அனைவரின்முன் நிற்குமளவுக்கு இன்றைய கல்வித்தரம் கடுமையாய் இருக்கிறது.இதனால் மாணவர் ஆசிரியரிடையே  புரிதல் இருக்க முடிவதில்லை.

ஆனால் எனக்கு எனது ஆசிரியை அன்று கொடுத்த அதிகப் பட்ச தண்டனையே
வெளியில் என்னை நிற்கவைத்து அதையே தண்டனையாய் செய்தார்.இன்று நடக்கும் கொள்ளைகளுக்கும் கொடுமைக்கும் சட்டமே பாதுகாப்புக் கொடுக்கிறது.அதனால் கல்வி என்பது வியாபார நோக்கமாய் இருக்கிறது.

ஆம்,மாற்றம் வேண்டும் கல்வியாளர்களின் மனதில் மாற்றம் வேண்டும்.நல்லக் குடிமகனை உருவாக்கும் நல்லெண்ணம் வேண்டும்.நாளும் நற்பணி செய்யும் நேர்மையான குணம் வேண்டும்

Comments

  1. "சரியாப் படிக்கலேன்னா
    ஒழுங்கமா இல்லாட்டி நாலு போடுங்க சார்
    அடியாது மாடு படியாது சார் "
    என்கிற காலத்தில் வாழ்ந்த நமக்கு (எனக்கு )
    இன்றைய மாணவர்களின் ரோஷமும்
    பெற்றோரின் அதீதப் பாசமும்
    கவலையளிப்பதாகத்தான் உள்ளது
    சிந்தனையைப் பால்யத்திற்கு நகர்த்திய
    பதிவு தந்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. //கன்னத்தை கிள்ளி செல்லமாய் முத்தமிடுவார்கள்.இன்னும் அவரின் முகமும் முத்தமும் அன்பும் நினைவில் இருக்கிறது.//

    ம்ம்ம்ம்.... நீங்க இன்னும் அந்த டீச்சரை மறக்கலை...

    ReplyDelete
    Replies
    1. எப்படியப்பா மறப்பது.இன்னும் நீங்க ஸ்கூல் பையன்தானே ?தெரியாது

      Delete
  3. //இன்று மாணவர்கள் மனதளவில் பாதிக்கும் தண்டனைகளே ஆசிரியர்கள் கொடுக்கும் அதிகபட்ச தண்டனைகளாய் இருக்கிறது.இது மாணவர்களை விரக்தியின் உச்சத்திற்கு கொண்டுபோய் தற்கொலைகள் செய்யும் அளவுக்கு அல்லது அவமானப்படுத்தி அனைவரின்முன் நிற்குமளவுக்கு இன்றைய கல்வித்தரம் கடுமையாய் இருக்கிறது.//

    சரியாகச் சொன்னீர்கள்....

    எனக்கு இந்தப் பதிவு மிகவும் பிடித்திருக்கிறது, கவிதைகளினூடே அவ்வப்போது இம்மாதிரியான சமூக விழிப்புணர்வு கட்டுரைகளையும் எழுதலாமே....

    த.ம.2

    ReplyDelete
  4. மாற்றம் வேண்டும்... எல்லா இடத்திலும்...!

    ReplyDelete
    Replies
    1. ஆம். அவசியம் மாற்றம் வேண்டும்

      Delete
  5. சில டீச்சர்களின் அன்பு வாழ்வில் என்றும் மறக்க முடியாது இல்லையா ?

    ReplyDelete
  6. விவரித்த விதம் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி தொடர்ந்து வாங்க

      Delete
  7. பெயரே ஈஸ்டர் நேசம் ,அவர் அனைவரையும் நேசித்தே இருப்பார் ..உங்கள் நேசமும் மாறாதது மகிழ்ச்சிக்குரியது !

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் வருகைக்கும் நன்றி

      Delete
  8. என்றும் மாணவர்களின் நினைவிலிருக்கும் வண்ணம் படிப்போடு பாசத்தையும் தந்த ஆசிரியைக்கு என் வந்தனம். நான் படித்தபோதும் எனக்கிருந்த நல்லாசிரியர்கள் பலரையும் நன்றியோடு நினைத்துக்கொள்கிறேன். பக்தியோடு பாசமும் கொண்டாடிய தருணங்கள் அவை. நெகிழவைக்கும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  9. ஆசிரியர்களும் மாணவர்களும் புரிந்துணர்வோடு நடக்க வேண்டும் .
    அதிக கண்டிப்பினையும் தளர்த்த வேண்டும் .அதிலும் முகம் பார்த்து
    செயற் படுவது முற்றிலும் தவிர்க்க வேண்டும் .மாணவர்களின் மன
    வளர்ச்சிக்கும் நல்ல செயற்பாட்டிக்கும் ஆசிரியர்களே முன்னுதாரணம்
    அவர்கள் முறையாகச் செயற்படாது போனால் அந்த மாணவர்களின்
    எதிர்காலம் நிட்சயம் கேள்விக் குறியாகவே அமையும் .சிறப்பான
    படைப்பிற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா .

    ReplyDelete
  10. ஆசிரியர்கள் கற்பித்தலில் அறிவுடன் அன்பும் சேர்ந்தே இருக்கவேண்டும். இன்னும் பாரபட்சம் பார்த்தலும் தவிர்ப்பது மேன்மையே..
    சிந்தனைக்குரிய ந்ல்ல ஆக்கம் சகோ!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. உங்கள் பகிர்வு எனக்கு கற்பித்த ஆசிரியர்களையும் நினைவில் கொண்டு வந்தது.

    அன்பான வழிநடத்தல் அவசியம்.

    ReplyDelete
  12. நல்லதொரு ஆசிரியரை நன்றி கூறி சிறப்பித்தமை நன்று!

    ReplyDelete
  13. அவரவர் ஆசிரியர்களை நினைவுப்படுத்தும் பதிவை தந்தமைக்கு நன்றிகள் அய்யா. இன்றைய சூழலில் தண்டனைகள் அதிகம் இல்லை, படிப்பின் மீது ஆர்வமும், குரு பக்தியும் மாணவரகளிடம் அன்று போல் இல்லை என்பது என் கருத்து. கட்டாயக் கல்விச் சட்டத்தின் படி மாணவர்களை அடித்தாலோ, அவர்களின் மனம் பாதிக்கும்படி ஆசிரியர்கள் நடந்து கொண்டாலோ அது தண்டனைக்குரிய குற்றம். ஆதலால் ஆசிரியர் தான் அச்சத்தில் காலம் ஓட்டுகிறார்கள் என்பதே உண்மை, மாணவர்கள் அல்ல என்பதையும் ஒரு ஆசிரியனாக பதிய வேண்டியது என் கடமை. அதே சமயம் ஆசிரியர்களும் அன்புள்ளம் கொண்டவராக, மாணவர்களின் மனங்களில் வாழ்பவராக, பாரபட்சம் காட்டாதவராக இருக்க வேண்டும் என்ற உணர்வை தங்கள் வரிகள் ஆழமாக அழுத்திச் சொல்லி ஞாபகப்படுத்துகிறது. பகிர்வுக்கு நன்றி அய்யா.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாதமும் சரிதான்.வருகைக்கும் நன்றி

      Delete
  14. கட்டுரையிலும் உங்கள் திறனைக் காட்ட முற்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. இன்றைக்கு மாணவர்களை விட ஆசிரியர்கள் தாம் அச்சத்துடன் இருக்கிறார்கள். சென்னைப் பள்ளியொன்றில் வகுப்பறையில் ஓர் ஆசிரியை மாணவனால் கொல்லப்பட்டு ஓராண்டு தானே ஆகிறது! இதற்கெல்லாம் காரணம், பெற்றோர்கள் பொறுப்புணர்விலிருந்து விலகிவிட்டது தான். பள்ளியில் சேர்ப்பதோடு தம் கடமை முடிந்துவிட்டதாய்க் கருதும் பெற்றோர்கள் தாம் ஒட்டு மொத்தக் கல்வித்துறைக்கும் இழுக்கு ஏற்படுத்துகிறார்கள். –கவிஞர் இராய. செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னையிலிருந்து.

    ReplyDelete
    Replies
    1. அதுவும் விரக்தியின் உச்சம்தான் .வருகைக்கும் நன்றி

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more