தெய்வங்கள்

தெய்வங்கள்

மனிதம் போற்றி வாழுங்களேன்

இனமே தமிழன் என்றுரைத்து
எதிலும் சேர்ந்தே முடிவெடுத்துப்
பணமோ மதமோ பாராமல்-நட்பை
போற்றி தினமே வாழுங்களேன்

அண்ணன் தம்பி உறவுகளாய்
அனைவரும் கூடி வாழ்வதனால்
திண்ணைதோறும் நட்புறவாய்-அன்பை
தினமும் போற்றி மகிழ்ந்திடலாம்

உறவை மறுத்து வாழ்வதனால்
உயர்வும் மகிழ்வும் தடையாகும்
பிரிவைப் போற்றி வாழாமல்-ஒன்றிப்
பிணைந்தே  மகிழ்ந்தே வாழுங்கள்

மகிழ்ச்சியின் தத்துவம் புரியுமே
மனித நேயம் தெரியுமே
மக்கள் மனதை அறியுமே-உறவை
மானிடம் போற்றி மகிழுமே

சாதியும் மதமும் சொல்கிறது
சரிசமம் உயிரென உயர்வாக
நீதிக் கதைகளும் இதிகாசம்-எங்கும்
நித்தம் சொல்வதும் இதைத்தானே

மனித நேயம் வேண்டாமென
மதமும் எங்கும்  சொன்னதில்லை
மனிதனாக வாழ்வதற்கு  -நீங்களும்
மனிதம் போற்றி வாழுங்களேன்


Comments

  1. சிறப்பு....!



    வாழ்த்துக்கள் ஐயா....

    ReplyDelete
  2. மனித நேயம் வேண்டாமென
    மதமும் எங்கும் சொன்னதில்லை
    மனிதனாக வாழ்வதற்கு -நீங்களும்
    மனிதம் போற்றி வாழுங்களேன்

    சரியாகச் சொன்னீர்கள்
    வாழ்த்துக்கள்//


    ReplyDelete
    Replies
    1. எல்லோருமே மனிதம் போற்றினால் எதற்கு சண்டையும் சச்சரவும்

      Delete
  3. தன்னம்பிக்கையோடு எழுதுங்கள். அப்படி இருந்தால் "இகழ்ச்சியாய் கருதிடாமல்" என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருக்காது.நோக்கமும், கருத்தும் மிகச் சரியாகவே இருக்கின்றன. பின் ஏன் இந்தத் தயக்கம் ?
    "திண்ணை தோறும் நட்புறவாய்" என்றுதானே இருக்க வேண்டும் ?

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்வதும் சரிதான்

      Delete
  4. உங்கள் கருத்து ...' மனிதனாக வாழ்ந்திட வேண்டும் ,மனதில் வையடா' ங்கிற பட்டுக் கோட்டையாரின் வரிகளை நினைவுபடுத்தியது !

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க .எல்லோரும் பெரும்பாலானவங்க இதைத்தானே விரும்புவாங்க

      Delete
  5. நன்றிங்க சார்

    ReplyDelete
  6. மனிதம் வாழ மனிதம் போற்றி வாழ்வது மிகமிக அவசியமே.

    மனிதாபிமானத்துடன் எழுதிய பதிவு.

    ReplyDelete
    Replies
    1. எல்லோருக்குமே மனிதநேயம் பற்றிய அக்கறை இருந்தால் நன்று

      Delete
  7. வணக்கம்
    மனிதம் போற்றி வாழுங்களேன் பற்றி எழுதிய கவிதை மிக அருமை வாழ்த்துக்கள் அண்ணா.ஒவ்வொரு வார்தையும் நன்றாக உள்ளது
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. மனிதம் போற்றுவோம்
    மனிதம் போற்றுவோம்
    அருமை ஐயா

    ReplyDelete
  9. மனிதம் போற்றுகவென
    மகத்தான கவி சொன்னீர்கள்!

    அருமை!வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

      Delete
  10. கவிதை அருமை.
    வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
  11. தற்போதைய சூழலுக்கு ஏற்ற
    அழகானதொரு கவிதை !

    ReplyDelete
    Replies
    1. இன்று எல்லாமே தள்ளிசெல்கிறது

      Delete
  12. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  13. சாதியை வீட்டில் வை. மதத்தை மனதில் வை. அன்பு என்பதை மட்டும் அனைவருக்கும் காட்டு... எனும் வரிகளை ஞாபக படுத்தியது தங்களது கவிதை. மனிதம் போற்றுவோம் எனும் கவிதையால் மக்கள் மனதில் மாற்றம் ஏற்படட்டும். பகிர்வுக்கு நன்றி அய்யா.

    ReplyDelete
    Replies
    1. சரியாச்சொன்னீங்க பாண்டியன்.மாற்றம் வேண்டும் எல்லோர் மனதிலும்

      Delete
  14. பதிவர் சந்திப்பின்போது பேச நேரமின்றி பிசியாக இருந்தீகள் வாழ்த்துக்கள் கவிதை நன்று.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே.நாம் இனிமேல் பேசுவோம் நீங்களும் பிசியாகத்தானே இருந்தும் பங்குகொண்டமைக்கு வாழ்த்துக்கள்

      Delete
  15. சாதியும் மதமும் சொல்கிறது
    சரிசமம் உயிரென உயர்வாக...//

    இந்த இருவரிகள் மொத்த கவிதையையுமே ஒளிர்விக்கின்றன..

    சாதியும் மதமும் மட்டும் நம் நாட்டிலிருந்து விரட்டப்பட்டால் எத்தனை சுகமாக இருக்கும்!

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் நண்பரே ஆங்கிலேயனுக்கு முன்பு இப்படி இருக்கவில்லை.ஆமாம் போடும் கூட்டமே இவ்வாறு ஏற்றத்தாழ்வு பார்க்கிறது.அதனால்தான் அவனே ஓடிவிட்டான்

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more