தெய்வங்கள்

தெய்வங்கள்

நேர்மை வழியில் வாழ்ந்திடலாம்

பாம்பும் தேளும் பூரானும்
பயந்தே ஓடி மறைந்திடுமாம்
பகைத்தே நாமும் அடித்தாலே
பாய்ந்தே நம்மைக் கடித்திடுமாம்

வீம்பாய்க் காளையை மிரட்டினால்
விரைந்தே வந்து முட்டுமாம்
வீணாய் நிலத்தைப் போட்டாலே
விளையும் நிலமும் கெட்டிடுமாம்

வேண்டா வெறுப்பாய் பழகினாலே
வேற்றுமை வந்தே பிரிக்குமாம்
விசயம் இன்றி வாதிட்டாலே
வீணே சண்டை வந்திடுமாம்

ஈன்ற பொருளைக் காத்தாலே
இறுதி நாட்கள் மகிழ்ந்திடுமாம்
இல்லை என்றே சொல்லாமல்
இருப்பதைக் கொடுத்தல் நலமாகும்

எதிலும் பொறுமை இருந்தாலே
எல்லா நலமும் கிடைக்குமாம்
எளிதில் உணர்ச்சியில் தவறிழைத்தால்
எதிராய்க் காரியம் கெடுக்குமாம்

பாசம் கொண்டே பழகுங்கள்
பகைமை எண்ணம் தவிருங்கள்
நேசம் ஒன்றே ஒற்றுமையாய்
நேர்மை வழியில் வாழ்ந்திடலாம்


********கவியாழி*******



Comments

  1. பாசம் காட்டினால் பகைவனும் பணிவான்
    வேசம் காட்டினால் நண்பனும் மோசம் செய்வான்
    நேசம் காட்டி தேசம் காப்போம் அய்யா.
    காலை வணக்கம்...

    ReplyDelete
  2. பாசம் கொண்டே பழகுங்கள்
    பகைமை எண்ணம் தவிருங்கள்
    நேசம் ஒன்றே ஒற்றுமையாய்
    நேர்மை வழியில் வாழ்ந்திடலாம்

    வாழ்க்கை பாடம்..!

    ReplyDelete
  3. உண்மைகள் + நல்ல கருத்துக்கள்... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  4. எதிலும் பொறுமை இருந்தாலே
    எல்லா நலமும் கிடைக்குமாம்
    எளிதில் உணர்ச்சியில் தவறிழைத்தால்
    எதிராய் காரியம் கெடுக்குமாம்
    நல்ல கருத்து

    ReplyDelete
  5. ஒவ்வொரு வரியும் உண்மை..கடைபிடித்தால் நன்மை ..கவிதை அருமை!
    நன்றி ஐயா

    ReplyDelete
  6. ''..பாசம் கொண்டே பழகுங்கள்
    பகைமை எண்ணம் தவிருங்கள்...
    Eniya vaalththu.
    Vetha. Elangathilakam,

    ReplyDelete

  7. பாசம் கொண்டே பழகுங்கள்
    பகைமை எண்ணம் தவிருங்கள்
    நேசம் ஒன்றே ஒற்றுமையாய்
    நேர்மை வழியில் வாழ்ந்திடலாம்

    எளிமையாகச் சொல்லப்பட்ட
    அற்புதமான வரிகள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. அழகிய கருத்தை மிக அழகாக சுமந்து வரும் வரிகள், எனது வணக்கங்களும் பாராட்டுக்களும்.

    ReplyDelete
  9. // எதிலும் பொறுமை இருந்தாலே
    எல்லா நலமும் கிடைக்குமாம்//
    அழகிய வரிகள்!

    ReplyDelete
  10. வணக்கம் சகோதரரே..
    வழக்கம் போல் அசத்தி விட்டீர்கள். அத்தனையும் மறுக்காமல் ஏற்றுக்கொள்கிறேன் ஏனெனில் அத்தனையும் உண்மைகள். பகிர்வுக்கு நன்றீங்க சகோதரரே.. (வழக்கமான கவி வடிவத்தை தொடர்ந்தும் கொஞ்சம் அப்பப்ப மாற்றி கொஞ்சம் புதுமையாய் தர முயற்சி செய்து பாருங்களேன் சகோதரரே. இது எனது அன்பு வேண்டுதல் தவறாக நினைக்க வேண்டாம்)

    ReplyDelete
  11. பாசம் கொண்டே பழகுங்கள்
    பகைமை எண்ணம் தவிருங்கள்
    நேசம் ஒன்றே ஒற்றுமையாய்
    நேர்மை வழியில் வாழ்ந்திடலாம்// அர்த்தமுள்ள வரிகள்

    ReplyDelete
  12. குழந்தைகளுக்கு பாடிக்காட்ட வேண்டிய கவிதைகள் ...

    இப்படி செய்தால் காலத்தை வென்று நிற்கும்
    அவ்வைக் கிழவியின் பாடல்களைப் போல...

    ReplyDelete
  13. //பாசம் கொண்டே பழகுங்கள்
    பகைமை எண்ணம் தவிருங்கள்//

    சரியான எண்ணம்..... தொடரட்டும் கவிதைகள்.....

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more