மழையும் பெய்யவில்லை அதனால் .....
அருகருகே அதிக வீடுகளால்
அன்றாடக் காற்றும் மறைக்குது
ஆளாளுக்கு மின்சார பயன்பாட்டால்
அதற்காகப் பணமும் கரையுது
மழையும் பெய்யவில்லை அதனால்
மரங்களில் பச்சை செழுமையில்லை
மதிய வேளையிலே எல்லோருக்கும்
மறுபடித் தூங்கவேத் தயக்கமில்லை
ஏழையும் மனதால் வருந்தி
எங்குமே செல்ல இயலவில்லை
ஏர்பிடிக்க ஆசை இருந்தும்
ஏரித்தண்ணிர்ப் பாய்ச்சலில்லை
எப்போது மழை வருமோ
எல்லோரின் மனம் மகிழுமோ
தப்பாக மரம் வெட்டியதால்
தண்டனை இப்போதே உள்ளது
இப்போதே எல்லோரும் யோசியுங்கள்
இருக்கிற இடத்தில் மரங்களை
இரண்டிரண்டு நட்டு வளருங்கள்
இதையே எல்லோருமே சொல்லுங்கள்
எல்லோரும் நன்றாக யோசித்தால்
எதிர்காலம் சிறப்பாய் இருக்கும்
சொல்லாலே நில்லாமல் செயலில்
செய்தாலே மழையும் வருமே
----கவியாழி
மழை மட்டுமல்ல... இங்கு மின்'சாராமும்' சரிவரயில்லை...
ReplyDeleteFrom Friend's LT
நீங்க ரொம்ப தைரியசாலி தனபாலன்.
Deleteரொம்ப வலிக்கும் வரிகள்
ReplyDelete// ஏர்பிடிக்க ஆசை இருந்தும்
ஏரித்தண்ணிர்ப் பாய்ச்சலில்லை//
குழந்தைகளுடன் பகிர்ந்தேன்..(வகுப்பில்)
நன்றிங்க நண்பரே இனியும் இதுபோலவே எழுதுவேன்
Deleteகேள்வியும் நாமே பதிலும் நானே...
ReplyDeleteகேள்விகள் கேட்பதை விடுத்து தீர்வை தீர்மானித்தால் எல்லாம் நலமே....
அழகிய கவிதை...
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்
எல்லோருமே இதைச் செய்வோம்
Deleteஇங்கு பெங்களூரில் மாலை நாளை
ReplyDeleteமணியிலிருந்தே குளிர் வாட்டுகிறது
ஒவ்வொரு இடத்திலும்
ஒவ்வொரு விதமானப் பிரச்சனை
உங்களைப் போல் எங்களால் அதைச்
சரியாகச் சொல்லத் தெரியவில்லை
பகிர்வுக்கு தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
தங்களின் வருகை என்னை உற்சாகப்படுத்துகிறது .வாழ்த்துக்கு நன்றிங்க
Delete"இருக்கிற இடத்தில் மரங்களை
ReplyDeleteஇரண்டிரண்டு நட்டு வளருங்கள்" என்ற
மதியுரையை வரவேற்கிறேன்.
தங்களின் வருகைக்கும் வரவேற்ப்புக்கும் நன்றிங்க
Deleteஎப்போது மழை வருமோ
ReplyDeleteஎல்லோரின் மனம் மகிழுமோ
எல்லோரும் நன்றாக யோசித்தால்
எதிர்காலம் சிறப்பாய் இருக்கும்
சொல்லாலே நில்லாமல் செயலில்
செய்தாலே மழையும் வருமே
மனம் மகிழ மழை வரட்டும்..!
தங்கள் வருகையைப்போல் மழையும் நன்கே வரட்டும்
Deleteஉண்மைதான் மரங்களை வெட்டிவிட்டு மழையை குறை சொல்லி பயனில்லை! மரங்களை நடுவோம் மழைபெறுவோம்! நன்றி!
ReplyDeleteஆம்.சுரேஷ் இப்போதே செய்தால் எப்போதும் மனித இனம் வாழும்
Deleteஇயற்கையும் பொய்க்கின்றது
ReplyDeleteஇடர் மிகுந்தோர் செயல்களால்...
வருத்தமும் ஆதங்கமுமான கவிவரிகள்!
சிறந்த சிந்தனை! வாழ்த்துக்கள் சகோ!
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க சகோ
Deleteமரம் நடுவோம் .மழை பெறுவோம்.என்பதை அழகிய கவிதையாக்கி விட்டீர்கள்.நன்றி.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் நன்றிங்கம்மா
Deleteகவிஞர் கவிதை எழுதிய நேரம் இங்கு மழை தொடங்கி விட்டது.
ReplyDeleteஅப்படிங்களா மிக்க மகிழ்ச்சியே,தங்களின் வரவைப்போல.நன்றிங்க
Deleteமரம் இருக்கும் வரைதான்
ReplyDeleteமனிதன் இருப்பான்
இதை அறியாது
உணராது
செயல்படுபோர்
இனியாவது திருந்தவேண்டும்
மரம் நடவேண்டும்
அருமை ஐயா
உண்மைதான் .நன்றிங்க ஜெயக்குமார் அவர்களே.
Deleteகவிதை அருமையாக உள்ளது...
ReplyDeleteநன்றிங்க பாமரன் அவர்களே
Deleteநல்ல சிந்தனை..... எதிர்காலத்திற்காவது பலன் தர மரம் நடுவோம்!
ReplyDelete