ஆவியோ பேயோ அலையுது
ஆவியோ பேயோ அலையுது
ஆனந்த ஆட்டமும் ஆடுது
அடிக்கடி இப்படிக் காண்பதால்
ஆங்கிலப் படம்போல் தோணுது
அருகில் யாரோ இருப்பதுபோல்
அடிக்கடி எனக்கும் தோணுது
அணைக்கவும் துடித்து வருது
அப்படியே என்னுள் அடங்குது
ராத்திரி நேரத்தில் நடக்குது
நடப்பதால் பயத்தில் குளிருது
நாட்களும் தொடர்ந்தே வருகுது
நம்பிக்கை இன்றி இருக்குது
ஆண்டவன் நம்பிக்கை வீணாகி
ஆனந்தம் கொடுக்க மறுக்குது
ஆனாலும் தொடர்ந்து மிரட்டுது
அதனால் மனமும் கலங்குது
இன்பமாய்ச் சிலநாள் இருக்குது
இனிமைச் சுகமும் கொடுக்குது
இருந்தும் மனதும் நடுங்குது
இனிய தருணத்தை மறைக்குது
துடிப்பும் தொடருது தூண்டுது
தொடங்கியே ஆனந்தம் கிடைக்குது
துவளுது தூங்கிட நினைக்குது
தூங்கியும் உடம்பும் நடுங்குது
கடவுளும் இல்லை தடுக்கவும்
கடந்தும் மனதை வதைப்பதை
கண்ட மருத்துவம் உள்ளதாய்
காட்சிகள் உண்டா நண்பர்களே
கனவும் இதுவே என்பதும்
கண்டவர் என்போல் உள்ளதை
கதையை பலபேர் சொல்வதை
கவிதை வடிவில் கொடுத்திட்டேன்
நல்லாத்தான் இருக்குது ஐயா.... வாழ்த்துக்கள்...
ReplyDeleteகற்பனை வளமும் காசுபணமும் உள்ளவர்களைத்தான் பேய்பிசாசுகள் அண்டும் என்று எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது. அதிகம் தொல்லை தந்தால் செங்கற்பட்டில் சில மந்திரவாதிகள் இருக்கிறார்களாம். அனுப்புங்கள் அந்த நண்பர்களை!.
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteகொடுத்த கவிதை நல்லாதான் இருக்கு
ReplyDeleteநன்றிங்க ராஜி
Delete//ஆவியோ பேயோ அலையுது
ReplyDeleteஆனந்த ஆட்டமும் ஆடுது//
யாரையோ திட்டி எழுதியிருக்கிற மாதிரி தெரியுதே, தலைவரே?
பாவம் உங்க ஆட்டம்தான் குறைசுடிச்சே
Deleteஇங்கும் கனவா?
ReplyDeleteஅப்படியும் சொல்லலாம்
Deleteமூளின்னா மூக்கை தொட்டு பார்த்துக்குவானாம் .நீங்கள் ஆவி என்றால் கோவை ஆவி ஏன் மூக்கு ...?
ReplyDeleteத.ம +1
முதல் வரி மட்டுமல்லவே, இரண்டாம் வரி கூட ஏதோ சொல்வது போல இருக்கிறதே ;-)
Deleteபகவானே உங்க கேள்வி சரிதான்
Deleteமிக அருமை!
ReplyDeleteம்.. நல்ல கற்பனை!
ReplyDeleteகற்பனைக் கனவுதானே..:)
வாழ்த்துக்கள் சகோ!
பேய்களை காணவேண்டின் இலங்கை வாருங்கள்.இங்கே பேய்கள் தான் ஆட்சி செய்கிறன.
ReplyDeleteஅப்படியா .நிலைமை மாறட்டும்
Deleteஏதோ மோகினிப் பிசாசு பிடிச்சிருக்குது!
ReplyDeleteதங்களின் வருகைக்கு நன்றி
Deleteஅருமையாக எழுதியுள்ளீர்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅருமை அய்யா...
ReplyDeleteஆவி கனவா! சரி சரி! :)
ReplyDeleteகற்பனைதான் நண்பரே
Deleteஅடடே ஆவி பற்றிய க'விதையா'... அருமை அருமை
ReplyDeleteஆமா கவியாழியே வர வர இந்த ஆவிங்களோட ஆனந்தத் தொல்லை தாங்க முடியல..
ஆவித் தொல்லையை வார்த்தைகளில் வார்த்தெடுத்த விதம் அருமையோ அருமை
கண்ணதாசன் ஆவியையும் விட்டு வைக்கவில்லை. ஆவி பறக்கட்டும்
ReplyDeleteமனிதர்க்கு மட்டுமல்ல
ReplyDeleteஆவிக்கும்
ஓர் அழ்கிய கவிதை
நன்றி ஐயா
ஆம். அதுவும் வாழ்ந்து போகட்டுமே
Delete