தெய்வங்கள்

தெய்வங்கள்

அம்மா வருவாயா ?



உயிர் பிடித்து உடல் கொடுத்து
உள்ளத்தில் நல் அன்பை விதைத்து
நல்பிள்ளையாய் நாளும் வளர்த்து-என்னை
செல்லமாய்  நன்கு  சீராட்டி வளர்த்தவளே

அப்பனை அடையாளம் காட்டி எனக்கு
அன்பையும் பண்பையும் ஊட்டி வளர்த்து
அண்ணன் தம்பி  உறவுகளும் சொல்லி-உரிமைக்கு
அக்கா தங்கை கடமைகளும் போதித்தாய்

கதைசொல்லி தூங்க வைப்பாய்
கருத்துக்களை பேசவைப்பாய் நாளும்
காண்பவர் எல்லோரின் உறவு சொல்வாய்-விழித்ததும்
கண்டவரின்  கண்படுமென பொட்டு வைப்பாய்

தான் உணவு உண்ண மறந்தாலும்
நான்  தூங்க தாலாட்டு சொன்னவளே
ஏனென்ற கேள்வி இன்றி எதிலும்-தப்பின்றி
எந்நாளும் என்னுள் அன்பை சேர்த்தவளே

கள்ளமில்லா அன்பை  கனிவுடன் தந்தவளே
கருவாக  என்னை உருவாக்கி சுமந்தவளே
பெரிதாக  அன்பும்  குடும்ப நெறியும்-குறைவின்றி
உருவாக்கி வளர்த்தவளே உலகை உணர்தியவளே
 
சொல்லோர்கள் தப்பாய் என்னை  சொன்னாலும்
எல்லோரையும் பதில்  எச்சரித்து அனுப்பிடுவாய்
செல்லமாக செய்யாதே என கண்கலங்குவாய்-யாரின்று
மெல்ல புரியவைத்து  மேனியை தட்டுவார்கள்

என்னால் எழுத முடியவில்லை உருவாய்
எதிரில் நீயே நிற்பதுபோல்எண்ணுகிறேன்
சொன்னால் வார்த்தையில் அடங்காது-இறந்த
சோகம்  என்னில் மறவாது  தீராது

பின்நாளில்  உன் அன்பை யாரும் தருவாரோ
பெறுவேனோ இல்லை பித்தனாகி விடுவேனோ
 புதுவாழ்வு கிடைக்காதோ  புரியாமல் -தவிக்கின்றேன்
தெரியாமல் இன்னும் தினமும் அழுகின்றேன்

மறுவாழ்வு கிடைக்காதோ  உனக்கு-மீண்டும்
மகனாக பிறப்பேனோ மறுபிறவியாவேனோ
என்நாளை அறிவேனா உன்னிடம் வருவதற்கு-இல்லை
எனைத்தேடி  வருவாயோ என்னுயிரை பெறுவதற்கு

கண்ணீர் என்னை கம்மச் செய்கிறது
கண்கள் சிவந்து குளமாய் மாறுவதை
 உன்னால் பார்த்துப் பொறுப்பாயா  இல்லை -என்
 உயிரை உன்னுள் எடுத்து  செல்வாயா 

Comments

  1. நன்றி ஐயா

    நேற்று எனது அம்மாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அதற்காக எழுதியிருந்தேன்

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more