மதமின்றி மனிதனாக முடியுமா
01.12.12 அன்று எழுதியதின் மறுப் பதிவு
மீண்டும் அந்தநாள் வருமா
மேகமெல்லாம் கூடி மழை தருமா
ஆற்றில் நீர் பெருக்கெடுத்து-அருகருகே
அங்கங்கே ஏரி குளம் நிறையுமா
மீனும் தவளையும் துள்ளி விளையாடி
மீண்டும் நீரில் மகிழ்ந்து செல்லுமா
பாம்பும் தேளும் பணிந்துபோய்-அன்பாக
பார்ப்போரை வணங்கி திரும்புமா
மாடும் கன்றும் பச்சை தழையை
மீண்டும் மீண்டும் புசியுமா
ஆடு கோழி அனைத்து உயிரும்-அங்கங்கே
ஆனந்தமாய் உணவு பெறுமா
கோள்கள் ஒன்பதும் கூடி மக்கள்
குறை தீர்க்க நாடி வருமா
கூப்பிட்டதும் கடவுளும் நமக்கு-வாழ
குறையில்லா அருள் தருமா
சுத்தமான காற்றும் சுவையான நீரும்
எத்திசையும் பசுமையான செடிகொடியும்
எழுந்தோடும் பறவை கூட்டமும்-வருமா
எண்ணில்லாப் பூச்சி புழுவும் காணுமா
தேன் வண்டு திரிந்தோடி பறந்து
வானெங்கும் வாசம் வீசும் மலர்கள்
நாம் உண்ணும காய் கனிகள்-சுத்தமாக
நாள்தோறும் கிடைக்க முடியுமா
மாண்டோர் வாழ்ந்த மகிழ்ச்சியான
மனிதநேயம் மக்களிடம் திரும்புமா
மனத்தாங்கல் இன்றி ஒற்றுமையாய்
மதமின்றி மனிதனாக முடியுமா
தங்கள் கேள்விகளை மறுக்க முடியுமா ! ?
ReplyDeleteஉங்களைப்போல எல்லோரும் விரும்புவது ,மனித நேயம் மறக்க முடியுமா
Deleteமதம் பிடித்தவர்களுக்கு - மதம்பிடித்திருக்கிறது
ReplyDeleteஅதனால் அவர்களுக்கு மனிதம் பிடிப்பதில்லை.
வருகைக்கு நன்றி,உண்மை மனிதம் இருந்தால் மதமும் தேவையில்லை
Deleteமனிதர் நினைத்தால் முடியும்...
ReplyDeleteஆனால் மதத்தை மறக்கும் மனிதர் தற்போது இல்லாமல் இருப்பது அவலமே...
உண்மை,மனிதம் என்பதை உணர்ந்தால் நன்று
Deleteதங்களின் வருகைக்கு நன்றி
அர்த்த முள்ள கேள்விகள். உணருவார் யாரோ ?
ReplyDeleteவருகைக்கு நன்றி,நமக்கு அந்த கடமை உள்ளதென்று நினைக்கிறேன்
Deleteயாராக இருந்தாலும் மனிதனாக மதிக்க வேண்டும்... (முதலில் நம் மனதையும், உடல்நலத்தையும்)
ReplyDeleteமனிதனை மதித்தால் மனிதனாக முடியும் உண்மை நண்பரே
Delete"மதமின்றிப் " நிச்சயம்போனால்
ReplyDeleteநிச்சயம் விலங்கான மனிதன்
மனிதனாகிப்போவான்
அருமையான உயர்வான சிந்தனை
தொடர வாழ்த்துக்கள்
மனதை மதமாக்காமல் இருந்தால் சாதி மத சண்டை வராது
Deleteமாண்டோர் வாழ்ந்த மகிழ்ச்சியான
ReplyDeleteமனிதநேயம் மக்களிடம் திரும்புமா
மனத்தாங்கல் இன்றி ஒற்றுமையாய்
மதமின்றி மனிதனாக முடியுமா
ஆஹா மிகவும் அற்புதமான வரிகள்
நன்றி தொடர்ந்து படியுங்கள்
Deleteமதம் என்பது மக்களை மயக்கும் போதைபொருள்
ReplyDeleteஇதை உணர்ந்தால் மட்டுமே மனிதனாக முடியும்
அதை உணர்வது கூட கடினம்
மனதை மதமாக்காமல் இருந்தால் சாதி மத சண்டை வராது
Deleteமனிதநேயம் மக்களிடம் திரும்புமா
ReplyDeleteமனத்தாங்கல் இன்றி ஒற்றுமையாய்
மதமின்றி மனிதனாக முடியுமா
மதசகிப்புத்தன்மை மனதில் மலர்ந்தால் சாத்தியமே ..!