மலிவான மனசாட்சி
நடுஇரவில் நண்பர்களோடு சினிமா பார்த்து விட்டு நண்பர்களுன் பயணித்த 23 வயது மாணவியை கதறக்கதற கற்பழித்த குற்றவாளிகளை டெல்லி போலீஸ் கைது செய்தது .-செய்தி
(குற்றவாளி : மாணவியா? அவரின் பெற்றோரா? நண்பர்களா? குற்றவாளிகளா? அரசாங்கமா?சமூகமா?)
""""""""""""""""""""
மலிவாக மனசாட்சி மறைந்து கிடக்க
மக்களும் எதையெதையோ தேடி சேர்க்க
புத்தகம் போதனை சொல்லி இருந்தும்-புத்தியின்றி
புலப்படுதே பெண்ணினம் இன்னும் வதைபடுதே
பணம் வேண்டி பலதவறும் பாவிகளை
பண்கெட்டு கேடுகளை செய்ய தூண்டி
குணம் கெட்டு குலநாசம் செய்யுதே - மனதில்
குடிகொள்ளுதே குற்றமாய் பிழை செய்யுதே
சிறுபிள்ளை வாழ்வுதனை சூறையாடி
செய்கின்ற தவறுகள் தொடர்கின்றதே
சிற்றூரும் பேரூரும் சரிசமமாய் -நெறிகெட்டு
சிற்றின்ப வாழ்க்கைக்கு துணை போகுதே
படிப்பிருந்தும் பாவி மக்கள் பயணிப்பதே
பகல் பொழுதை தாண்டியும் தொடர்கின்றதே
தடைசெய்த பழக்கங்கள் தவறாக தொடர்ந்து -தன்மானம்
விடைபெற்று நெறிகெட்டு செயல்படுதே
மனச்சாட்சி உறங்கும்போதுதானே மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது?!
ReplyDeleteஎல்லா நேரங்களிலும்? வருத்தப்படவேண்டியது
ReplyDelete''...தடைசெய்த பழக்கங்கள் தவறாக தொடர்ந்து -தன்மானம்
ReplyDeleteவிடைபெற்று நெறிகெட்டு செயல்படுதே..''
மக்கள் தான் விழிப்புடன் நடக்க வேண்டும்.
நன்று.
வேதா. இலங்காதிலகம்.
திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதுபோல் அவரவகலாகவே திருந்த வேண்டும்
Deleteஅழகான கவிதை.....
ReplyDeleteநான் குற்றவாளிகளாக பெற்றோர்களையே சொல்லுவேன்...
சமூகத்தில் பல வக்கிரகுணங்கொண்டவர்களும் இருக்கிறார்கள். பல வகையான மனிதர்களை உள்ளடக்கியதுதான் சமூகம் ஆகவே இப்படியான சமூகத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சிறுவயது முதலே பிள்ளைகளுக்கு போதிக்க வேண்டும்...
அதனையும் தாண்டி தன்னுடைய கற்பினில் ஒரு பெண் மிக அவதானமாக இருப்பதும் அவசியம்
உண்மை அதைத்தான் ஒவ்வொருவாரும் அறிவுறுத்த வேண்டும்
Delete
ReplyDeleteவணக்கம்!
கொடிய செயலைக் கொளுத்தும் கவிதை!
விடியுமா வாழ்க்கை விரைந்து!
அதிக சுதந்திரம் ஆபத்து என்பதை மகளிர் புரிந்துகொள்ள வேண்டும்
ReplyDelete//சிற்றூரும் பேரூரும் சரிசமமாய் -நெறிகெட்டு
ReplyDeleteசிற்றின்ப வாழ்க்கைக்கு துணை போகுதே//
உண்மையான வரிகள்.ஏன் இப்படி ஒரு சிலர் இருக்கிறார்கள்?பதில் கிடைக்காத கேள்வியாக இருக்கிறது.
ஆடம்பரத்தின் பரிணாம வளர்ச்சி ? அதிக சுதந்திரம் ஆபத்துதான் எல்லோரும் புரிந்து கொண்டால் இப்படி நடக்காது
Deleteநாகரீகமென்கிற பெயரில் கட்டுக்கடங்காமல் சிலர்.அது ஆணா பெண்ணா.....அனுபவப்பாடங்கள் ...வரும் தலைமுறையினருக்காவது படிப்பினையாகட்டும் !
ReplyDeleteஉண்மை ,நேற்றைய பேட்டியில் அந்த படுபாவிகள் சொல்லுகிறார்கள் இரவு நேரத்தில் இப்படி தனியாக காதல் என்ற பெயரில் ஊர் சுற்றுவதை செய்வதை கண்டிக்கவே செய்தோம் என்று,தவறு செயபவன்கூட காரணத்தை சொல்லி நியாய படுத்துமளவு நாகரீகம் கெட்டு போச்சு
ReplyDelete