கவிதையின் மகளோ?
செப்பு சிலையா
செதுக்கியவன் கலையா
நித்திரையை கலைக்கும்
நீலக் குயிலா
கற்பனையை தூண்டிவிட்ட-நீ
கவிதையின் மகளோ
மேகமெல்லாம் கூடிநின்று
மேனியெல்லாம் நடுநடுங்க
இடிமுழக்கம் வாழ்த்தொலிக்க
இந்திரனே இறங்கி வந்து-உன்னை
இணையாகி மகிழ்வானோ
புரவிக்கூட்டமென புறப்பட்ட
தேனீக்கள் தடம்மாறி நிற்பது
உன்னுடல் வாசம் உறுத்தியதோ
உன்னையே பூவாக நினைத்து-உடனே
தேன்குடிக்க எண்ணியதோ
கன்னியுன்னை காணவேண்டி
கதிரவனே வருன்முன்னே
கண்டுவிட்ட என்னோடு
கண்ணசைத்து வருவாயா-என்
கட்டுடலை அணைப்பாயா
கவிதையின் மகள் அழகு !
ReplyDeleteநன்றிங்க, பெண்களே இதுபோன்று ரசனையைரசித்து கருத்து சொல்லி இருப்பது எனக்கு பெருமை
Deleteஅழகான கவிதை...
ReplyDeleteமெட்டுப் போட்டால் அழகான கிராமியப் பாடலாகவும் உருவாக்கலாம்
நன்றிங்க,மேட்டுபோட்டால் இன்னும் நன்றாக எழுதுவேன்
Deleteநல்ல கறபனை வளம்.
ReplyDeleteநன்றிங்க தொடர்ந்து படியுங்க கருத்த பதியுங்க
Deleteபுரவிக்கூட்டமென புறப்பட்ட
ReplyDeleteதேனீக்கள் தடம்மாறி நிற்பது
உன்னுடல் வாசம் உறுத்தியதோ
உன்னையே பூவாக நினைத்து-உடனே
தேன்குடிக்க எண்ணியதோ...
அருமையான வர்ணனை.
அப்படிங்களா இன்னும் வரும் படிங்க
Delete''..மேகமெல்லாம் கூடிநின்று
ReplyDeleteமேனியெல்லாம் நடுநடுங்க
இடிமுழக்கம் வாழ்த்தொலிக்க
இந்திரனே இறங்கி வந்து-உன்னை
இணையாகி மகிழ்வானோ..''
நல்ல கற்பனை.
இனிய நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
வாழ்த்துக்கு நன்றி,தொடர்ந்து படியுங்கநன்றிங்க
Delete
ReplyDeleteபுரவிக்கூட்டமென புறப்பட்ட
தேனீக்கள் தடம்மாறி நிற்பது
உன்னுடல் வாசம் உறுத்தியதோ
உன்னையே பூவாக நினைத்து-உடனே
தேன்குடிக்க எண்ணியதோ//
கற்பனையும் சொல்லிச் சென்ற விதமும்
மிக மிக அருமை
மனம் கவர்ந்த படைப்பு
தொடர வாழ்த்துக்கள்//
நன்றிங்க சார் ,நீங்களெல்லாம் வாழ்த்தும்போது எனக்கு இன்னும் நல்ல படைப்புகளை தரணும்னு தோணுது
Deleteதேன்போல கவியெழதி
தினமும் தள்ளுகின்றீர்
மான்போலத் துள்ளி
மனதை அள்ளுகின்றீர்
அருமை!
This comment has been removed by the author.
Deleteவான்மழை போல் நீங்கக் வந்தெனக்கு
Deleteவாழ்த்தை வாரி வழங்குவதால்
தேன் போல் என்னால் கவிதையை
எழுத முடிகிறது
நன்றி ஐயா
அருமையான கற்பனை வரிகள் கலக்கல். ரசித்தேன்.
ReplyDeleteநன்றி மீண்டும் வரும் மீண்டும் மீண்டும் ரசியுங்கள்
Deleteசிறப்பான கவிதை
ReplyDelete