எதுகையே?மோனையே ?
எதுகையே மோனையே
(நன்றியுடன்)
எதுகையே மோனையே
என்னுயிர்ப் பேழையே
தென்றலே தீண்டிடும்
திருமேனிக் காரிகையே
உன்னிடம் அடைக்கலம்
உள்ளத்தில் சங்கமிக்க
என்விழியில் மின்சாரம்
ஏற்றியது ஏனடியே
அச்சாரம் போட்டதாலே
அவசரமாய் தோன்றியதோ
வித்தாரம் பேசவந்து
விளையாட்டை தேடுவதேன்
தென்னாட்டு மங்கையே
தேரோடும் கங்கையே
உன்வீட்டு முற்றத்தில்
உன்னருகே வந்திடுவேன்
ஊரெல்லாம் உறங்கியதும்
உன்மடியில் தவமிருப்பேன்
காணாது கண்டதை மீண்டும்
கண்டெடுத்து மூழ்கிடுவேன்
ஊர்கூடி ஒன்றினைத்து
உன்னையே மணமுடிப்பேன்
தேர்கூடும் சொந்தங்கள்
தெருவெல்லாம் வாழ்த்திடவே
வதுவை செய்ய வழித்துணை யானதோ எதுகையும் மோனையும் மதுவை உண்டதோர் மயக்கமும் தந்ததோ!!!? ஆழகு!
ReplyDeleteஆம் ஐயா! மதுஉண்ட மயக்கத்தால் வதுவை செய்தேன்
ReplyDeleteநன்றி ஐயா! வந்ததுக்கும் மயக்கத்திலிருந்து எழுப்பியதர்க்கும்
ஆகா! அழகுதமிழ்க் கவிதை
ReplyDeleteநன்றி நண்பரே,வந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும்
Deleteவரிகள் அழகு!
ReplyDeleteநன்றிங்க சார் ,வந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும்
Deleteஎதுகையே மோனை- கவிதைக்குப் பாராட்டுக்கள்..
ReplyDeleteநன்றிங்க உங்களுடைய ஆதரவும் நீங்கள் வணங்கும் தெய்வத்தின் அனுகிரகமும் நிச்சயம் எனக்கு உங்களின்மூலம் கிட்டும் என நம்புகிறேன்
Deleteஎதுகை மோனை என்ற வரிகளில் ஆரம்பித்து கவிதை முழுதும் அடிமோனையில் வரும்படி அழகாக வடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றிங்க ஐயா ,பிழையிருந்தால் மன்னிக்கவும் முறையான கவிதையை இனிமேலும் தர முயற்சிக்கிறேன்
Deleteகவிதை அருமை.
ReplyDeleteநன்றிங்க,ரசித்தமைக்கும் வந்தமைக்கும்
Deleteகாதலிக்கக் கவிதை பலவழி சொல்லிக்க் கொடுக்கிறதோ!
ReplyDeleteஎன்ன செய்வது இப்படித்தான் அந்த காலத்திலேயே காதலை வெளிபடுத்தி இருப்பார்கள்
Deleteவித்தாரம் காட்ட வந்து உங்களைக் கொத்தோடு கொள்ளை கொண்டவள் பார்ப்பாளா இந்தக் கவியை....!
ReplyDeleteஇப்போது எப்படி சொல்வேன் தப்பேதும் செய்யாமல் தனியாளாய் இல்லாமல் முர்போது எண்ணியதை தற்போது சொல்கிறேன்
Deleteநன்றிங்க நட்பே நாளை வரும் உங்கள் நாளும் அப்போது சொல்கிறேன் அதையும் சேர்த்து
எதுகை மோனையில் ஒரு சிறப்பான கவிதை! அழகு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றிங்க நண்பரே
Deleteமிகவும் ரசித்தேன் கவியாழி அவர்களே!
ReplyDeleteதிருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் பதிவில் மார்கழி திருவாதிரை அன்று உங்கள் பிறந்தநாள் என்று எழுதி இருந்தீர்கள்.
பல்லாண்டு இதேபோல பல கவிதைகள் தந்து எங்களை இன்புறச் செய்யுங்கள்! கவிதை புனையும் உங்கள் வாழ்க்கையும் இனிமையான கவிதையாக அமைய வாழ்த்துக்கள்!
தாமதமான வாழ்த்துக்களுக்கு மன்னிக்கவும்!
நான்தான் மன்னிப்பு கேட்கவேண்டும் ,நான் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவன் தான் ,அந்நாள ஆனிமாதம் இருபதேலாம் தேதிதான் வருகிறது .இது எனது நட்சத்திரம் மட்டுமே
Deleteதங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ,மேலும் இப்படி நிறைய எழுதிள்ளேன் அதையும் பட்யுங்கள் இனியும் தொடர்ந்து வரும் ஆதரவு தாருங்கள்
அழகான கவிதை தங்களுக்கு பிறந்த நாள் மற்றும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஎனது நட்சத்திர நாள் என்று சொல்ல மறந்துவிட்டேன்
Deleteவந்ததுக்கும் வாழ்த்தியதுக்கும் நன்றிகள் பல நான் சொல்கிறேன்
கவிதை நன்றாகவுள்ளது கவிஞரே
ReplyDeleteநன்றிங்க முனைவரே
Deleteஅழகான தமிழ் கவிதை
ReplyDeleteநன்றிங்க,வந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும்
Delete''..அச்சாரம் போட்டதாலே
ReplyDeleteஅவசரமாய் தோன்றியதோ
வித்தாரம் பேசவந்து
விளையாட்டை தேடுவதேன்..''
நன்று. இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
நன்றி நட்பே ,ஆயுள் உள்ளவரை விளையாடு என்பது ஆன்றோர் வழக்கம் அதனால்தான் தொரியது ஏன் என்று?
Deleteவந்தமைக்கும் கருத்து தந்தமைக்கும்
எதுகை, மோனையில் அசத்தியிருக்கிங்க!
ReplyDeleteநன்றிங்க நானும் உங்க ஊர்தானே உங்க செயல் எனக்கும் வராதோ?நீங்க கதை,நான் கவிதை
Deleteஅருமை அருமை மனம் கவர்ந்த பதிவு
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
tha.ma 9
ReplyDeleteவலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2014/09/blog-post_12.html?
அருமையான கவிதை. ரசித்து படித்தேன். வாழ்த்துக்கள்.
ReplyDelete