தமிழக விவசாயின் வாழ்வு
தமிழக விவசாயின் வாழ்வு
ஊரெல்லாம் ஓடுகிண்ற தண்ணீரை
ஒருவருக்கும் கொடுக்காமல் அவர்
வாடுகின்ற விவசாயி வாழ்வை-பாராமல்
தேடுகின்றார் பாவம் நாடுகின்றார்
பயிர்கள் கருகி அழிந்தாலும்
உயிர்கள் மடிந்து வீழ்ந்தாலும்
உருகி கெஞ்சி கேட்டாலும்-உளறல்
உண்மை என்றே உறைக்கின்றார்
பழகி பேசி வாழ்ந்தாலும்
பாவம் மக்கள் என்ன செய்வர்
அழகில்லாத அரசியலால் தினம்-அரசும்
அறிக்கையே அறமாய் எண்ணுகின்றார்
உழவில்லாத நாட்களுக்கு ஊதியமாம்
இழந்த பயிருக்கு இழப்பீடாம்
மறைந்த உழவனின் உயிரை-வாழ்வை
மறுபடியும் மீட்டு யார் தருவார்
ஒற்றை பயிரை வளர்ப்பதனால்
உழைப்பும் வீணாய் போகிறதே
பற்றை துறந்து பணமும்-வீணாய்
பயிரும் கருகி சாகிறதே
இச்செயல் மறந்து இனிமேலும்
இதர பயிரை வளர்த்திட்டால்
இன்னல் இன்றி இருந்திடலாம்-இனிமேல்
இயைந்து பயிரிட தொடங்கிடுங்கள்
விவசாயம் பற்றிய விழிப்புணர்ர்வு இங்கு மிகவும் குறைச்சலாகவே,இனி வருகிற தலை முறைக்கு அது பற்றிய தெரிதலே இல்லாமல் பண்ணி விடுகிற இரு ஆபத்து இங்கு மென்மையாய் நடந்து கொண்டே இருக்கிறது,ஒன்றைப் போட்டால் பத்தாக விளைவது விவசாயத்தில் மட்டுமே/
ReplyDeleteஆம் மாற்றுமுறை விவசாயம் அரசாங்கமே கற்றுத்தர வேண்டும்
Deleteவந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும் நன்றி ,மீண்டும் மீண்டும் வாருங்கள் மின்னலென கருத்தை தாருங்கள்
பழகி பேசி வாழ்ந்தாலும்
ReplyDeleteபாவம் மக்கள் என்ன செய்வர்
அழகில்லாத அரசியலால் தினம்-அரசும்
அறிக்கையே அறமாய் எண்ணுகின்றார்
////////////////////
குழந்தை உள்ளம் கொண்டவர்கள்
அரசாங்கம் அரசியல் மட்டுமே தெரிவதால்
Deleteஅநியாயம் அட்டூழியம் அரங்கேறுகிறது
இயைந்து பயிரிட தொடங்கிடுங்கள் --
ReplyDeleteவிவசாயிகளுக்கு அருமையான பயனுள்ள சிந்தனைப்பகிர்வு ..
ஆம் இப்போது மாற்று யோசனை கொண்டாலே மடிவரின் எண்ணிக்கை குறையும் தன்னாலே
Deleteநன்றி வந்தமைக்கும் கருத்து தந்தமைக்கும்
மிக அருமை ஐயா, ஒரு விவசாயின் கஷ்டங்கள் யாருக்குத்தான் புரியப்போகிறது. அரசியல்வாதிகளுக்கு எப்படி புரியும்.
ReplyDeleteஅரசியல் தான் பிரச்சனையே அதற்குத்தான் மாற்று முறை விவசாயம் வேண்டும் என்பது எனது யோசனை.
ReplyDeleteதண்ணீரின்றி அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் யாரையும் சும்மா விடாது!
அவர்களின் கண்ணீர் சும்மா விடாது
Deleteஇச்செயல் மறந்து இனிமேலும்
ReplyDeleteஇதர பயிரை வளர்த்திட்டால்
இன்னல் இன்றி இருந்திடலாம்-இனிமேல்
இயைந்து பயிரிட தொடங்கிடுங்கள்/
/நல்ல கருத்து
அருமையாகச் சொல்கிறீர்கள்
தொடர வாழ்த்துக்கள்
மாற்று யோசனையும் வேண்டும் என்பதே எனது விருப்பம்
Deletetha.ma 3
ReplyDeleteநன்றிங்க சார்
Deleteஒற்றை பயிரை வளர்ப்பதனால்
ReplyDeleteஉழைப்பும் வீணாய் போகிறதே
பற்றை துறந்து பணமும்-வீணாய்
பயிரும் கருகி சாகிறதே
இச்செயல் மறந்து இனிமேலும்
இதர பயிரை வளர்த்திட்டால்
இன்னல் இன்றி இருந்திடலாம்-இனிமேல்
இயைந்து பயிரிட தொடங்கிடுங்கள்//
ஆம் ,
நீங்கள் சொல்வது உண்மை உழவர்கள் மாற்றி யோசித்து நடைமுறை படுத்தி மகிழ்ச்சியாக வாழலாம்.
தண்ணீர் பற்றாகுறையைப் போக்கி தண்ணீரை எப்படி பயிர்களில் தக்க வைத்த்க் கொள்வது(தேங்காய் நார் நிறைய தண்ணீரை உறிஞ்சி வைத்துக் கொள்ளும்.) என்று பார்த்து அதை நடை முறைக்கு கொண்டு வரலாம், தண்ணீர் இல்லாத காலத்தில் தண்ணீர் குறைவாய் ஏற்றுக் கொள்ளும் மாற்று பயிரை பயிரிட்டு பயன் பெறலாம்.