தெய்வங்கள்

தெய்வங்கள்

பழமொழிகள் -பருவத்தே பயிர்செய்

                 பருவத்தே பயிர்செய்

           "  பருவத்தே பயிர் செய்"  என்ற பழமொழி எல்லோருக்குமே தெரிந்தது. ஆனால்  எதற்க்காக யாருக்காக சொன்னார்கள் என்பது எல்லோருக்குமே தெரியாது ,குறிப்பாக இன்றைய இளைஞர்களுக்கு புரியாது. இன்றைய இளைய தலைமுறைக்காக நான் சொல்ல விரும்புகிறேன்.
              
             பட்ட  படிப்பை  முடிக்கும் முன்னே நல்ல மதிப்பெண் பெற்றிருந்தால்  கல்லூரிக்கே வந்து  நேர்காணல் நடத்தி தயார் செய்து பணிக்கான உத்தரவும் தந்து விடுகிறார்கள்  கல்லூரி படிப்பு முடிந்ததும் உரிய பயிற்சி கொடுத்து பணியமர்த்தி பயிற்சியுடன் ஊக்க தொகையும் கொடுக்கிறார்கள் .
              
             இன்று பெருபாலான இளைய தலைமுறையினர் நல்ல வேலையில் நல்ல சம்பளத்துடன்  வாழ்க்கையை தொடங்குகிறார்கள்,வீட்டிடருகே வந்து மகிழுந்து  பேருந்து  போன்றவற்றில் குழுவாக  அழைத்து செல்கிறார்கள் அதுபோலவே மீண்டும் இறக்கி விடுகிறார்கள் .அங்கேயே சாப்பாடு தேநீர் போன்ற சலுகைகளும் உண்டு .இதெல்லாம் பெரும்பாலான நிறுவனங்களில் கிடைக்கிறது. சிலர் சொந்த வாகனத்தில் மகிழுந்து, இருசக்கர வாகனம் போன்றவற்றில் சென்று வருவதுண்டு

          அவர்களுக்கு கிடைக்கும் ஊதியத்தை முறையான வழிகளில் செலவழிக்கும் பொறுப்பான பிள்ளைகள் உண்டு .ஆனால் சிலபேர் புது வாழ்வு பேரானந்தம்  போன்றவற்றால் நட்பு வட்டம் நங்கையர்  கூட்டமென நாட்களை கழிப்பதுடன் மிக அதிகமான செலவு செய்து  சேமிப்பு என்பதை மறந்து வீட்டிற்க்கே செல்லாமல் வீண் செலவு செய்து  விடுகிறார்கள்

          சிக்கனம் சேமிப்பு என்பது அரிதாகிவிட்டது எல்லோருக்கும்  சீக்கிரம் அனுபவிக்க வேண்டுமென்ற ஆர்வம் அவர்களை தவறான பாதைக்கு இழுத்து சென்று விடுகிறது.முறையான வாழ்க்கை மாறி  முறையற்ற வழிகளில் செலவு செய்யும் போக்கு அதிகமாகி வருகிறது.நண்பார்களுடன்  உணவு விடுதி,திரையரங்கு ,கேளிக்கை விடுதிகளில் ஆட்டம் பாட்டு கொண்டாட்டம் மது போன்ற பிற உல்லாச உலகத்தை நாடி செல்வதால் அவர்களது எதிர்கால வாழ்க்கை சரியான பாதையில் அமைத்து கொள்வதில்லை.

         இதனால்  பாதிக்கபடுவது அவர்கள் மட்டுமல்ல அவர்சார்ந்த குடும்பமும்தான் இம்மாதிரியானவர்களின் படிப்புக்காக  நிலத்தை விற்றோ அல்லது வீட்டை அடமானம் வைத்தோ அல்லது கல்வி கடன் வாங்கியோ படிக்க வைத்திருப்பார்கள் இதை எல்லாம் மறந்து அவ்வாறு வீண் செலவுகளை  வேடிக்கையாக செய்வார்கள். இதனால் அவர்களின் சராசரி வாழ்க்கை பாதிப்பதுடன் சரியான நேரத்தில் ,வயதில் திருமணம் செய்ய முடியாமல்  தவிப்பார்கள் .

        உங்களின் பெற்றோர்களை மதித்து அவர்களிடம் ஆலோசனை கேளுங்கள் நிச்சயம் உங்களுக்கு பயனுள்ள வகையில் உங்களது எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு உங்களுக்காக வாங்கிய கடனை முறையாக செலுத்தி  எதிர்கால தேவைக்கும் சேமிப்புக்கும் வழிவகுப்பார்கள் புது வீடு  உங்களுக்காக வாங்குவார்கள் சகோதர சகோதரிகளின் திருமணம்  உங்கள் பெற்றோரின் மருத்துவ செலவு  போற்றவற்றில் கவனம் செலுத்தி முறையாக செய்வார்கள்.அதோடு உங்களை நல்வாழ்க்கைக்கு உற்ற துணையை  தேர்ந்தெடுத்து மணமுடித்து மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழிவகுப்பார்கள் .

         எனவே சிக்கனம் சேமிப்பு போன்றவற்றுடன் சரியான வயதில் திருமணம் செய்து உங்களது வாழ்கையை சரியான பாதையில் சென்றால் உங்களை பெற்றோரும் உங்களை நம்பி வந்தோரும்  எதிர்காலத்தில் பிறக்க இருக்கும் பிள்ளைகளும் நலமாக வாழ்வார்கள் என்பதில் ஐய்யமில்லை.

         ஆகவே சரியான நேரத்தில் சரியான பருவத்தில் திருமணம் செய்து நல் வாழ்கையை அமைத்துகொள்ளுங்கள் நாலைந்து பிள்ளைகளை பெற்றுகொள்ளுங்கள்.

Comments

  1. இளைஞர்களுக்கு மாத்திரமல்ல அனைவருக்கும் பொருந்தக்கூடிய நல்லதோர் உபதேசம் !

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே இதை தொடரும் நம்பிக்கை உள்ளது ஏதோ சமுதாயத்திற்கு நம்மால் முடிந்த உதவி

      Delete
  2. நல்லதொரு ஆலோசனை..

    ReplyDelete
    Replies
    1. நீங்க செய்யுற சேவையை விட இது ஒன்னும் பெரிசில்ல நண்பரே ,அணிலும் மண் சுமந்தது போல செய்யுறேன்,வந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும் நன்றி

      Delete
  3. கவிஞர் கண்ணதாசன் அவர்களின் அர்த்தமுள்ள இந்துமதம் இதைத்தான் வலியுத்து கூறுகிறது...

    என்னுடைய 15, 16 வயதுகளில் அர்த்தமுள்ள இந்துமதத்தின் அனைத்து பாகங்களை படித்து முடித்துவிட்டு அனைவருக்கும் அறிவுரைக்கூறினேன்.

    அதிகபட்சமாக 25 வயதுக்குள் திருமணம் செய்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் எதிர்கால வாழ்க்கை உங்களுக்கு சிறப்பாக இருக்கும் என்று அறியுருத்தினேன்...

    ஆனால் என்னுடைய வாழ்வில் அதை பின்பற்ற முடிவில்லை என்ற போது கொஞ்சம் வேதனையாக இருக்கிறது. வாழ்க்கையின் சந்தர்ப்பம் மட்டுமே அவரவர் வாழ்வின் திசைகளை மாற்றி அமைத்துக்கொண்டிருக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. சந்தர்ப்பம் சில சமயம் தள்ளிபோகலாம் நமது குறிக்கோள் முடிந்துவிட்டால் சரியான சமயம் பார்த்து சந்தர்பத்தை பயன் படுத்தினாலே போதும்.வாடாத மல்லியும் தேடாத மலரும் கைக்கு எப்பவுமே கிடைக்காது

      Delete
  4. அழகான விளக்கங்கள்.
    நல்ல பதிவு

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க ,தெரிஞ்சுக்க வேண்டியவங்க புரிஞ்சுகிட்டா சரி

      Delete
  5. தலைப்புக்கு ஏற்ப கட்டுரை! அழகு!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க ஐயா,நீங்க கொடுக்கற ஊக்கத்துலதான் என்னால யோசிக்க முடியுது

      Delete
  6. அருமையான விளக்கங்கள் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கு நன்றி

      Delete
  7. எங்களை நாங்களே கேள்விகள் கேட்டு சிந்திக்க வைக்கும் பதிவு !

    ReplyDelete
  8. கேள்வி பிறந்தது அங்கே நல்ல பதிலும் கிடைத்தது இங்கே ,ஆம் என்னை பொறுத்தவரை என்னால் முடிந்ததை சொல்லிவிட வேண்டும் கேட்பதும் கேட்காததும் அவரவர் விருப்பம்.

    ReplyDelete
  9. நல் வாழ்கையை அமைத்துகொள்ள அருமையான ஆலோசனை .. நிறைவான நன்றிகள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க,இன்றைய சமுதாயத்திற்கு இதுவும் தேவை

      Delete
  10. காலத்துக்கு ஏற்ற அறிவுரை கவிஞரே..

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க ,மீம்டும் வாங்க

      Delete
  11. பழமொழியும் அதற்கான விளக்கமும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க சார்,தொடர்ந்து எழுதலாமென இருக்கிறேன்

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more