ஏனய்யா சாதி(தீ)யும் மதமும்
கோள்களில் பூமி
கொண்ட தனித்தோர்
மனித இனம்
மற்றெல்லா உயிரினம்
செடி மரம் பூச்சிகள்
செழுந்திரலான விலங்குகள்
கடல் நீர் காற்று
கணக்கிலடங்கா மலைகள்
எங்கெங்கும் காண்பதெல்லாம்
எண்ணற்ற மதப் பற்றே
ஏழ்மைப் பசிப் பஞ்சம்
ஏற்றதாழ் விருந்தாலும்
எல்லா மக்களும்
இன்பமாய் வாழ்ந்தாலும்
ஏனய்யா சாதியும் மதமும்
என்ன அதனால் சாதித்தாய்
ஒன்றே குலமென
ஒவ்வோர் மதமும்
நன்றே சொன்னாலும்
நல்லவை போதித்தாலும்
அன்றே அனைத்தையும் மறந்து
அறிவிழியாய் மாறுவதேன்
மனிதத்தை போற்றினால்
மதமென்ன தடையா சொல்லும்
கொண்ட தனித்தோர்
மனித இனம்
மற்றெல்லா உயிரினம்
செடி மரம் பூச்சிகள்
செழுந்திரலான விலங்குகள்
கடல் நீர் காற்று
கணக்கிலடங்கா மலைகள்
எங்கெங்கும் காண்பதெல்லாம்
எண்ணற்ற மதப் பற்றே
ஏழ்மைப் பசிப் பஞ்சம்
ஏற்றதாழ் விருந்தாலும்
எல்லா மக்களும்
இன்பமாய் வாழ்ந்தாலும்
ஏனய்யா சாதியும் மதமும்
என்ன அதனால் சாதித்தாய்
ஒன்றே குலமென
ஒவ்வோர் மதமும்
நன்றே சொன்னாலும்
நல்லவை போதித்தாலும்
அன்றே அனைத்தையும் மறந்து
அறிவிழியாய் மாறுவதேன்
மனிதத்தை போற்றினால்
மதமென்ன தடையா சொல்லும்
மனிதத்தை போற்றினால்
ReplyDeleteமதமென்ன தடையா சொல்லும்/
/அசத்தலான வரிகள்
மதம் எப்போதும் தடை செய்வதில்லை
செய்வதெல்லாம் மதவாதிகள்தான்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ஆம் நியாயம்தானே மதமோன்றும் சொல்லவில்லையே
Deletetha.ma 2
ReplyDeleteபதிவுக்கு நன்றி
Deleteமனிதம் போற்றும் நல்ல கவிதை!
ReplyDeleteநன்றி நாளும் வருக நல்கவிதைப் படிக்க
Delete// எங்கெங்கும் காண்பதெல்லாம்
ReplyDeleteஎண்ணற்ற மதப் பற்றே
ஏழ்மைப் பசிப் பஞ்சம்
ஏற்றதாழ் விருந்தாலும்
எல்லா மக்களும்
இன்பமாய் வாழ்தாலும்
ஏனய்யா சாதியும் மதமும்
என்ன அதனால் சாதித்தாய்//
சாதி மதத் தீயே -என்ன
சாதித்தாய் நீயே
ஆதியிலே இல்லை-என்றும்
அழியாத தொல்லை
பாதியிலே வந்தாய் -தீராப்
பகைமிகவே தந்தாய்
ஓதியநல் தாச -மக்கள்
உணர்ந்திடவே நேச
\\ஆதியிலே இல்லை-என்றும்
Deleteஅழியாத தொல்லை//
உண்மை ஐயா இப்போதுதான் இந்த நூற்றாண்டில்தான் அதிக பேதங்கள் எல்லாம் வந்தது
// ஏனய்யா சாதியும் மதமும்
ReplyDeleteஎன்ன அதனால் சாதித்தாய் //
சமத்துவ சிந்தனை! நல்ல கவிதை!
( கட்டுரைகளில் பிழை இருந்தால் அவ்வளவாக தெரியாது. ஆனால் கவிதைகளில் பிழைகள் இருப்பின் கவித்துவமே தன்மை மாறிவிடும். எனவே பதிவிடுவதற்கு முன் ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளவும். விசைப்பலகையில் ( Key Board) குறையிருப்பின் சிலசமயம் இதுமாதிரி நிகழும். சொன்னதில் தவறிருப்பின் மன்னிக்கவும்!)
செளுந்திரளான > செழுந்திரளான
வாழ்தாலும் > வாழ்ந்தாலும
அறிவிளியாய் > அறிவிலியாய்
உண்மை பிழை உள்ளதை அறிந்தேன் தவறு என்னுடையது திருத்திக்ககொள்கிறேன்.வந்தமைக்கு நன்றி இனிமேல் தவறாமல் வரவேண்டும் ஒன்றி
Deleteஒன்றே குலமென
ReplyDeleteஒவ்வோர் மதமும்
நன்றே சொன்னாலும்
நல்லவை போதித்தாலும்
அன்றே அனைத்தையும் மறந்து
அறிவிளியாய் மாறுவதேன்
மனிதத்தை போற்றினால்
மதமென்ன தடையா சொல்லும்
மனிதம் போற்றும் அருமையான படைப்புக்குப் பாராட்டுக்கள்..
நன்றி ,நாளும் வருக நல்லூக்கம் தருக
Deleteஒன்றே குலமென
ReplyDeleteஒவ்வோர் மதமும்
நன்றே சொன்னாலும்
நல்லவை போதித்தாலும்
அன்றே அனைத்தையும் மறந்து
அறிவிழியாய் மாறுவதேன்
மனிதத்தை போற்றினால்
மதமென்ன தடையா சொல்லும்//
அருமையாக சொன்னீர்கள்.
மனிதத்தை போற்ற வேண்டும் என்று உரைக்கும் அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்.
நன்றிங்கம்மா.இப்போதும் வந்து
Deleteஇனிமையான கருத்தை தந்து
வாழ்த்தியமைக்கு நன்றி
மதத்தின் பின் மறைந்து மனிதம் மறந்த மனிதன்.மதம் பிடித்தவன்!
ReplyDeleteநன்று
உண்மை ,மதமும் சாதியும் மனிதனை பிரிக்கின்றன
Deleteவந்ததுக்கும் கருத்து தனத்துக்கும் நன்றி
எங்கெங்கும் காண்பதெல்லாம்
ReplyDeleteஎண்ணற்ற மதப் பற்றே
ஏழ்மைப் பசிப் பஞ்சம்
ஏற்றதாழ் விருந்தாலும்
எல்லா மக்களும்
இன்பமாய் வாழ்ந்தாலும்
ஏனய்யா சாதியும் மதமும்
என்ன அதனால் சாதித்தாய்
ரொம்ப அழகா சொல்லிருக்கிங்க ஐயா. சூப்பர்.
நன்றிங்க தம்பி ,இப்போதெல்லாம் இதுதான் சொல்லவேண்டியுள்ளது
Delete