பனிபொழியும் அதிகாலை
நிலவும் சூரியனும் சேர்ந்து
நித்திரையில் கனவில் வந்த
நீலக்கண் கோலமங்கை
இவளென்று சண்டையிட்டதால்
பூமிக்கே வேர்வை வந்ததால்
புல்லெல்லாம் நனைந்து விட்டதோ
பனிபொழியும் அதிகாலையில்
பருவமங்கை நடந்துந்துவர
முகம் தெரிய வேண்டாமென
அதிகாலை வராமல்
கதிரவனையே காக்கவைத்து
காலம் மாறி வியந்து வந்ததோ
மார்கழிப் பூக்களின்
மௌனமான பூக்கும் சத்தமமும்
மலைச்சாரல் தூறல்போல
பனித்துளியும் முகமலர்ந்து
மங்கையால் மயங்கி நின்றதோ
வித்தியாசமான அருமையான அழகான கற்பனை
ReplyDeleteவார்த்தைப் பிரயோகங்கள் கவிதைக்கு
கூடுதல் அழகு சேர்க்கிறது
மனம் கவர்ந்த படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 2
ReplyDeleteபணியில் நனைவதுபோல் உங்களின் கருத்தால் பரவசமடைகிறேன்
ReplyDeleteகொட்டும் பனியில் நனைந்தீர்களா? செய்யும் பணியில் நனைந்தீர்களா?ஹாஹாஹா
ReplyDeleteகவிதை மழையில் நனைந்துவிட்டேன்.வருகைக்கு நன்றி
Delete// நிலவும் சூரியனும் சேர்ந்து
நித்திரையில் கனவில் வந்த
நீலக்கண் கோலமங்கை
இவளென்று சண்டையிட்டதால்
பூமிக்கே வேர்வை வந்ததால்
புல்லெல்லாம் நனைந்து விட்டதோ//
நல்ல கற்பனை! அழகு!
நன்றி ஐயா,
Deleteகதிரவனையே காக்கவைத்து
ReplyDeleteகாலம் மாறி வியந்து வந்ததோ
அத்தினையும் அழகான வரிகள் மிகவும் ரசித்தேன்.
ஆம் தம்பி வருகைக்கு நன்றி
Deleteகதிரவனையே காக்க வைக்கும் வரிகள் அழகு.
ReplyDeleteநன்றி நட்பே நீங்க வந்ததே மகிழ்ச்சி
Deleteபனி உருகி கவிதையாக கொட்டிவிட்டதோ! அருமை.
ReplyDeleteஆம் நட்பே விடியலை தேடி எழுதினேன்
ReplyDelete//மௌனமான பூக்கும் சத்தமமும்//
ReplyDeleteஆகா!
வளமான கற்பனை!
தங்களின் வருகைக்கு நன்றி நண்பரே
Deleteபனிபொழியும் அதிகாலை கவிதையாய் அழகு .........
ReplyDeleteநன்றி நட்பே
Delete