தேனடை நிறமோ?
தேனடை நிறமோ
தித்திக்கும் சுவையோ
நானருகில் பார்த்ததுமே
நாணமென்ன சுந்தரியே
நீ அருகில் வந்ததுமே
நீரூற்றாய் ஆனதேனோ
திரவியமே தேனமுதே
திகட்டாத நற்சுவையே
பூதொடுத்த மாலையிட்டு
புதுத்தாலி பின்னலிட்டு
ஊர் உறங்கும் வேளையிலே
உன்னையே சொந்தமாக்குவேன்
காத்திருந்து பார்த்திருந்து
காத்திட்ட கடவுள் முன்னே
ஊர்திரண்டு வாழ்த்திடவே
உன்னையே மணம் முடிப்பேன்
உனக்கு என்னை தந்திடுவேன்
உன்னுயிரோடு கலந்திடுவேன்
தித்திக்கும் சுவையோ
நானருகில் பார்த்ததுமே
நாணமென்ன சுந்தரியே
நீ அருகில் வந்ததுமே
நீரூற்றாய் ஆனதேனோ
திரவியமே தேனமுதே
திகட்டாத நற்சுவையே
பூதொடுத்த மாலையிட்டு
புதுத்தாலி பின்னலிட்டு
ஊர் உறங்கும் வேளையிலே
உன்னையே சொந்தமாக்குவேன்
காத்திருந்து பார்த்திருந்து
காத்திட்ட கடவுள் முன்னே
ஊர்திரண்டு வாழ்த்திடவே
உன்னையே மணம் முடிப்பேன்
உனக்கு என்னை தந்திடுவேன்
உன்னுயிரோடு கலந்திடுவேன்
''...தேனடை நிறமோ
ReplyDeleteதித்திக்கும் சுவையோ..''
வித்தியாச சம நோக்கு .
இனிய நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி
Deleteஊர் உறங்கும் வேளையிலே
ReplyDeleteஉன்னையே சொந்தமாக்குவேன்..
இரட்டை அர்த்தமா?
நீங்க பாடியொரு அர்த்தம் இருப்பதை உணர்த்தியமைக்கு நன்றி ,நான் அப்படி நினைக்கவில்லை எழுதவில்லை,
Deleteகவிஞரின் பார்வையில் அப்படித்தான் இருக்குமோ?
அருமையான படைப்பு! நன்றி!
ReplyDeleteவந்தமைக்கும் கருத்து தந்தமைக்கும் நன்றி
Deleteவாலிபம் திரும்புகிறதா ! நடக்கட்டும்!
ReplyDeleteஐயாவுக்கு நன்றி,பழைய ஞாபகம்
Delete//உனக்கு என்னை தந்திடுவேன்
ReplyDeleteஉன்னுயிரோடு கலந்திடுவேன்//
இதுதான் காதல்.நன்று
நன்றிங்க,இதுவும் காதல்
Deletenice..
ReplyDeleteநன்றிங்க
Deleteஐயாவுக்கு மறக்க முடியாத ஞாபங்களோ ..
ReplyDeleteநன்று
ஆம் ,உண்மை ,வந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும் நன்றி
Deleteகவியாழி ஐயா...
ReplyDeleteதேனடையில் உள்ள நிறத்தைக்
கவிதையில் உவமையாக்கியதை
முதன் முதலாக உங்கள் கவிதையில் தான் கண்டேன்.
அருமையான கற்பனை.
அப்படிங்களா!நன்றிங்க .எல்லாமே கற்பனைதானே
Deleteநினைவு மீட்டலோ !
ReplyDeleteம்..அப்படிக்கூட சொல்லலாம்,வந்த்துக்கும் கருத்து பகிர்ந்ததுக்கும் நன்றி
Deleteமனம் கவர்ந்த கவிதை
ReplyDeleteவாழ்த்துக்கள்
நன்றிங்க சார் ,வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி
Deleteமிக்க மிகிழ்ச்சியான நன்றி
ReplyDelete