தெய்வங்கள்

தெய்வங்கள்

சித்தன் அருளே வேண்டும்.........

சித்தன் அருளே வேண்டும்-தினம்
சிந்தனை செய்யவே வேண்டும்
நித்தமும் நினைக்க வேண்டும்-மனதில்
நிம்மதி கிடைத்திட வேண்டும்

சத்தியம் போற்றிட வேண்டும் -நல்ல
சங்கதி செய்திட வேண்டும்
பத்தியம் இருந்திட வேண்டும்-எனக்கு
பகலவன் துணையும் வேண்டும்

நேர்மையாய் வாழ்ந்திட வேண்டும் -அன்பை
நேசித்தே போற்றிட வேண்டும்
சீர்மிகு நட்பும் வேண்டும் -என்னை
சிரம்போல் காத்திடவேண்டும்

கஷ்டமும் தீர்ந்திட வேண்டும் -எல்லோர்
கவலையும் தீர்த்திட வேண்டும்
இஷ்டமாய்ச் சிவனை நினைக்கும் -நிலை
இனிதே நாளும் வேண்டும்

எல்லா  வளமும் பெற்று -வறுமை
இல்லா நிலையே வேண்டும்
பொல்லா எதிரியும் மாறி -மீண்டும்
நட்பினைத் தொடர்ந்திட வேண்டும்

கொடுத்து உதவி செய்ய-பணம்
குறையே இன்றி வேண்டும்
கொடுக்கும் மனமே எனக்கு-நாளும்
குறை வில்லாமல் வேண்டும்

குறைகள் அகன்றே தீர-மனம்
குளிர வணங்கிட வேண்டும்
குடும்பம்  மகிழ்ந்து வாழ-சித்தன்
கூடவே துணையாய் வேண்டும்


########கவியாழி########



Comments

  1. வணக்கம்
    ஐயா

    குறைகள் அகன்றே தீர-மனம்
    குளிர வணங்கிட வேண்டும்
    குடும்பம் மகிழ்ந்து வாழ-சித்தன்
    கூடவே துணையாய் வேண்டும்

    கவிதை சூப்பர் ...சூப்பர் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. குறைகள் அகன்றே தீர-மனம்
    குளிர வணங்கிட வேண்டும்
    குடுமபம் மகிழ்ந்து வாழ-சித்தன்
    கூடவே துணையாய் வேண்டும்//
    சித்தன் துணை இருக்கட்டும்.
    வாழ்த்துக்கள்.
    கவிதை அருமை.

    ReplyDelete
  3. நிச்சயம் சித்தன் அருள்வான்
    அற்புதமான கவிதைக்காக

    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. // பொல்லா எதிரியும் மாறி -மீண்டும்
    நட்பினை தொடர்ந்திட வேண்டும்... //

    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  5. நல்ல கோரிக்கைகள்தான். அதனால, கண்டிப்பாய் சித்தன் அருள்வான்.

    ReplyDelete
  6. "எல்லா வளமும் பெற்று -வறுமை
    இல்லா நிலையே வேண்டும்
    பொல்லா எதிரியும் மாறி -மீண்டும்
    நட்பினை தொடர்ந்திட வேண்டும்" என
    அழகாக ஆண்டவனைத் துணைக்கு
    அழைத்த விதம் அழகே!

    ReplyDelete
  7. அழகிய கவியால் மனமுருக வேண்டினீர்கள் சகோ!

    அனைத்தும் கிடைக்கும்!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. சித்தன் அருள் கிட்டிட வாழ்த்துக்கள் சகோதரா .

    ReplyDelete
  9. //நேர்மையாய் வாழ்ந்திட வேண்டும் -அன்பை
    நேசித்தே போற்றிட வேண்டும்//

    சிறப்பான சிந்தனை.... எல்லோருக்கும் அமைந்து விட்டால்.....

    த.ம. 9

    ReplyDelete
  10. நல்ல இந்தப் பிரார்த்தனைகளை நலமாய் நிறைவேற்றிடட்டும் சித்தன்.

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more