தெய்வங்கள்

தெய்வங்கள்

திசையெங்கும் முழங்கி வா தமிழே

துன்பத்தை தொலைத்தது  போல்
துள்ளி விளையாடி வரும்
கள்ளவிழி  நங்கை
கவிங்கர்களுக்கோ தங்கை
அவளோ தமிழ் கங்கை

உலகமெல்லாம் ஓடி
உன்புகழ் பாடி
கலகமும் கஷ்டமும் மறந்தே
நிலைக்கொள்ளா ஆனந்தம்
நின் மடியில் கிடைக்குதடி

இலைபோட்டு விருந்தை
எந்நாளும் தருமுனக்கு
சிலை வடித்து இருக்கிறேன்
சிரித்தோடி வந்திடு
என்னோடு தங்கிடு

படை கூட்டி
பாவை உன்னை அழிக்க
படுபாவி நினைத்தாலும்
விடைகொடுக்கும் நேரமிது
விரைந்து வா விடியலைத்தா

அலை கடந்து தவிக்கும்
கொடியுறவு தமிழனுக்கு
திரைகடல் தேடி
தேசமதைத் தருவேன்   என
திசையெங்கும் முழங்கி வாwww.kaviyazhi.com

Comments

  1. தமிழுக்கு மகுடம்! கவிதை அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றிம்மா,வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

      Delete
  2. // அலை கடந்து தவிக்கும்
    கொடியுறவு தமிழனுக்கு
    திரைகடல் தேடி
    தேசமதைத் தருவேன் என
    திசையெங்கும் முழங்கி வா //

    விரைவில் ஈழம் காண வழி செய்வோம்!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் அன்பும் ஆதரவும் நாம் மக்களுக்கு உண்டென்பதை பல கவிதைகள் வாயிலாக அறிந்தேன் அதன் பின்புதான் நானும் வேண்டுகிறேன் உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்

      Delete
  3. வார்த்தைகள் சரளமாக வந்து விழுந்து
    கவிதைக்கு கூடுதல் அழகு சேர்க்கிறது
    மனம் கவர்ந்த படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் ஊக்கமும் ஐயா,ராமநுசம் அவர்களின் ஆசியும் இன்னும் சிறப்பாக எழுத தூண்டுது நன்றிங்க சார்

      Delete
  4. அருமை. ரசித்தேன். வாழ்த்துக்கள் கவிஞரே.

    ReplyDelete
  5. அழகான வரிகள் :)
    ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. உங்கள்து ரசனை கண்டு மகிழ்ந்தேன்

      Delete
  6. பல் கோடி மக்களின் எண்ணப் பிரதிபலிப்பான அருமைக் கவிதை

    ReplyDelete
    Replies
    1. உங்களின் விருப்பமே உலகத்தாருக்கும் எனக்கும்

      Delete
  7. திசையெங்கும் முழங்கி
    விடியலைத்தரும் நாள் விரைவில்
    வந்திடும் என நம்பிக்கை கொள்வோம் !

    ReplyDelete
    Replies
    1. விடியளும் வரும் விடிவும் கிடைக்கும் வருகைக்கு நன்றி

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more