தெய்வங்கள்

தெய்வங்கள்

கடவுள் இருந்தால் கஷ்டமும் தருவானா?

கடவுளே கடவுள் இருந்தால்
கஷ்டமும் தருவானா?

கயவர்கள் நிம்மதியாய்
காசு பார்க்க விடுவானா?

திருடன்  துரோகிஎல்லாம்
தைரியாமாய் திரிவானா?

காசு பணத்திற்காக
கள்ள தொழில் செய்வானா?

இல்லாதவன் ஏங்குகிறான்
இருப்பவனோ  பதுக்குகிறான்

உள்ளதை சொல்பவன்
உயர்வின்றி தவிக்கிறான்

நல்லவனாய் இருப்பவன்
நாளும்  மனதால்இறக்கிறான்

பொல்லாங்கு சொல்பவன்
புகழோடு இருக்கிறான்

உனக்காக செய்வதை
ஏழைக்கு கொடுக்கசொல்!

உயர்வாக உன்னிடம்
ஒழுக்கத்தை பயிலசொல்!

தனக்காக உள்ளதுபோக
தருமம் செய்யச்சொல்!

மனித நேயம்  மறக்காமல்
மனிதனை இருக்கசொல்!

மனிதனாக இருக்க
மனிதாபிமானம் மதிக்கசொல்!

பெற்றோரை,மற்றோரை
மாண்புடனே மதிக்கசொல்!

தனியொழுக்கம் கற்றுதந்த
ஆசிரியரை மதிக்கசொல்!!!

(கவியாழி)

Comments

  1. கடவுளும் இருக்கிறார் கள்வர்களும் இருக்கிறார்கள்...
    அழகான கவிதை ஐயா

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க ,உங்கள் கருத்துக்கு நன்றி

      Delete
  2. அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க அடிக்கடி வாங்க ஆறுதலை தாங்க

      Delete
  3. சொன்னா எங்கங்க கேக்குறாங்க...

    ReplyDelete
    Replies
    1. அவங்க நம்ப வேண்டாம்,யோசனை பண்ணினாலே போதும்

      Delete
  4. மனிதாபிமானம் மிக்க ஆதங்கம் மிக அழகான கவிதையாக மலர்ந்துள்ளது.
    //தனியோளுக்கம் கற்றுதந்த// தனியொழுக்கம்?

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க சார் ,சில சமயம் அவரசரதுல வருது பிழையை திருத்திக்கிறேன்

      Delete
  5. இருப்பதை நிரூபிக்க வேண்டியது " அவன் "
    பொறுப்புதான்.ஆழமான அருமையான சிந்தனை
    அற்புதமான கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சார்,உள்ளேன் மக்களேன்னு வந்து சொல்லணும்

      Delete
  6. பெற்றோரை, மற்றோரை, தனியொழுக்கம் கற்றுத் தந்த ஆசிரியரை மதிக்கச் சொன்ன கவிதை அருமை!

    பாராட்டுக்கள்!


    http://ranjaninarayanan.wordpress.com
    http://pullikkolam.wordpress.com
    http://thiruvarangaththilirunthu.blogspot.in/

    ReplyDelete
    Replies
    1. உண்மையை சொன்னேன் ஒழுக்கத்தை சொன்னேன்
      வந்ததுக்கும் கருத்து தனத்துக்கும் நன்றிங்க

      Delete
  7. அருமை! என்னுடைய 5 ஆம் நாள் பதிவு எப்படி இருந்தது ஐயா http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_21.html வாருங்கள் வலைச்சரத்திற்கு!

    ReplyDelete
    Replies
    1. நன்றி.அதிகாலையிலேயே பார்த்து விட்டேன் அத்தனையும் அருமை .திருவாளர்,மதுமதி,திருமதி.சசிகலா கோமதி அரசு போன்றோரின் படைப்புகளும் அருமை

      Delete
  8. ஒவ்வொரு சிந்தனைகளும் நயமுடையன.
    இல்லாதவன் ஏங்குகிறான்
    இருப்பவனோ பதுக்குகிறான்


    என்னை மிகவும் கவர்ந்தது.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க , சொன்னா யார் கேட்கிறாங்க?
      வந்தமைக்கும் கருத்து தந்தமைக்கும் நன்றி

      Delete
  9. சில சம்பவங்கள் நடக்கும்போது எப்படி எண்ணம வருவதை தவிர்க்க முடியவில்லை.
    நல்ல கவிதை

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க நண்பரே ,எல்லாம் இறைவன் செயல் என இருந்திடகூடாதே

      Delete
  10. கடவுளென்று ஒருத்தர் வேணும்.அத்தனையும் நலமாய் நட்க்க வேணும் !

    ReplyDelete
    Replies
    1. நானும் அதைத்தான் சொல்லுறேன் அப்பா அம்மா கடவுலேன்பதை யாரும் மறுக்கவோ மறக்கவோ முடியாது அதற்குபின் உங்களை கடவுளாக்க ஒரு துணை வேண்டுமே?

      Delete
  11. கடவுள் ஒவ்வொருவரின் மனதில் உள்ளார் செய்யும் செயலில், பேசும் வார்த்தையில், இருப்பதாகவே நான் நினைக்கிறேன்

    ReplyDelete
  12. நல்லவனாய் இருப்பவன்
    நாளும் மனதால்இறக்கிறான்..

    உண்மையை உரக்க உரைக்கும் பகிர்வு ....

    ReplyDelete
  13. நன்றிங்க,மனகுமறல்தான்

    ReplyDelete
  14. நல்ல சிந்தனைகள் கவிஞரே.

    ReplyDelete
  15. நண்பரே தங்களின் ஆழ்ந்த ஆய்வு கண்டு மகிழ்ந்தேன்.நானே மறந்துவிட்ட இக்கவிதையில் நாணயம் கண்டு பெருமை படுத்தியமைக்கு நன்றி.
    எனது அலைபேசி என்ன.9600166699 முடிந்தால் தொடர்புகொள்ளுங்களேன்

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more