தெய்வங்கள்

தெய்வங்கள்

தேனடை நிறமோ?

தேனடை நிறமோ
தித்திக்கும் சுவையோ

நானருகில்  பார்த்ததுமே
நாணமென்ன சுந்தரியே

நீ அருகில் வந்ததுமே
நீரூற்றாய் ஆனதேனோ

திரவியமே  தேனமுதே
திகட்டாத நற்சுவையே

பூதொடுத்த மாலையிட்டு
புதுத்தாலி  பின்னலிட்டு

ஊர் உறங்கும் வேளையிலே
உன்னையே சொந்தமாக்குவேன்

காத்திருந்து  பார்த்திருந்து
காத்திட்ட கடவுள் முன்னே

ஊர்திரண்டு வாழ்த்திடவே
உன்னையே மணம் முடிப்பேன்

உனக்கு என்னை தந்திடுவேன்
உன்னுயிரோடு கலந்திடுவேன்




Comments

  1. ''...தேனடை நிறமோ
    தித்திக்கும் சுவையோ..''

    வித்தியாச சம நோக்கு .
    இனிய நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

      Delete
  2. ஊர் உறங்கும் வேளையிலே
    உன்னையே சொந்தமாக்குவேன்..

    இரட்டை அர்த்தமா?

    ReplyDelete
    Replies
    1. நீங்க பாடியொரு அர்த்தம் இருப்பதை உணர்த்தியமைக்கு நன்றி ,நான் அப்படி நினைக்கவில்லை எழுதவில்லை,
      கவிஞரின் பார்வையில் அப்படித்தான் இருக்குமோ?

      Delete
  3. அருமையான படைப்பு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வந்தமைக்கும் கருத்து தந்தமைக்கும் நன்றி

      Delete
  4. வாலிபம் திரும்புகிறதா ! நடக்கட்டும்!

    ReplyDelete
    Replies
    1. ஐயாவுக்கு நன்றி,பழைய ஞாபகம்

      Delete
  5. //உனக்கு என்னை தந்திடுவேன்
    உன்னுயிரோடு கலந்திடுவேன்//
    இதுதான் காதல்.நன்று

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க,இதுவும் காதல்

      Delete
  6. ஐயாவுக்கு மறக்க முடியாத ஞாபங்களோ ..
    நன்று

    ReplyDelete
    Replies
    1. ஆம் ,உண்மை ,வந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும் நன்றி

      Delete
  7. கவியாழி ஐயா...

    தேனடையில் உள்ள நிறத்தைக்
    கவிதையில் உவமையாக்கியதை
    முதன் முதலாக உங்கள் கவிதையில் தான் கண்டேன்.

    அருமையான கற்பனை.

    ReplyDelete
    Replies
    1. அப்படிங்களா!நன்றிங்க .எல்லாமே கற்பனைதானே

      Delete
  8. நினைவு மீட்டலோ !

    ReplyDelete
    Replies
    1. ம்..அப்படிக்கூட சொல்லலாம்,வந்த்துக்கும் கருத்து பகிர்ந்ததுக்கும் நன்றி

      Delete
  9. மனம் கவர்ந்த கவிதை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க சார் ,வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

      Delete
  10. மிக்க மிகிழ்ச்சியான நன்றி

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more