தெய்வங்கள்

தெய்வங்கள்

பார்த்ததும் கேட்டதும்

                                    பயணிகள் கவனத்திற்கு
                                                     *****
              நான் அலுவல் நிமித்தமாகவோ அல்லது சொந்த வேலையாகவோ அடிக்கடி  செல்வதுண்டு எனது நான்கு சக்கர வாகனத்தில் அடிக்கடி  செல்வதுண்டு  அவ்வாறு தனியாக செல்வதால் பெட்ரோல் செலவை மீதப் படுத்துவதோடு தேசத்தின் அன்னியசெலாவணியைக் குறைக்கும் விதமாக பேருந்தில் சென்று வருவது வழக்கம்.

             பெரும்பாலான  பேருந்துகளில் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது .அரசாங்க தனியார் ஊர்திகள் பலவற்றிலும் தற்போது காதைப்பிளக்கும் பாட்டு சினிமா போன்றவற்றை துண்டித்து விட்டார்கள் இது விபத்தை தடுக்கவும் கவன சிதறலை தடுக்கவும்  இருக்குமென நினைத்து சந்தோசப்பட்டேன்.
 
           ஆனால் நமது மக்கள் பாட்டு விரும்பி கேட்கிறார்கள் அதனால் எப்போது காதில் ஹெட் போன் மாட்டிக்கொண்டே வருவார்கள்.பிறரிடம் பேசும்போதுகூட நீக்கி விட்டு பேச மாட்டார்கள்,சில சமயம் திடீரென்று பாடுவார்கள் சிரிப்பார்கள்  ஹம் ...ஹம் .. என்றுகூட சொல்லுவார்கள்

           இதெல்லால் ஆர்வ மிகுதியால் அல்ல தன்னிடம் உள்ள கைபேசியில் இந்த வசதியை உபயோகிப்பதற்க்காக செய்வார்கள் அது அவர்களது சொந்தவிஷயம்  இருக்கறவன் கேக்குறான்  ஆனால் ஸ்பீக்கரை ஆன் செய்து  அவனுக்கு பிடித்த கண்றாவிப் பாடல்களை எல்லோரும் கேட்கவேண்டுமா அதுவும் கரகரவெண்று  காதய் கிழிக்கும் சத்தம் தேவையா இதை  எல்லோருமே சகித்துக்கொண்டு எப்படித்தான் பயணம் செய்கிறார்களோ புரியவில்லை.தொடர்வண்டியிலும்  இப்படித்தான் இருக்கிறது

          இதனால் மற்றவரின் நிம்மதி கெடுக்கும் என்பதை பற்றி கவலைபடாமல் இருக்க முடிவதில்லை.பயணத்தின்போது குறைந்தது 50 பேராவது பயணிக்கும் பஸ்ஸில் எல்லோரிடமும் கைப்பேசி இருக்கும் எல்லோரும் அலறவிட்டால் என்னாவது சற்றே சிந்தியுங்கள்  அவ்வாறு செய்வோரிடம் இனிமேலாவது எடுத்து சொல்லுங்கள்.பத்தில் ஒருவர் மாறினாலும் பலன் நல்ல விஷயம் தானே,

          நல்ல விஷயத்தை நாலுபேருக்குச் சொன்னால் தப்பில்லை முயற்சிக்கலாமேஅவ்வாறு செய்வதை ஊக்குவிக்காதீர்கள்.நடத்துனரிடம் சொல்லுங்கள்  சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவனத்திற்கு கடிதம் எழுதுங்கள்  எல்லோரும் முயன்றால் முடியும்.

Comments

  1. நகரப்பேருந்துகளில் அதுவும் புறநகர்களில் ஓடுகின்ற பேருந்துகளில் இந்த செல்போன்களில் பாட்டை பாடவிட்டு படுத்துகிறார்கள் பாருங்க தினமும் ஒரு சண்டை நடக்கிறது...

    இன்னும் பள்ளி நேரங்களில் இது அதிகமாக இருக்கிறது அதை தடுக்க எவ்வளவு நடவடிக்கைகள் எடுத்தால் பேருந்து ரோமியோக்களை கட்டுப்படுத்த முடியவில்லை....


    இதை அவரவர் அறிய வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி,ஒவ்வொரு நபருமே உணர்ந்தாலோலிய ஒன்றும் செய்ய முடியாது உண்மை

      Delete
  2. அருமையான சிந்தனை, நானும் இப்படிப்பட்டவர்களை மிகவும் வெறுக்கிறேன், நான் ஒரு இரவு பயணத்தின் பொழுது, இப்படி ஒரு சம்பவம் நடந்தது, நாள் முழுக்க வேலை செய்ததால் ரொம்ப சோர்வடைந்து இருந்தேன் என்னை தூங்கவிடாமல் இப்படி தொல்லை கொடுத்தார்கள். மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் அமைதி காத்தேன், அவர்களோடு வாக்குவாதம் வேண்டாம் என்பதற்காகவே எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டேன்.

    அருமையான பகிர்வு நண்பரே! தொடர்ந்து உங்களுடைய அனுபவத்தை பகிருங்கள். நானும் பின்தொடர்ந்து படிக்கிறேன்,.

    உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது எனது பக்கமும் வந்து போங்க....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி,வருகிறேன் படிக்கிறேன் கருத்தை பதிவும் செய்கிறேன்

      Delete
  3. இது தான் நாகரீகமாம்...! ...ம்... மாற வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. மனம் மாற வேண்டும் மனிதாக மாற வேண்டும்

      Delete
  4. ஊர் கூடி இழுத்தால்தானே தேர் நகரும்
    அன்றாட நிகழ்வின் அவஸ்தையை
    அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ய்ந்மையான அவஸ்தைதான் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் எடுத்து சொல்லணும்

      Delete
  5. நல்ல விஷயத்தை நாலுபேருக்குச் சொன்னால் தப்பில்லை முயற்சிக்கலாமே

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more