தெய்வங்கள்

தெய்வங்கள்

சாலை விதியைப் பார்

 

பிறக்கும்போதே எழுதி வெச்ச விதியை
பைக்கில பறந்துபோய் மாத்துற பசங்க
இழக்குற வாழ்வை எண்ணி - என்
இதயத்தில் வருந்தி கண்ணீர  சிந்துகிறேன்

பெற்றெடுத்து பேர் வைத்தப் பிள்ளை
பேச்சை கேட்காது அவசர வேலையென்று
அடிபட்டு ஊணமாகி போவதால்-அவனுக்கும்
ஆயுள் முழுதும் கஷ்டம் மட்டும்தான்

தலைக்கவசம்  போடுவதால் தலையை தாங்கி
தன்னிகரில்லாத  உன் உயிரைக் காத்து
சொந்தமும் சுற்றமும் நண்பனும்வாழ்த்த -உன்
சிந்தை மகிழ செழிப்பாய் வாழ்ந்திடலாம்

சாலை விதியை சரியாய் பார்த்து
 நாளைய வாழ்வை நன்றாய்  மதித்து 
பாதையில் வரிசை பாங்காய் செலுத்தி-மிதமான
வேகத்தில் சுகமான பயணம் நன்று







Comments

  1. பிறக்கும்போதே எழுதி வெச்ச விதியை
    பைக்கில பறந்துபோய் மாத்துற பசங்க
    இழக்குற வாழ்வை எண்ணி - என்
    இதயத்தில் வருந்தி கண்ணீர சிந்துகிறேன்//////


    உண்மையான வரிகள். கலக்கல் உங்களிடம் நிறைய பாடம் கற்றுக்கொள்ளவேண்டும் ஐயா. தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆகாஷ் தம்பி ஒவ்வொரிடமும் ஒன்று உள்ளது உங்களிடம்கூட இருக்கலாம் தொடந்து படித்தால் நீங்களும் கலக்கலாம்

      Delete
  2. சாலை விதிமுறைகளே பலருக்குத் தெரியாதே!

    ReplyDelete
    Replies
    1. எல்லோருக்கும் தெரிந்தாலும் மதிப்பதில்லை என்ன செய்ய புரிந்துகொண்டால் அவர்களுக்கு நல்லது

      Delete
  3. நற்கவிதை சார் .. படைத்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி தம்பி,தொடர்ந்து படியுங்கள்

      Delete
  4. சொன்னால் கேட்பார்களா? புரிந்து கொண்டால் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் நல்லது. நம்புவோம்!

    ReplyDelete
    Replies
    1. எல்லோருக்கும் தெரிந்தாலும் மதிப்பதில்லை என்ன செய்ய புரிந்துகொண்டால் அவர்களுக்கு நல்லது

      Delete
  5. இன்றைய சூழலில் அவசியமான பதிவு
    பயனுள்ள பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா, உண்மை அதனால்தான் இதை பதிந்தேன்

      Delete
  6. அருமையான போக்குவரத்து விழிப்புணர்வு! இப்போதைக்கு அவசியமான ஒன்று!. செய்திதாள்களில் தினந்தோறும் விபத்துக்கள் எண்ணிக்கை கூடி கொண்டே போகிறது. விபத்தே இல்லாத நாடு என்று மாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. தலைக்கவசம் அணியாமல் இருப்பதால்தான் இவ்வாறு நடைபெறுகிறது,அதனால்தான் இப்படி பதிவிட்டேன்

      Delete
  7. சாலைவிதியை மதிப்பதை நாம்தான் சொல்லித்தரவேண்டியுள்ளது ஏன் பெரியவர்களே மதிப்பதில்லை

    ReplyDelete
  8. Replies
    1. ஆம் , நண்பரே இப்போதெல்லாம் சாலை விதியை மறுப்பதால் அவர்களது வாழ்க்கை விதியை தீர்மானிக்கிறார்கள் சீக்கிரம் இறக்கிறார்கள்

      Delete
  9. ''..தலைக்கவசம் போடுவதால் தலையை தாங்கி
    தன்னிகரில்லாத உன் உயிரைக் காத்து
    சொந்தமும் சுற்றமும் நண்பனும்வாழ்த்த -உன்
    சிந்தை மகிழ செழிப்பாய் வாழ்ந்திடலாம்..''

    வலைச்சரத்தில் அறிமுகம் கண்டேன் நல்வாழ்த்து.
    இக்கவிதை விழிப்பணர்வுடையது இனிய வாழ்த்து.
    நல்வரவு கூறுகிறேன் என்பக்கத்திற்கு-
    வேதா.இலங்காதிலகம்.

    ReplyDelete
  10. நல்லதொரு விழிப்புணர்வு பதிவு !

    தொடர வாழ்த்துகள்...

    சகோதரர்களே !

    1. முதலில் அவசரமாக செல்வதை தவிர்க்கவும்.

    2. உடல் சோர்வுடன் பயணம் செய்வதை தவிர்க்கவும்

    3. தூக்கமின்மையுடன் பயணம் செய்வதை தவிர்க்கவும்.

    4. தேவையற்ற ரிஸ்க் எடுத்து பயணம் செய்வதை தவிர்க்கவும்.

    5. அதிக பயணிகளுடன் பயணம் செய்வதை தவிர்க்கவும்.

    6. செல்போன் பேசிக்கொண்டு பயணம் செய்வதை தவிர்க்கவும்.

    7. சாலை விதிமுறைகளை கடை பிடித்து பயணம் செய்யவும்.

    8. வாகனத்தின் தன்மை அறிந்து பயணம் செய்யவும்.

    இவற்றை கடைபிடித்தால் ஓரளவு விபத்துகளை குறைக்கலாம்

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more