தெய்வங்கள்

தெய்வங்கள்

மார்கழிப் பூவோ



நிலவும் சூரியனும் சேர்ந்து
நித்திரையில் கனவில் வந்த
நீலக்கண் கோலமங்கை
இவளென்று சண்டையிட்டதால்
பூமிக்கே  வேர்வை வந்ததால்
புல்லெல்லாம் நனைந்து விட்டதோ

பனிபொழியும் அதிகாலையில்
பருவமங்கை  நடந்துந்துவர
முகம்  தெரிய வேண்டாமென
அதிகாலை வராமல்
கதிரவனையே காக்கவைத்து
காலம் மாறி பயந்து  வந்ததோ

மார்கழிப் பூக்களின்
மௌனமான பூக்கும் ஓசை
மலைச்சாரல்  தூறல்போல
பனித்துளியும்  முகமலர்ந்த நீ
மார்கழிப் பூவோ.....


Comments

  1. அழகான கவிதை...

    ReplyDelete
  2. மார்கழிப் பூக்களின்
    மௌனமான பூக்கும் ஓசை
    மலைச்சாரல் தூறல்போல
    பனித்துளியும் முகமலர்ந்த நீ
    மார்கழிப் பூவோ....//
    அருமையான் வரிகள்.

    அருமையான கவிதை.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க ,வருகைக்கு நன்றி தொடர்ந்து படிங்க கருத்தை சொல்லுங்க

      Delete
  3. மார்கழி பனி எனும் கவிதையில் நனைந்தேன்...

    அழகு...

    ReplyDelete
  4. நிச்சயம் சளி பிடிக்காது ,நன்றி

    ReplyDelete
  5. மார்கழிக்கான சிறப்புப் பதிவு அருமை
    "மௌனமாய்ப் பூக்கும் ஓசை "
    வார்த்தை ஜாலம் மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. மார்கழிப்பூ பூக்கும் ஓசை என்னையும் இங்கு அழைத்து வந்தது.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றிங்க ,மென்மையான சத்தம் கேட்க மெதுவாக வாருங்கள்,துல்லியமாய் கெட்டு கருத்தை தாருங்கள்

      Delete


  7. மார்கழிப்பூ பூக்க மணம் முகர மூக்கே!

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் முகர்ந்ததுக்கு ,நன்றிங்க ஐயா

      Delete
  8. மார்கழி கவிதை அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி,வருகைக்கும் நன்றி

      Delete
  9. வந்ததுக்கும் ,வார்த்தைக்கும் நன்றிங்க

    ReplyDelete
  10. ''..நிலவும் சூரியனும் சேர்ந்து
    நித்திரையில் கனவில் வந்த
    நீலக்கண் கோலமங்கை
    இவளென்று சண்டையிட்டதால்
    பூமிக்கே வேர்வை வந்ததால்
    புல்லெல்லாம் நனைந்து விட்டதோ..''

    நல்ல வரிகள் சகோதரா
    .இனிய நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி உறவே,வந்ததுக்கும் வாழ்த்தியதர்க்கும் நன்றி

      Delete
  11. //மார்கழிப் பூக்களின்
    மௌனமான பூக்கும் ஓசை// அழகிய வரிகள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க ,வந்தமைக்கும் கருத்து தந்தமைக்கும்

      Delete
  12. மார்ர்கழிப்பூ அழகு !

    ReplyDelete
    Replies
    1. அது என்ன? மார்ர்களழிப்பூ...வந்ததுக்கும் சொன்னதுக்கும் நன்றி

      Delete
  13. தங்களின்இந்தப் படைப்பை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன். வாருங்கள் ஐயா!http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_20.html நன்றி!-காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
  14. நிசப்தப் பொழுதில் பூப்பூக்கும் ஓசை மட்டும் !

    ReplyDelete
  15. கேட்கத்தான் ஆசை ஆனால் மார்கழியில் அதிகாலையில் நல்லா தூக்கம்தான் வருது

    ReplyDelete
  16. மார்கழிப் பூக்களின்
    மௌனமான பூக்கும் ஓசை
    மலைச்சாரல் தூறல்போல
    பனித்துளியும் முகமலர்ந்த நீ
    மார்கழிப் பூவோ.../

    பனித்துளியும் முகம்மலரும் அழகான கவிதை ... பாராட்டுக்கள்..

    ReplyDelete
  17. நன்றிங்க நட்பே ,அடிக்கடி வாருங்க ஆதரவு தாருங்க

    ReplyDelete
  18. பூமிக்கே வேர்வை வந்ததால்
    புல்லெல்லாம் நனைந்து விட்டதோ

    அருமையான சிந்தனை கவிஞரே..

    மிகவும் இரசித்தேன்.

    ReplyDelete
  19. நன்றிங்க உங்க ரசனை தொடரும் நீங்களும் தொடர்ந்து படிங்க

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more