தெய்வங்கள்

தெய்வங்கள்

இதுவும் மனித இயல்பன்றோ..........

கஷ்டத்தில் வாழும்போது காணாத
சுற்றமும் நட்பும் உதவிக்காய்
இஷ்டமாக வருவார்கள் இல்லையென
இல்லாத ஒப்பாரி வைப்பார்கள்

காரியம் நடைபெற வேண்டுமானால்
கண்ணீர் விட்டும் அழுவார்கள்
கவலைத் தீர்ந்ததும் உணராது
கண்டபடித் தவறாய் சொல்வார்கள்

குற்றம் சொல்லிப் பயனில்லை
குறையாய் எண்ண வழியில்லை
கொள்கை இல்லா மனிதனுக்கு
குணமாய் அமைந்தது இயல்பன்றோ

இல்லை யென்றே சொல்லாமல்
இருக்கும் போதே  கொடுத்திடுங்கள்
கொள்ளை இன்பம் உங்களுக்கு
கொடுத்தே இதயம் மகிழ்ந்திடுமாம்

பெற்றப் பிள்ளைகள் பேரின்பம்
பிணிகள் அகன்றே நன்றாக
இல்லை என்ற நிலையாக
இனிதே மகிழ்ந்தே வாழ்ந்திடுமாம்

இதயம் மகிழ உதவிடுங்கள்
இனிமை வாழ்வுக்கு நிரந்தரமாய்
இதையும் நல்ல சேமிப்பாய்
இருக்கும் போதே செய்திடுங்கள்


-----கவியாழி-----




Comments

  1. நல்ல கருத்துடன் பல உண்மைகள்... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  2. அனைத்தும் உண்மைகள் சகோதரரே. மோனை மாறாமல் மோகனம் பாடுகிறது தங்கள் கவிதை. மிகவும் ரசித்தேன். சுவைக்க தேனாக தங்கள் கவிவரிகளைத் தந்தமைக்கு நன்றிகள்..

    ReplyDelete
  3. காரியம் நடைபெற வேண்டுமானால்
    கண்ணீர் விட்டும் அழுவார்கள்
    கவலைத் தீர்ந்ததும் உணராது
    கண்டபடித் தவறாய் சொல்வார்கள்

    நன்றாக உள்ளது.

    ReplyDelete
  4. இரு டஜன்வரிகளும் இதம் வருடின !
    த.ம 4

    ReplyDelete
  5. "பணத்தின் மீதுதான் பக்தி என்றபின் பந்த பாசமே ஏதடா.. பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாருமே அண்ணன் தம்பிகள்தானடா..." என்கிற கவிஞரின் வரிகளை நினைவூட்டின ஆரம்ப வரிகள்.

    பணத்தைச் சம்பாதிப்பதைவிட மனிதர்களைச் சம்பாதிப்பது பெரிய கலைதான்.

    ReplyDelete
  6. மனித மாண்புகள் காணமல் போக இங்கே நெருக்கடிகள் நிரைய இருக்கிறது சார்.

    ReplyDelete
  7. //இல்லை யென்றே சொல்லாமல்
    இருக்கும் போதே கொடுத்திடுங்கள்
    கொள்ளை இன்பம் உங்களுக்கு
    கொடுத்தே இதயம் மகிழ்ந்திடுமாம்//

    அருமையான வரிகள்.

    ReplyDelete
  8. கொடுப்பதில் கிடைக்கும் இன்பம்
    பேரானந்தம்..

    ReplyDelete
  9. ///காரியம் நடைபெற வேண்டுமானால்
    கண்ணீர் விட்டும் அழுவார்கள்
    கவலைத் தீர்ந்ததும் உணராது
    கண்டபடித் தவறாய் சொல்வார்கள்///
    நிறைய கஷ்டப்பட்டிருக்கிறீர்கள் ஐயா தாங்கள்.

    அண்மைக் காலக்
    கவிதைகளில்
    தங்களின்
    உள்ளக்குமுறல்
    நன்றாகவே தெரிகிறது.
    கவலை வேண்டாம்.
    காய்த்த மரம்தான்
    கல்லடி படும் என்பார்கள்...

    தவறாக கூறியிருந்தால்
    மன்னிக்கவும்

    ReplyDelete
  10. இதயம் மகிழ உதவிடுங்கள்
    இனிமை வாழ்வுக்கு நிரந்தரமாய்
    இதையும் நல்ல சேமிப்பாய்
    இருக்கும் போதே செய்திடுங்கள்

    இயல்பான அழகிய மனித நிலை...!

    ReplyDelete
  11. நல்ல கருத்துக்கள்....

    ReplyDelete
  12. வணக்கம்
    ஐயா

    கவிதை அருமை வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  13. "இல்லை யென்றே சொல்லாமல்
    இருக்கும் போதே கொடுத்திடுங்கள்
    கொள்ளை இன்பம் உங்களுக்கு
    கொடுத்தே இதயம் மகிழ்ந்திடுமாம்" என்ற அடிகளில்
    சிறந்த வழிகாட்டல் மின்னுகிறதே!

    ReplyDelete
  14. கருத்துள்ள கவிதை.....

    பாராட்டுகள்.

    ReplyDelete
  15. "இதயம் மகிழ உதவிடுங்கள் ''. நல்ல கருத்தை எடுத்துச் சொல்கின்றது கவிதை.

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more