தெய்வங்கள்

தெய்வங்கள்

இன்று நீரழிவு நோய் தினம்

எல்லா வயதினரும் பயப்படும்
இளையோர் கூட அகப்படும்
பொல்லா நோயாம் நீரழிவு
புரிந்தே நடந்தால் போய்விடும்

தினந் தோறும் மதுப்பழக்கமும்
தீராத மனநோயுமே தொடர்ந்தால்
வேராக வளர்திடுமாம் நீரழிவு
வினையாக நோயாக வந்திடுமாம்

மருந்தே இதற்க்குத் துணையாக
மாலைகாலை  தின்று வந்தால்
மறையும் காலம் அதிகரித்தே
மறுபடி நோயும் தொடர்ந்திடுமாம்

காலை மாலை வேளைகளில்
கடினமான பயிற்சி செய்து
வேளை தோறும் மருந்துகளை
விட்டு விடாமல் சாப்பிட்டும்

வியர்வை பார்த்தே விளையாடி
வீதியில் காலாற நடமாடி
விதியால் வந்த வியாதியை
விரைவில் கட்டுக்குள் வைக்கலாம்

மனதில் கவலை வைக்காமல்
மருந்தை துணைக்கு அழைக்காமல்
தினமும் பயிற்சி செய்தாலே
திரும்ப வராமல் தடுத்திடலாம்

உடற்பயிற்சியும் மனவலிமையும்
உடலுறுப்பை உறுதி செய்யும்
மனவளக் கலையையும் யோகாவும்
மருந்தைவிட சிறந்த பலனாகும்


********கவியாழி*********





Comments

  1. வணக்கம் சகோதரரே.
    ஆரோக்கியம் பேணி காக்க வேண்டியது என்பது பற்றிய விழிப்புணர்வு கவிதை. அனைவரும் மனதில் தேக்கி வைக்க வேண்டிய வரிகள். அருமை. பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றி

      Delete
  2. வணக்கம்
    ஐயா

    அருமையான ஆரோக்கிய பதிவு கவிதையில் சொல்லியுள்ளிர்கள் உடல்பயிற்சி எடுக்க வேண்டும் என்பதை இத்தினத்தில் சொல்லியது அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றி

      Delete
  3. அருமையான கருத்துடன்
    சிறப்புப் பதிவு வெகு வெகு சிறப்பு
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. ''..மனதில் கவலை வைக்காமல்
    மருந்தை துணைக்கு அழைக்காமல்
    தினமும் பயிற்சி செய்தாலே
    திரும்ப வராமல் தடுத்திடலாம்...''
    Eniya vaalththu...
    http://kovaikkavi.wordpress.com/2013/11/10/12-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/
    well come..
    Vetha.Elangathilakam

    ReplyDelete
  5. வந்த பின் காப்பது பற்றி சொல்லிட்டீங்க ...வருமுன் காப்பது குறித்தும் சேர்த்தியிருக்கலாமே...

    ReplyDelete
  6. அருமை! இளையோருக்கு கூட இந்த நோய் பீடித்துகொள்கிறது! தக்க சமயத்தில் வெளியிடப்பட்ட சிறந்த அறிவுரை கவிதை! நன்றி!

    ReplyDelete
  7. எனக்குத் தேவையான பதிவு! நன்றி கவியாழி கண்ணதாசன் அவர்களே.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றி

      Delete
  8. நன்றிங்க சார்.

    ReplyDelete
  9. பேரில்மட்டுமே இனிமைக் கொண்ட கசப்பு நோய்க்கு உங்களின் இனிய கவிதை அருமை !
    த.ம 5

    ReplyDelete
    Replies
    1. சரியாச்சொன்னீங்க பகவானே

      Delete
  10. நல்ல உடல் நலக் கவிதை அய்யா , தொடர்க வாழ்த்துகளுடன்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் தங்கள் வருகைக்கும் நன்றி

      Delete
  11. "உடற்பயிற்சியும் மனவலிமையும்
    உடலுறுப்பை உறுதி செய்யும்
    மனவளக் கலையையும் யோகாவும்
    மருந்தைவிட சிறந்த பலனாகும்" என்ற
    வழிகாட்டலை
    உளநல மதியுரைஞர் (counsellor) என்ற வகையில்
    எல்லோரும் பின்பற்றலாம் என்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. ஆம்.உண்மைதான்.தங்கள் வருகைக்கு நன்றி

      Delete
  12. //மனதில் கவலை வைக்காமல்
    மருந்தை துணைக்கு அழைக்காமல்
    தினமும் பயிற்சி செய்தாலே
    திரும்ப வராமல் தடுத்திடலாம்//
    அருமை! மிகவும் ரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க .தங்கள் வருகைக்கு நன்றி

      Delete
  13. Please read the book " Health in your hands vol I & II " written by devendra vora, if you follow this treatment which can be done at home with simple methods, 46th day onwards the person who was branded as diabetic patient can eat sweets like any other person only thing he has to chew properly before swallowing any food. After that he does not any diabetic medicine life time. Vol I is available in tamil also

    ReplyDelete
    Replies
    1. இதையே நீங்களும் கட்டுரையாய் எழுதலாமே

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more