தெய்வங்கள்

தெய்வங்கள்

நேரம் எனக்குப் போதவில்லை

நேரம் எனக்குப் போதவில்லை
நிம்மதியாய்த் தூங்க வில்லை
தூரம் அதிகமாய் ஒருவீடும்
தொல்லையின்றி  மறுவீடும் இருப்பதால்

காலைமாலை என அலைச்சலால்
கண்ணெரிச்சல் குறைய வில்லை
கண்டபடி தூங்க வேண்டியே
கண்ணு ரெண்டும் அழைத்தே

உடல் சூடும் குறையவில்லை
உள்ளபடி எந்தக் குறையுமில்லை
உண்மையாகச் சொன்னாலே எரிச்சல்
உடம்பெல்லாம் தாங்க முடியவில்லை

மகிழுந்தில் சென்றாலும் வெக்கை
மறுபடியும் நிழலையே தேடுது
மகிழ்ச்சியை மறந்தே மழையும்
மக்களை  இப்படி  வதைக்குது

வேலைச் செய்யவும் நேரம்
வீணாய்க் கடந்து போகுது
விடியல் காலை எழுந்தாலும்
விழியில் கண்ணெரிச்சல் இருக்குது

வெள்ளாமை இல்லாத நிலமும்
விலைவாசியில் துள்ளிக் குதிக்குது
எல்லா இடமும் சென்னையில்
இப்படித்தான் வீடாய் இருக்குது

இயற்கையின் சதியும் காரணமாய்
இன்றையச் சூழல் இருக்குது
என்னைப்போல் எத்தனைப்பேர்
எரிச்சலால் மனம் தவிப்பது



Comments

  1. எரிச்சல் விரைவில் தீரட்டும் ஐயா...

    ReplyDelete
  2. குளுமை சென்னைக்கு வரட்டும் ஐயா..

    ReplyDelete
  3. பரபரப்பான வாழ்க்கையில் இயற்கையின் எரிச்சலும் சேர்ந்து பாடாய் படுத்தத்தான் செய்கிறது...

    ReplyDelete
  4. ''...மகிழ்ச்சியை மறந்தே மழையும்
    மக்களை இப்படி வதைக்குது...'''
    நேரம் வரட்டும்.
    Vetha.Elanagthilakam.
    http://kovaikkavi.wordpress.com/2013/10/27/30-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b5%e0%af%81/

    ReplyDelete
  5. விரைவில் உங்கள் தேடல்கள் அனைத்தும் கிடைத்து
    நலன் நிறைய வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more