தெய்வங்கள்

தெய்வங்கள்

பேயும் வாழட்டும் மகிழ்ந்தே.............

பேயும் இருந்தால் நன்றே
பேதைமை கொள்வோரைக் கடித்தே
போதையும் கொண்டே மீண்டும்
பேயும் வதைக்கட்டும் தொடர்ந்தே

அரக்கனை அழிக்க வேண்டாம்
அவனையே வாழவும்  வைத்தால்
அத்தனை திருடனையும்  கொன்றே
அகிலமும் சிறக்கும் நன்றே

உணவில் கலப்படம் செய்வோர்
உரிமையை  மறுத்திடும் முதலாளி
ஊரையே சுரண்டும் தலைவன்
ஊழலை வளர்க்கும் மனிதன்

சோம்பலை விரும்பும் மக்கள்
சொன்னதைக் கேட்கா  இளைஞன்
சுரண்டலைச் செய்யும்  அரசியலார்
சுற்றித் திரியும் சோம்பேறி

உழைக்க மறுக்கும் கணவன்
ஊதாரி செலவிடும் பெண்கள்
உடலை வருத்தா ஊழியன்
உண்மையே சொல்லாத் திருடன்

நாளையை விரும்பா மாணவன்
நாணயம் இல்லா ஆசிரியர்
நலிந்தவர் வாழ்வைச் சுரண்டியே
நாளும் வட்டிக் கேட்பவன்

போன்றோரைக் கொன்று வதைக்கவே
போக்கிடம் இன்றி அலைந்தே
பொழுதும் கொல்லுதல் செய்தே
பேயும் வாழட்டும் மகிழ்ந்தே



=======கவியாழி======





Comments

  1. இப்படிப்பட்டவர்கள் இருப்பதால் பேயும் வாழட்டும்...!

    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க நண்பரே

      Delete
  2. இப்படிப்பட்ட ஒரு பேயிருந்தால் அதுவும் வாழட்டும்
    மற்றவரையும் நன்று வாழவைக்கட்டும்
    அருமை ஐயா

    ReplyDelete
  3. வித்தியாசமான ஆசை. அந்தப் பேய் அவர்களை மட்டுமே கொல்ல வேண்டுமே... நல்ல மனம் கொண்டோரையும் சேர்த்தே கொன்றால்...? :)))))

    ReplyDelete
    Replies
    1. அப்படி அந்தப் பேய் நல்லவங்களை ஒன்றும் செய்யாது

      Delete
  4. இப்படிப்பட்ட பேய் இருந்தால் கள்ளன் நல்லவன் ஆகிருவான் - அருமை...!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் மனோ. திருத்த வந்தப் பேய் அல்லவா?

      Delete
  5. கெட்டவர்களை மட்டுமே ஆட்டிப்படைக்கும் நல்ல பேய் போல!!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்.கெட்டவங்களை மட்டுமே அழிக்கும்

      Delete
  6. இந்த பேய்களை அந்நியன் என்றும் ,இந்தியன் என்றும் சினிமாவில் பார்த்தோம் .நேரில் ...?பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள் என்ற பாரதியாரின் வரிகள் நினைவில் வருகிறது !

    ReplyDelete
    Replies
    1. இன்று பணம் திண்ணுவோரைத் தின்றால் தவறில்லையே

      Delete
  7. வாழ்த்துகள் அய்யா...

    பேயும் வாழட்டும்...!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க வெற்றிவேல்

      Delete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. பேயும் வாழட்டும்! வித்தியாசமான கவிதை...

    ReplyDelete
  10. அருமையான கவிதை! வித்தியாசமான தலைப்பு! அருமை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிங்க சுரேஷ்

      Delete
  11. வித்தியாசமான சிந்தனை சகோதரரே.
    சங்க இலக்கியங்கள் கூறும் சதுக்கப் பூதம் போல் இந்த பேயும் போல. இதையெல்லாம் செய்யும் இந்த பேய் பதினாறும் பெற்று பெறுவாழ்வு வாழட்டும். பகிர்வுக்கு நன்றீங்க சகோதரரே..

    ReplyDelete
    Replies
    1. ஆம்.வாழவேண்டும் இப்படியானவர்களைத் தின்றே வாழவேண்டும்

      Delete
  12. தீயோரையும் நல்லோர் ஆக்க வேண்டும் இந்த பேய்.
    கவிதை நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆம்.நல்லவர்களாய் மாற்றும்

      Delete
  13. ''..பேதைமை கொள்வோரைக் கடித்தே
    போதையும் கொண்டே மீண்டும்
    பேயும் வதைக்கட்டும் ...'''
    god idea...
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. வதைக்கவே வரவேற்கிறேன்

      Delete
  14. சமுதாய நோக்குள்ள பேய்... மிக அருமை ஐயா!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்.இப்படியும் வேண்டும்

      Delete
  15. மாறுபட்ட அருமையான சிந்தனை
    படித்து அகமகிழ்ந்தேன்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க

      Delete
  16. பேய் பிசாசு பூதம் இவையெல்லாம் அஞ்சி நடுங்கும் ஒரு விலங்கு இப்போது உலகில் உள்ளது கவிஞரே..

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? இத்தியாவுக்கு வரச்சொல்லுங்களேன்

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more