தெய்வங்கள்

தெய்வங்கள்

சின்னஞ் சிறு விதைகள்-5

பணத்தை நானும் மதிப்பதில்லை-அதனால்
பணமும் என்னிடம் தங்குவதில்லை

தப்பாக நட்பை சொன்னதில்லை-இன்றும்
தவறாக யாரிடமும் பழகுவதில்லை

தோல்வியின் முகத்தை ரசித்ததுண்டு-அங்கே
தோழனின் நட்பை கண்டதில்லை

விடியும்வரை நான் காத்திருந்து -விளக்கை
விரைந்தும் அணைத்த தில்லை

துணையாய் நானும் இருந்ததுண்டு-அன்பாய்
துணிந்து நெருங்கி வந்ததுண்டு

வேதனையால் வீறி அழுததுண்டு-எதிரி
வீசும் பார்வையைக் கண்டு

நன்றி மறந்து வாழவில்லை-அதையும்
நானும் மறுத்துப் பேசவில்லை

கொள்கை மறந்து நினைவில்லை-என்றும்
கோழையாக நானும் விரும்பவில்லை

இத்தனை தூரம் வருவதற்கு-நட்பே
இணைத்து வந்ததை மறக்கவில்லை

Comments

  1. ''..இத்தனை தூரம் வருவதற்கு-நட்பே
    இணைத்து வந்ததை மறக்கவில்லை..''
    சில வேளை இந்த நட்பே பொய்யாகியும் போவதுண்டல்லவா!
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சில நேரங்களில் அப்படியும் நிகழ்வதுண்டு.நன்றிங்கம்மா நீங்க வந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும்

      Delete
  2. நல்ல கவிதை .
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அழகாகச் சொன்ன அருங்கவிதை சகோதரரே!
    தளராமல் முன்னேறுங்கள் தவிர்த்திடுங்கள் சோகம்...

    கற்பனை வாழ்க்கை காலத்தே துணைவாராதென
    பற்பல துன்பங்கள் பலகண்டு மனம்வாடி
    சொற்களால் சோகம் சொன்னாலும் என்றென்றும்
    நற்துணையாம் நட்பென நவின்றீர் நனிநன்றி!

    த ம. 2

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கம்மா,நாளும் வந்து நாலுவார்த்தை நல்லதாய் சொல்வதால் எனக்கும் ஆறுதலாய் உள்ளது.

      Delete
  4. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க அய்யா

    ReplyDelete
  5. தப்பாக நட்பை சொன்னதில்லை-இன்றும்
    தவறாக யாரிடமும் பழகுவதில்லை//

    அழகான வரிகள்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்.விருப்பமில்லாத நபரிடம் விலகி நிற்பதே நல்லதுதானே.

      Delete
  6. Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க

      Delete
  7. அருமையான வரிகள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. நல்ல மனசாட்சியே நண்பனாய் அமைந்துவிட்ட வாழ்க்கையில் என்றுமே நடுக்கம் உண்டாவதில்லை. நல்லதொரு கவிதைக்குப் பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றிங்கம்மா

      Delete
  9. அழகான வரிகள்

    ReplyDelete
  10. ஒவ்வொரு வரியும் அருமை..நல்ல கவிதை

    ReplyDelete
    Replies
    1. தாமதமாய் வந்தாலும் உங்க கருத்துக்கு நன்றி

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more