தெய்வங்கள்

தெய்வங்கள்

நேசமுள்ள நட்பு

சொந்தமாய் உறவாய்
சொல்லமுடியா உணர்வாய்
நெஞ்சமே மகிழ்வாய்
நேசமுடன் இருப்பார்

காசுபணம் தேவையில்லை
கற்பனையாய் வருவதில்லை
நேசமுள்ள நட்புக்கு-எப்போதும்
நேரம் காலம் போதவில்லை

ஆணோ பெண்ணோ
அன்புக்கு விலையேது
அடுத்தவரை நம்பிவிட்டால்
அவதிக்கு உணர்வேது

ஏசுவோர் இவரைப்பற்றி
என்னென்ன சொன்னாலும்
பேசுவோர் தவறாக-பிரிக்க
பெருங்குறையைச் சொன்னாலும்

ஈசனே எதிரில் வந்து
இல்லாததைச் சொல்லி
இருவரையும் பிரித்தாலும்
இயலாமல் போய்விடுமாம்

உறவென்றே இருப்பார்கள்
உருகியுருகியே சிரிப்பார்கள்
பெருமையாக நட்புகொண்டு
பேரின்பம டைவார்கள்

துன்பமே வந்தாலும்
தோள்கொடுத் திருப்பார்கள்
துடிப்போடு  எப்போதும்-அன்பு
துணையாக இருப்பார்கள்

Comments

  1. உண்மையான நட்பை அழகாக படம் பிடித்து விட்டு காட்டிவிட்டீர்கள்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நண்பரே வந்தமைக்கு நன்றி

      Delete
  2. நாம் உரிமையோடு பேசும் உண்மையான நட்பின் உள்ளம், நமது தோள்கள் போல...

    ReplyDelete
    Replies
    1. தோளோடு தோள் கொடுப்பவன் நண்பன் மட்டுமே

      Delete
  3. துன்பமே வந்தாலும்
    தோள்கொடுத் திருப்பார்கள்
    துடிப்போடு எப்போதும்-அன்பு
    துணையாக இருப்பார்கள்//

    தோள் கொடுப்பான் தோழன் அல்லவா!
    அன்புதுணை நட்பு தான்
    அருமையான கவிதை

    ReplyDelete
    Replies
    1. தோழனுக்கோ,தோழிக்கோ இணை யாரிருக்க முடியும்

      Delete
  4. தலைப்பும் அதற்கு விளக்கமாய் அமைந்த
    கவிதையும் அருமை
    (கவிதைக்கு அருமையான விளக்கமாக
    உங்களை நினைத்துக் கொண்டேன் )
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கொடுக்கும் ஊக்கம் என்னை மேலும்மேலும் வளரச்செய்கிறது நன்றிங்க சார்

      Delete
  5. சந்தம் அழகுறவே சங்கீத ஒலிக் கவிதை!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் இவ்வாறு கூறியமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன் .எனது நீண்ட நாள் ஆசை உங்களிடம் பாராட்டு கிடைக்க ஏங்கினேன் இன்று மகிழ்கிறேன்

      Delete
  6. நன்பெண்டா...
    கவிதை அழகு..

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து வாங்க தருண்

      Delete
  7. நட்பின் உன்னதம் சொன்ன கவிதை! மிக்க நன்று!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கம்மா .மகிழ்ச்சியாய் உள்ளது

      Delete
  8. நட்புக்கு நல்லிலக்கணம்
    நன்றேதான் சொன்னீர்கள்... கவிஞரே..

    அழகிய கவிதை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க இளமதி.நட்புக்கு நாடோ மொழியோ கிடையாது.

      Delete
  9. நட்பைப் பற்றிய கவிதை அருமை.

    ReplyDelete
    Replies
    1. அம்மா நீங்க வந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி

      Delete
  10. உண்மையான நட்பின் அழகான இலக்கணம்...அருமை ..

    ReplyDelete
    Replies
    1. சரியான நேரத்தில் சரியாக சொல்லும் உங்களின் கருத்துக்கு நன்றி

      Delete
  11. அருமையான கவிதை கவியாழி ஐயா.
    மனம் தொட்டது.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கம்மா .நட்பின் நயம் தெரிந்த நீங்கள் கூறியது மகிழ்ச்சியாய் உள்ளது

      Delete
  12. எத்தனை தடைகள் வந்தபோதும் தோள் கொடுத்து தொடரும் உண்மையான நட்பு .அருமையான கவிதையாக .

    ReplyDelete
    Replies
    1. நீங்க என் தளத்துக்கு வந்தமைக்கு நன்றி சொல்கிறேன் தொடர்ந்து வாங்க

      Delete
  13. நட்புப் பற்றிய நல்லதொரு கவிதை

    ReplyDelete
    Replies
    1. குட்டன் நலமா? நீண்ட நாட்களாய் எதிர்பார்த்தேன் இன்று மகிழ்ந்தேன் நன்றி

      Delete
  14. நட்பை சொன்ன விதம் அருமை !

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க நண்பரே.தொடர்ந்து வாங்க

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more