தெய்வங்கள்

தெய்வங்கள்

குறையே பேசும் நண்பர்களே


குறையே பேசும் நண்பர்களே
குறைத்தே மனதில் காயங்களை
மறைந்துப் போகா வார்த்தைகளை
மறுபடி மடிந்து பேசுவதேன்

நிறைகளை நீங்கள் பேசினால்
நியாயமாக முதுகில் தட்டினால்
பறந்தே போகும் வலியெல்லாம்
பார்ப்பவர் மனதில் மகிழ்ச்சியாய்

தவறே அவரும் செய்தாலும்
தனையே மறந்து புரிந்தாலும்
உறவை வளர்க்க உறுதுணையாய்
உள்ளதைச் சொல்லி திருத்தலாமே

உலகில் பலபேர் இருந்தாலும்
உணர்த்த முடியா காரணத்தால்
பகையே அதனால் உண்டாகி
பலரும் வருந்தும் நிலைவேண்டா

ஒற்றுமை கொண்டு வாழ்வதினால்
உயர்வே நிறைய பெற்றிடலாம்
கற்றவர் இதனை கண்டுரைத்து
கண்டவர் திருந்த வாய்ப்பளிப்போமே


Comments

  1. உறவுகள், நண்பர்கள் வாழ்வு முழுவதும் தொடர வேண்டும் என்றால், மனதில் ஏற்றுக் கொள்ள வேண்டிய வரிகள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உண்மையான நட்புக்கும் அன்புக்கும் நன்றிங்க நண்பரே

      Delete
  2. அருமையான ஆழமான சரியான வழிகாட்டும் பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வாழ்த்துக்கு நன்றிங்க சார்

      Delete
  3. பதிவு துவங்கிய சில மாதங்களில்
    தமிழ் மண தர வரிசைப்பட்டியலில்
    முதல் பத்தில் வந்த சாதனைப் படைத்தவர்
    நீங்களாகத்தான் இருப்பீர்கள் என நினைக்கிறேன்
    சாதனைக்கும் சாதனை தொடரவும்
    மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்.உங்களின் ஆதரவாலும் அன்பினாலுமே என்னால் இவ்வாறு முதல் பக்கத்தில் இடம்பெற முடிந்தது.என்றென்றும் நன்றியுடன் .கவியாழி

      Delete
  4. உண்மையில் எப்படித்தான் இப்படி மிக நுணுக்கமாக பலவிடயங்கள உங்கள் கவிக்கருப்பொருளாக்குகின்றீர்களோ...
    வியக்கின்றேன் சகோ. உங்களை வாழ்த்துவது எப்படி என புதிதாய் வார்த்தைகளை தேடுகின்றேன்...:)

    நல்ல சிந்தனை. மனதில் தானும்வளர தன் சுற்றம் நட்பு வளர யாவரும் கடைப்பிடிக்கவேண்டிய முக்கிய பண்பு.
    அழகிய கவிதை. மிகவும் ரசித்தேன். உளமார்ந்த இனிய வாழ்த்துக்கள் சகோ!

    குறைகாணா மனம்தான் நிறைவாக வேண்டும்
    குறைகளை நிறைவாக்கக் கூறின் குறையில்லையே
    சிறப்பானகவி தந்த சிந்தனைச்சிற்பி நீரல்லவோ
    நிறைமனம் உமக்குண்டு நினைக்காதீர் குறையெனஇதை...

    ReplyDelete
    Replies
    1. இப்படியும் சிலர் இடிந்துரைத்ததால் எனக்கு இப்படி எழுத தோன்றியது.மேலும் உங்களைபோல நட்புடன் ஆதரவு தந்ததால் தான் நான் தமிழ் மணத்தில் முதல் பத்து இடத்தில் இடம்பெற முடிந்தது

      Delete
  5. ''..நிறைகளை நீங்கள் பேசினால்
    நியாயமாக முதுகில் தட்டினால்
    பறந்தே போகும் வலியெல்லாம்...'''
    NeXT....
    ''உறவை வளர்க்க உறுதுணையாய்
    உள்ளதைச் சொல்லி திருத்தலாமே
    ...'' இரண்டு வரிகளிலும் சிறது நெருடல் உண்டோ!......
    நிறைகளைக் கூறுங்கள்.....
    .உள்ளதைக் கூறுங்கள்.....
    எனக்கு தோன்றியது.
    இனியவாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. நிறைகள் என்பதை நல்லதை என்றும் உள்ளதை என்பதை இருப்பதை என்று மாற்றி வாசித்தால் சரியாக இருக்குமென நினைக்கிறேன்

      Delete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. தவறாக சொன்னாலும் தெளிவாகத் தெரியாத தகவல்களைச் சொல்லியமைக்கு நன்றி

      Delete
  7. குறைகளை சொல்லியே பழக்கப்பட்டவர்கள் தன்னால் முடியாத ஆதங்கத்தை தீர்த்துக்கொள்கிறார்கள் என அவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்காமலிருப்பது உன்னதம்...

    கவிதை அருமை

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வதையும் ஏற்றுக் கொள்கிறேன்

      Delete
  8. குறைகளைப்பற்றி நிறைவான வரிகள்

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  9. வணக்கம் தோழரே....இது தேவையான கருத்து, எப்போதும் தேவைப்படும் கருத்து. தொடரட்டும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க தோழரே.தொடர்ந்து வாங்க ஆதரவு தாங்க

      Delete
  10. குறைகளை முதலில் சொல்லாமல் ஒருவரிடம் இருக்கும் நிறைகளை முதலில் பாராட்டிவிட்டு பின்பு அவரிடம் இருக்கும் குறையைச் சொல்லி களையும் வழியும் சொன்னால் ஒருவேளை அவர் மனமுவந்து ஏற்றுக்கொள்ளக் கூடும். இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும் என்னும்போது நட்பில் இடித்துரைத்தலும் எடுத்துரைத்தலும் ஒரு பங்காய் இருப்பது அவசியம்தான். நட்பின் இலக்கணம் மீறிய செயல்களே பகைமையைத் தூண்டுகின்றன. நல்ல நட்பை நாளும் விழைவோர் மனத்தில் இருத்த வேண்டிய அருமையானப் பாடத்தை அழகிய கவியாக்கிய தங்களுக்குப் பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்கம்மா

      Delete
  11. குறை சொல்பவர்கள் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள்.அதை கண்டு கொள்ளாமல் விட்டு விடவேண்டியதுதுதான்
    உங்கள் கவிதையில் குறை ஒன்றுமில்லை.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க நண்பரே உண்மையை சொன்னமைக்கு

      Delete

  12. குற்றம் பார்கில் சுற்றம் இல்லை!

    ReplyDelete
  13. குறையாக இருப்பவர் தான்
    மற்றவர்களின் குறைகளைக்
    கூர்ந்து பார்ப்பார்.

    நிறை குடம் என்றும் தளும்பாது.
    கவிதை அருமை.
    வாழ்த்துக்கள் கவியாழி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கம்மா வந்ததுக்கும் வாழ்த்து சொல்லியமைக்கும் நன்றிங்க

      Delete
  14. நல்ல சிந்தனை கவிதை.

    "தூர்த்துவார் தூத்தட்டும் போற்றுவார் போற்றட்டும்."........என்பதுதான் நினைவுக்கு வருகின்றது.

    ReplyDelete
    Replies
    1. வந்தமைக்கும் கருத்துத் தந்தமைக்கும் நன்றி

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more