தெய்வங்கள்

தெய்வங்கள்

காரணம் நிச்சயம் பணமாமே

பாட்டிச் சமையலை புசித்தீரா
பாட்டன் கதையை கேட்டீரா
பணமும் அதிகம் செலவில்லை-உறவு
பண்பே குறைந்தும் போவதில்லை

அங்கும் இங்கும் அலைவதனால்
அறமே மறந்து வாழ்வதினால்
பண்பும் கெட்டு வாழ்கிறார்-இதையே
படித்தவர் தானே செய்கின்றார்

கற்பனையான வாழ்க்கைதனை
காணத்தானே  தவறு செய்யும்
சிற்சில மக்களின் தவறுகளால்-மகிழ்ச்சி
சிதறிடும் வாழ்க்கை நியாயமா

தேடி எங்கும் செல்லாமல்
தெய்வம் வந்து சொல்லாமல்
கூட்டம் கூடி வாழ்ந்தாலே -நன்மை
கோடிப் புண்ணியம் கூடுமே

பெற்றோர் துணையும் இல்லாமல்
பிறிதொரு வாழ்க்கைத் தனியாக
கற்பனை கொண்டவாழ்க்கைக்கு-உண்மைக்
காரணம் நிச்சயம் பணமாமே





Comments

  1. தேடி எங்கும் செல்லாமல்
    தெய்வம் வந்து சொல்லாமல்
    கூட்டம் கூடி வாழ்ந்தாலே -நன்மை
    கோடிப் புண்ணியம் கூடுமே

    காரணம் நிச்சயம் பணமே..!

    ReplyDelete
  2. மனமே இல்லாதவர் பணமே கதியென கிடப்பர்

    ReplyDelete

  3. வணக்கம்!

    பணத்துக்கு அடிமையெனப் பாழ்பட்டால் நம்முடைய
    மனத்துக்கு உளதோ மகி்ழ்வு!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. மனதுக்கும் மருந்திட்டு
      பணமே கதியென
      மயங்கிக் கிடக்காத
      மானிடன் இல்லையே

      Delete
  4. //பாட்டிச் சமையலை புசித்தீரா
    பாட்டன் கதையை கேட்டீரா
    கூட்டம் கூடி வாழ்ந்தாலே -நன்மை
    கோடிப் புண்ணியம் கூடுமே//

    அருமையான கவிதை வ‌ரிகள்!! பெற்ற‌வர் அருமையே தெரியாத இந்தக் காலத்தில் கூடி வாழ்கின்ற அருமை எங்கே புரியப்போகின்றது? பணமும் சுயநலமுமே காரணங்களாகப்போய் விட்டன இன்று!!

    ReplyDelete
    Replies
    1. அவசியமே ஐந்துபேர் கருதினாலும் அடுத்தத் தலைமுறை நிச்சயம் யோசிக்கும்

      Delete
  5. அந்தக் காலப் பெற்றோரை விடவும் அதிகம் சம்பாதிக்கும் இந்தக் காலப் பிள்ளைகள் மனத்தை விடவும் பணத்துக்கே முக்கியத்துவம் அளிக்கும் அவலம் எங்கும். அதன் விளைவை அழகிய பாடலால் அனைவரும் அறியத் தந்தீர். நன்றியும் பாராட்டும் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் . பிள்ளைகளுக்கு இப்போதே பணமும் அவசியமும்ப் பற்றி சொல்லி வளர்க்க வேண்டும்.பணம் என்பது வாழ்க்கைக்கு தேவைதான் ஆனால் பணமே வாழ்க்கையில்லை

      Delete
  6. பணத்தை விட மனமே உயர்ந்ததென்று எடுத்தியம்பிய இனிய கவிதையை மிக ரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ரசனைக்கு நன்றி ,ரசிப்பதற்கும் மனது வேண்டுமே

      Delete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. பெரும்பாலோரின் இன்றைய நிலையை
    தெளிவாக உணர்த்திப் போகும் கவிதை அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. என்ன சொல்ல என்ன செய்ய எதற்கும் காரணம் பணம்தானே

      Delete
  9. நன்றிங்க சார்

    ReplyDelete
  10. இன்றைய நிலைமையை அழகா சொல்லி டீங்க கற்பனை வாழ்க்கைக்கு பணமே மூலம் என்று என்று கற்பனை விட்டு வெளியே வருவார்களோ
    நல்ல கவிதை

    ReplyDelete
    Replies
    1. பணமும் தேவைதான் அளவுக்கு மீறினால் ஆபத்தில் முடிந்துவிடும் என்பதை அறிய வேண்டும்

      Delete
  11. /// கூட்டம் கூடி வாழ்ந்தாலே -நன்மை
    கோடிப் புண்ணியம் கூடுமே ///

    மிகவும் பிடித்த வரிகள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நண்பரே எனக்கும் பிடித்த வரிகள்

      Delete
  12. பணத்துக்காக ஓடி உறவுகளை புறக்கணிப்பவர்கள், ஒரு நாள் கீழே விழும்போதுதான் உறவுகளின் அருமை தெரிந்து வருந்துவர்...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் உறவுகளின் அருமை விழும்போதுதான் தெரியும்

      Delete
  13. சிறந்த கருத்து! அழகிய கவிதை சகோதரரே! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்க இளமதி.

      Delete
  14. கூட்டுக் குடும்பம் நாட்டுக்கு நலம்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அய்யா எல்லோருக்குமே நலம்தான்

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more