தெய்வங்கள்

தெய்வங்கள்

வாழ்த்துச் சொல்லி மகிழ்வாரா

குருவை மிஞ்சினால்
கோபப்பட்டு  விடுவாரா
கோபத்தில் என்மேல்-செல்லமாய்
சேற்றை பூசி விடுவாரா

இன்னும் கொஞ்சம் முன்னேற
இனிய வார்த்தைச் சொல்வாரா
இப்படியே இருக்கட்டுமென
ஓட்டுப்போட மறுப்பாரா

கூட்டத்தில் என்பேரை
கூப்பிட்டு அழைப்பாரா
கோடிபுண்ணியம் கிடைத்திடவே
கொஞ்சி என்னை அணைப்பாரா

வீட்டுக்கு என்னையழைத்து
விருந்தும் கூடத் தருவாரா
வீறுகொண்டு சென்றிடவே
வாழ்த்துச் சொல்லி மகிழ்வாரா

ஒன்றுமே புரியவில்லை
ஊமையாய் நிற்கின்றேன்
நன்றே தெரிந்த நான்கு -வார்த்தை
இன்றே உரைப்பீரே நல்லோரே




Comments

  1. குருவை மிஞ்சிய சிஷ்யருக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. ''..இன்னும் கொஞ்சம் முன்னேற
    இனிய வார்த்தைச் சொல்வாரா..''
    சொல்பவர் தான் குரு.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்தும் உண்மையாய்
      உள்ளம் மகிழச் செய்யுதே
      சொல்லும் வாழ்த்து எனக்கு
      சொர்க்கமாக உள்ளதே

      Delete
  3. நீங்கள் தேடிய குரு நல்லவர்தானே... நீங்களும் நல்ல சீடன்தானே..,
    பிறகேன் கலக்கம். கிடைக்கும் வாழ்த்து.
    வாழ்த்துகிறேன்.

    சீடனின் உயர்வுகண்டால்
    குருவுக்கு மகிழ்வுதானே
    மூடனாய்ப் போனால்தானே
    மூண்டிடும் கோபமதே
    தேடிய குருநல்வாழ்த்து
    திண்னமாய்த் தருவாருமக்கே
    சோதரா கலக்கம்வீணே
    சோர்விலாமல் தொடரும்மேலே...

    சகோதரரே... என்வலப்பூ பக்கமும் வருகைதர வேண்டுகிறேன்.
    மிக்க நன்றி.
    http://ilayanila16.blogspot.de/2013/04/blog-post.html

    ReplyDelete
  4. நிச்சயம் மகிழ்வேன் நிம்மதிப் பெறுவேன்
    சிற்சில சமயம் தோண்றியதை
    சிந்திக்க சொல்லி தூண்டியதை-சோதரி
    சொல்லிப் பார்த்தேன் தவறன்றோ.

    ReplyDelete
  5. குருவை மிஞ்சினால்
    கோபப்பட்டு விடுவாரா
    கோபத்தில் என்மேல்-செல்லமாய்
    சேற்றை பூசி விடுவாரா

    இன்னும் கொஞ்சம் முன்னேற
    இனிய வார்த்தைச் சொல்வாரா
    இப்படியே இருக்கட்டுமென
    ஓட்டுப்போட மறுப்பாரா

    வருத்தம் எதற்கு உங்கள் எண்ணம் போல்
    நல்லாசி கிட்ட என் வாழ்த்துக்களும் இங்கே !

    ReplyDelete
    Replies
    1. வந்ததுக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றிங்க

      Delete
  6. இன்னும் கொஞ்சம் முன்னேற
    இனிய வார்த்தைச் சொல்வாரா//
    நல்ல குரு நல்ல சீடனுக்கு இன்னும் முன்னேற இனிய வார்த்தை கண்டிப்பாய் சொல்வார்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. அவரும் வருவார் ஆசியும் தருவார்
    தவறாய் எண்ணி கொள்ளாமல் தயவும் செய்து மகிழ்வார்.
    நன்றிங்கம்மா

    ReplyDelete
  8. மகிழ்ச்சிதான் அடையும் குருவின் மனது முகம் காட்டும் அதை குரல் காட்டாவிடினும்

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க பூவிழி நிச்சயம் நம்புகிறேன்

      Delete
  9. தன்னை மீறி உயர்ந்தாலும் பணிவை கற்றுத் தந்த குரு, பணிவுடன் ஏற்றுக்கொண்டு நல்லாசி வழங்கி தனக்குள்ளேயே மகிழ்ச்சியால் பெருமைப்பட்டுக் கொள்வார்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் தனபாலன் சார். அய்யா எனக்கு ஆசியும் தருவார் அன்பையும் பொழிவார்

      Delete
  10. உங்கள் குரு மிகவும் நல்லவர்! தலப்பாகட்டு பிரியாணியே வாங்கித் தருவார்!

    வாழ்க சொல்திறன்!வளர்க கவித்திறன்!

    ReplyDelete
    Replies
    1. ஆங்... இதை இதை இதைதான் எதிர்பார்த்தேன் .மகிழ்ந்தேன் நனைந்தேன்

      Delete
  11. குருவே தலைப்பாக் கட்டி பிரியாணி
    வாங்கித் தருவதாக்ச் சொல்லி விட்டார்
    அதற்கடுத்து நாங்கள் என்ன சொல்வது
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் வரலாம் விருந்து தரலாம்.உங்க வாழ்த்துக்கும் நீங்க கொடுத்த ஊக்கத்துக்கும் நன்றிங்க சார்

      Delete
  12. நன்றிங்க சார்

    ReplyDelete
  13. //கூட்டத்தில் என்பேரை
    கூப்பிட்டு அழைப்பாரா
    கோடிபுண்ணியம் கிடைத்திடவே
    கொஞ்சி என்னை அணைப்பாரா

    //

    அருமையான வரிகள்...

    ReplyDelete
    Replies
    1. எனக்குதான் வேண்டும் குருவின் கருணையும் கோடிப்புன்னியமும். நீங்க வந்ததுக்கு நன்றிங்க தொடர்ந்து வாங்க ஆதரவு தாங்க

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more