Thursday, 1 August 2013

திருவாளர்கள் ;ரமணி அய்யாவும்,திண்டுக்கல் .தனபாலன் அவர்களும் 


ரமணி அய்யாவும்,திண்டுக்கல் .தனபாலன்  ஆகிய இருவரைப் பற்றி எல்லோருக்குமே தெரிந்திருக்கும். இருவரும் தாய் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இருவருமே புதியவர்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களை ஊக்கப் படுத்துவதில் இருவருக்கும் நிகர் எனக்குத் தெரியவில்லை .

பெரும்பாலான தளத்தில் சென்று வாசித்து அதற்கு வாக்களிப்பதோடல்லாமல் அவர்களைப் பற்றி தெரிந்து கொண்டு திருத்தங்கள் ஏதேனும் இருந்தால் சொல்லி உற்சாகப் படுத்தும் நல்ல உள்ளம் படைத்தவர்கள்.

அதுமட்டுமல்ல  இருவரின் பதிவுகளும் எல்லோரும் விரும்பிப்படிக்கும் படி சிறப்பாகவும் சிந்திக்கும்படியும் இருக்கும்..ரமணி அய்யா எழுதும் தமிழுக்கு  நிகர் அவரேதான். ஒவ்வொருமுறையும் நான் ஏதாவது பிழை இருக்காதா  அவரிடம் சொல்லித் திருத்தி பேர் வாங்கலாமே என்று நினைத்தால் அதற்கு இன்றுவரை வாய்ப்பே இல்லை.அவ்வளவு சிறப்பாக எளிமையாக எல்லோருக்கும் புரியும்படி தெளிவாக எழுதுகிறார்.

இலக்கணம் பற்றி எனக்கு எளிமையாக விளக்கும்போது நான் அவர் அருகில் இருந்து தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்காத என ஏங்கி வருகிறேன்.அவரும் என்னை மதுரைக்கு வரச்சொல்லியிருக்கிறார் ஆனால் எனக்குத்தான் நேரமும் சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை.

திண்டுக்கல் தனபாலன் கணினியி கல்விப் பற்றிப் போதிய கல்வியறிவு இல்லாவிட்டாலும் அவரின் தீவிர முயற்சியால் புதுவிதமான யுக்திகளைக் கையாண்டு சிறந்த முறையில் பதிவிட்டு வருகிறார்.தரத்துடனும் அழகாகவும் அடுத்தவர் பொறாமைப்படும் அளவுக்கு மிக நேர்த்தியாக கணினியில் அவரின் வேலைப்பாடு இருக்கும்.

அதேபோல் பிறருக்கு கணினிப் பற்றிய சந்தேகமெனில் தானாக முன்வந்து தளத்தை சீர்செய்து இணைப்புகளை உருவாக்கித்தருவார். 24*7 எல்லா நேரத்திலும் இவரை தொடர்பு கொண்டு உதவிக்கு அழைக்கலாம்.கணினி உலகில் உலா வரும் பலர் வெளிநாட்டிலிருந்தும் இவரின் உதவியைப் பெற்று பயனடைகிறார்கள் என்பதை நானறிவேன்.

 அதிகப் பதிவு எழுதாத, படிக்கத்  தெரியாத பதிவர்களின் மத்தியில் இவர்கள் இருவரும் ஜொலிக்கும் நட்சத்திரங்களாய்  மின்னிக் கொண்டிருக்கிறார்கள்.
பதிவர்களுக்கு சேவையும் ஆலோசனையும் செய்து ஒவ்வொரு தளத்துக்கும் சென்று வரும் இவர்களின் பணியை அவசியம் எல்லோரும் பாராட்டதான் வேண்டும்.

இப்போதும் அடிக்கடி பதிவுகளும் கொடுத்து  வாக்களித்தும் வரும் இருவரின் பணியை  சேவையை நான் மனதார மனமகிழ்ந்து தனிப்பட்ட முறையில் நான் பாராட்டுகிறேன்.


இவர்களைப்போல் பதிவுலகில் சேவை செய்துவரும் பல நண்பர்களைப் பற்றி நீங்களும் ஏன் ஊக்கப் படுத்தும் விதமாய் பாராட்டலாமே...தொடருங்கள்....

கவியாழி
சென்னை

53 comments:

 1. தங்களின் பாராட்டை தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறேன்... மிக்க நன்றி...

  ReplyDelete
  Replies
  1. ஏற்றுக்கொண்டமைக்கு நன்றிங்க தனபாலன்

   Delete
 2. ஜொலிக்கும் நட்சத்திரங்களாய் மின்னிக் கொண்டிருக்க்கும்
  பதிவர்களின் பகிர்வுககு பாராட்டுகள்.. வாழ்த்துகள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கும் நன்றிங்கம்மா.தொடர்ந்து தரமான பதிவுகளைத் தருகிறீர்கள்

   Delete
 3. குரு, மற்றும் தனபாலும் எல்லா பதிவர்களுக்குமே அவர்கள் ஊட்ட சத்து....!

  பதிவர்கள் பெயர்கள் எந்த வலைப்பதிவில் வந்தாலும் உடனே சம்பந்தப்படவர்களின் பார்வைக்கு கொண்டுபோவதில் தனபால் கெட்டிக்காரர்....!

  குரு"வின் எழுத்துகள் சொல்லவே வேண்டாம், அம்புட்டு ரசனை மற்றும் சிந்திக்க வைக்கும் பதிவுகள்...!

  ReplyDelete
  Replies
  1. நேர்மையான மனதுள்ளவர்கள் இருவரையும் பாராட்டித்தான் ஆக வேண்டும்

   Delete
 4. Replies
  1. உரியவர்களிடம் சொல்லிவிடுகிறேன்

   Delete
 5. பாராட்டுக்கும் அறிமுகத்திற்கும் மனமார்ந்த நன்றி  ReplyDelete
  Replies
  1. தங்களைப் பாராட்டும் வாய்ப்புக்காக உங்களுக்குத்தான் நன்றி.

   Delete
 6. என்னை விட அதிக பாராட்டுக்குரியவர்
  திண்டுக்கல் தனபாலன் அவர்கள்தான்

  எவெரெஸ்டில் முதன் முறையாக ஏறியவர்
  பெருமிதத்தில் நிமிர "எந்த சார் டீ வேணுமோ "
  என ஒரு மலையாளி கேட்டதாக ஒரு கதை
  சொல்வார்கள்

  அதைப்போல நான் புதியதாக எந்தப்பதிவுக்கும் சென்று
  பின்னூட்டமிட முயலுகையில் எனக்கு முன்னமேயே
  தனபாலன் அவர்கள் பாராட்டி பின்னூட்டமிட்டிருப்பார்

  அந்த அசகாய சூரருடன் என்னையும் சமமாய் இணைத்து
  பதிவிட்டமைக்கு மனமார்ந்த நன்றி

  ReplyDelete
  Replies
  1. என்னே தன்னடக்கம் நீங்களே மேலும் அவரைப் புகழும் வாய்ப்புக்காக அவரின் சார்பாக நான் நன்றி சொல்கிறேன்

   Delete
 7. பதிவுலக ஹீரோக்களை பெருமைப் படுத்தியமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கு நன்றி

   Delete
 8. சண்டைகளும், போட்டிகளும் நிறைந்த பதிவுலகத்தில் மனம் திறந்து பாராட்டும் பண்பு மிக சிறந்தது கவியாழி சார் அதற்கு என் வணக்கங்கள்.....

  இருவரை பற்றியும் நான் அறிந்திடாத தகவல் தந்தமைக்கு நன்றிகள் .. இவர்களின் வரிசையில் நீங்களும் புகழ் பெற்று சிறக்க மனம் திறந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் திடீர் வருகைக்கும் என்னையும் வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி

   Delete
 9. Replies
  1. மாத்தி யோசிங்க தம்பி

   Delete
  2. எதை மாற்றி யோசிக்கணும், எவ்வாறு யோசிக்கணும் என்று ஒரு திட்டம் போட்டு கொடுத்தால், அதன் படி நான் பிழையின்றி செய்ய ஏதுவாக இருக்கும் ... கொஞ்சம் விளக்கவும் சார் ....

   Delete
 10. ஒரு பதிவர் இன்னொரு பதிவரை பாராட்டுவதென்பது அரிதான ஆனால் மகத்தான செயல். அதை நீங்கள் செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 12. சக பதிவர்களின் சிறப்பியல்புகளைக் கூர்ந்து கவனித்துப் பாராட்டி ஊக்கமளிக்கும் தங்களுக்கும் இனிய பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் பாராட்டுக்கு நன்றிங்கம்மா.தகுதியான நபர்களை தகுதியுடன் வாழ்த்தும் வாய்ப்புக்கு நான்தான் நன்றி சொல்லணும்

   Delete
 13. இருவரும் நிஜமாவே பாராட்டுக்குரியவர்கள்தான்!!

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் நன்றிங்க ராஜி

   Delete
 14. பாராட்டுக்கு உரிய, தகுதியான இருவரையும், அவர்களை பாராட்டி எழுதிய உங்களையும் வாழ்த்துகிறேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் பெருந்தன்மைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்கயா

   Delete
 15. சகோதரரே! உங்களுக்கு நிகர் நீங்களேதான்.
  மிக அருமையாக சக பதிவாளர்களையும் அழகிய பதிவாக அறிமுகமும் பாராட்டுதலுமாக இங்கு பகிர்ந்து பெருமைப்படுத்தியுள்ளீர்கள்!

  இருவருக்கும் என் வாழ்த்துக்கள்!

  உங்களுக்கும் மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ, சமயத்தில் உதவுவதும் பாராட்டுவதும் தமிழன் இயல்புதானே

   Delete
 16. பதிவுலக மந்திரவாதி தனபாலன் அவர்களும்,ரசிக்கும் வகையில் புதுமையுடன் எழுதி வரும் ரமணி அவர்களும் பாராட்டுக்குரியவர்கள் என்பதில் ஐயமில்லை.

  ReplyDelete
 17. இருவருமே பதிவர்களை ஊக்குவிப்பவர்களில் வல்லவர்கள்...

  தனபாலன் சார் சில சமயம் என்னிடம் பதிவு செட்டிங் பற்றி சந்தேகம் கேட்பார். அப்போது மிகவும் ஆச்சர்யப்படுவேன்...
  அவர் வலையில் செய்துள்ள தொழில்நுட்பங்களை இதுவரை முயற்சி செய்ய வேண்டும் என நான் நினைத்தே இல்லை... ஏனெனில், அவரது நுட்பங்கள் புரிந்து கொள்ளவே சிரமமாக உள்ளது...

  ரமணி சாரிடம் சினிமா, நாடகங்கள் பற்றிய விவரங்கள் பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம். நிறைய விசயங்களை அறிந்தும் கொள்ளலாம்...

  இருவரை பற்றி பதிவிட்ட கவியாழி அண்ணனுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க தம்பி.வாழ்த்த வேண்டியவங்களை முதலில் நாம்தான் வாழ்த்த வேண்டும் .அதைத்தான் நான் செய்தேன்

   Delete
 18. நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை! நான் வலைப்பதிவு தொடங்கிய காலத்திலிருந்து ஊக்கம் கொடுத்து வருபவர் கவிஞர் ரமணி அவர்கள். மேலும் தவறாமல் எனது ஒவ்வொரு பதிவிற்கும் தமிழ்மணத்தில் வாக்கும் அளித்திடுவார். அவரிடமிருந்து இதனை கற்றுக் கொண்ட நான் , எந்த பதிவாக இருந்தாலும் படித்து முடிந்ததும், கருத்துரையோடு தமிழ்மணத்தில் வாக்களித்தும் வருகிறேன்.

  நான் பள்ளி மாணவனாக இருந்த போது வீட்டில், நூலகத்தில் மற்றும் நண்பர்கள் வீட்டில் இருக்கும் பத்திரிகைகளை படிப்பதுண்டு. பெரும்பாலும் எல்லா பத்திரிகைகளிலும் வாசகர் கடிதம் பகுதியில் திருவனந்தபுரம் எஸ்.எஸ்.மணி என்பவர் தவறாமல் கடிதம் எழுதி இருப்பார். (அவர் இப்போது என்ன பண்ணுகிறார் என்று தெரியவில்லை) அவரைப் போன்று நமது திண்டுக்கல் தனபாலன் அவர்களின் ஊக்கமான கருத்துரையும் , தமிழ்மணத்தில் வாக்கும் வலையுலகத்தில் இல்லாத நாளே இல்லை எனலாம். எல்லா பதிவுகளிலும் இவருடைய முதல் கருத்துரை பதிவாகி இருக்கும்.

  கவிஞர் ரமணி, திண்டுக்கல் தனபாலன் – இருவரும் பல்லாண்டு வாழ்க! பாராட்டி பதிவு எழுதிய கவிஞர் கவியாழி கண்ணதாசனுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

  ReplyDelete
  Replies
  1. அவர்களுக்கு பாராட்டும் எனக்கு நன்றியும் சொன்ன உங்களுக்கு வாழ்த்துக்கள்

   Delete
 19. திண்டுக்கல் தனபாலன் அவர்களை நன்கு அறிந்தவர். தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன். தாங்கள் கூறிய இருவரும் சிறந்த பதிவர்களென எனது பாராட்டுகளையும் தெரிவிக்கின்றேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது பாராட்டுக்கு நன்றிங்க நண்பரே.சென்னையில் நடக்கும் பதிவர் திருவிழாவுக்கு நீங்களும் வரலாமே

   Delete
 20. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 21. ரமணி சாரும், திண்டுக்கல் தனபாலன் அவர்களும். எல்லா பதிவர்களுக்கும் மறக்காமல் தமிழ்மண ஓட்டு அளித்தும், முதலில் வந்து உற்சாக பின்னூட்டங்கள் கொடுக்கும் அன்பான பதிவர்கள்.
  திண்டுக்கல் தனபாலன் அவர்கள் நீங்கள் சொல்வது போல் எல்லோருக்கும் கணினி சம்பந்தமாய் எந்த உதவி கேட்டாலும் செய்து தருபவர்.
  இருவருக்கும், வாழ்த்துக்கள். இவர்கள் இருவரும் தங்கள் பதிவுகளில் நல்ல விஷ்யங்களை பகிர்ந்து கொள்பவர்கள். அதற்கு பாரட்டுக்கள்.
  இருவர்ப்பற்றி நல்ல பதிவு கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள் உங்களுக்கு.

  ReplyDelete
  Replies
  1. நல்ல நியாயமான நேர்மையான முதிர்ச்சியான இருவரின் பணிக்கு பாராட்டுதான் சிறந்தது

   Delete
 22. ரமணி ஐயாவின் எழுத்துக்கு நானும் ரசிகை.திண்டுக்கல் அண்ணா துரிதவேக அறிவிப்பாளர்.அவர் சொல்லாவிட்டால் நான் அதிகம் தவறவிட்டிருப்பேன்.நன்றி !

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் எல்லா பகுதிகளிலில் இருந்தும் இருவருக்கும் தொடர்பு உள்ளதை நானறிவேன்

   Delete
 23. நல்லதொரு முயற்சி! DD அவர்களையும், ரமணி ஸார் பற்றியும் நீங்கள் சொல்லியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை!

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க தம்பி .சிறந்தவர்கள் பாராட்டுக்குத் தகுதியானவர்கள்

   Delete
 24. ஆம் ஐயா தாங்கள் சொல்வது உண்மைதான். கணினி முதன் அனுபவத்தை அனைவரும் எழுது வருவது போன்று, தங்களுக்கு நன்கு அறிமுகமான பதிவர்களைப் பற்றியும் எழுதுலாம். சீரிய சிந்தனை அய்யா. ரமணி அவர்களும், திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் இணை கிடையாது அய்யா.
  கவிதையில் கரை கண்டவர் ஒருவர்
  கணினியில் கரை கண்டவர் மற்றொருவர்
  இருவரையும் வாழ்த்துவோம்
  போற்றுவோம்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க

   Delete
 25. அனைவரின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி...

  ReplyDelete
  Replies
  1. அப்படியே ஆகட்டும் நண்பரே

   Delete
 26. திண்டுக்கல் அண்ணாச்சியை தெரியாதவர் யார் பதிவுலகத்தில்? இன்றைக்கு யாராவது பதிவு எழுதத் தொடங்கினால் கூட இவரது பின்னூட்டம் அங்கு இருக்கும். வலைச்சரத்தில் அறிமுகம் ஆனவர்கள் தளத்திற்கும் தப்பாமல் சென்று தகவல் சொல்லும் இவரது பெருந்தன்மை ஆச்சரியத்துக்குரியது.

  ரமணி சாரின் கவிதைகளும், தொடர்களும் என்றுமே எல்லோரின் மனதையும் கவரும். தன் எழுத்துக்களைப் படிப்பவர்களின் தளத்திற்கு சென்று அவர்களையும் உற்சாகப் படுத்தும் அவரது மனம் அருமையானது.

  இருவரிடமிருந்தும் நிறைய கற்க வேண்டும்.இருவருக்கும் வாழ்த்துக்கள்!

  இருவரையும் மனதாரப் பாராட்டியதற்கும், எங்களுக்கு அவர்களைப் பாராட்ட ஒரு வாய்ப்பு கொடுத்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்கம்மா.அவசியம் பாராட்டுக்குரியவர்களை பாராட்டுவதுதான் சிறப்பு

   Delete
 27. எல்லோர் மனதிலும் நன்மதிப்பு பெற்றவர்கள்!

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான்.தங்கள் வரவு நல்வரவாகுக.

   Delete

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்