Friday, 30 August 2013

விழாவில் கலந்துகொள்ளும் பதிவர்கள் கவனத்திற்கு...

             இன்றிலிருந்தே பதிவுலகம் சென்னையை நோக்கி புறப்படத் தயாராய் இருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்க நாங்களும் தயார்தான் என்பதை அனைத்துக் குழுவினரின் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறேன்


செய்ய வேண்டியது

          1,    பதிவர்கள் ஒவ்வொருவரும் கூடவே இன்னொரு பதிவரை அழைத்துவர முயற்சியுங்கள்.இவ்வாறான தனியுலகில் அவர்களையும் இடம்பெற செய்வது எல்லோரின் கடமையாகும். அவர்கள் இடம்பெறும் ஒவ்வொரு நிகழ்விலும் உங்களின் பங்களிப்பும் நிச்சயம் இருக்கும் .
     
         2,   நிகழ்ச்சிக்கான இடத்தின் விலாசமும் ஒருங்கிணைப்புக் குழுவினரின்
கைபேசி எண்களும் கையோடு மறக்காமல் எடுத்துவர வேண்டும். அல்லது வரும் முன்பே தகவலை உங்கள் நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ தெரிவித்தல் நலம்.

         3,  சென்னை வந்தவுடன் அரங்கத்தில் உள்ள செல்லும் முன்பே முன்பதிவு  பகுதியில் உள்ள பொறுப்பாளரிடம் சென்று உங்கள் பெயரைப் பதிவு செய்து  உங்களுக்கான அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.


        4  அமைதியான முறையில் எல்லோருக்கும் நாகரீகமாக வணக்கம் சொல்லி நலம் விசாரித்து நமது பண்பாட்டை காத்தல் நன்று.பெயர் பெரியா விட்டால் அடையாள அட்டையைப் பார்த்து அறிந்து கொள்ளவும்.

         5, மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போது  ஒவ்வோருவரும் என்னப் பேசுகிறார்கள் என்பதைக் கவனமாக கேட்கவும். அவரின் பேச்சுப் பற்றி நீங்கள் உங்களது அனுபவத்தில் கருத்தில் கொள்ளலாம்.
     

தவிர்க்க வேண்டியது

            1, கைபேசியை  அதிர்வு அழைப்புகளில் சரி செய்து வைப்பது அவசியமாகும்.இது மற்றவர்களுக்கு முன்னுதாரணமாய் இருக்க வேண்டும்

                2,   அரங்கினுள் அருகில் இருப்பவரிடம்  தனியாக சத்தமாக பேசிக்கொண்டிருக்கக் கூடாது.பொது இடத்தில் அமைதி காப்பது  நலம்.அவசியமாகும்

               3, உணவுக் கூடத்தில் அதிகபட்ச அமைதியுடன் ஒவ்வொருவரும்  வரிசையில் நின்று  உணவை வாங்க வேண்டும் .இரண்டு மூன்று பேருக்கு ஒருவரே வாங்கிச் செல்ல முயற்சிக்கக் கூடாது.

            4.  அரங்கத்திற்கு வெளியே நின்றுகொண்டு இரைச்சலாய் பேசக்கூடாது

            5,  தங்களது உடைமைகளையும் விலை உயர்ந்தப் பொருட்களையும் அவரவர் சொந்தப் பொறுப்பில் பாதுகாத்து கொள்வது உங்களின் கடமை.
---கவியாழி---

35 comments:

 1. நல்ல யோசனைகள் ஐயா... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றிங்க நண்பரே

   Delete
 2. டாஸ்மாக் சென்றுவிட்டு ,அரங்கத்தில் வர வேண்டாம் என்பதையும் சேர்த்துக்குங்க பாஸ் !

  ReplyDelete
  Replies
  1. உங்கள் யோசனைக்கு நன்றி.நீங்களே அந்தப் பொறுப்பை கவனிக்கலாமே

   Delete
 3. ஆஹா...ஹா..அருமை
  உள்ளேன் அய்யா

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க நண்பரே.முதலில் வந்து உங்கள் பெயரைப் பதிவு செய்யுங்க

   Delete
 4. நல்ல யோசனைகள்! தனித்திறமைகள் மேடையேறும்போது உற்சாகப்படுத்த வேண்டும். சுவாரஸ்யமே இல்லாமல் உட்கார்ந்திருந்தால் அடுத்து மேடையேறுபவருக்கு அலுப்பு தட்டி விடும். உங்களின் ஊக்கம் அவர்களை இன்னும் செம்மையாக்கும்..! முதலில் காது கொடுத்து கேளுங்க பிறகு வாய் திறந்து பாராட்டுங்க.

  ஒவ்வொருவரும் ஒரு தனித்திறமை பெற்றவர்களே! அனைவருக்கும் என் பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. பாராட்டு சொல்வது நேரில் வந்தால் நன்றாய் இருக்குமே.இன்னும் சில பதிவர்களை அழைத்துவாருங்கள்

   Delete
 5. Very best wishes.
  Vetha.Elangathilakam.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றிங்கம்மா

   Delete
 6. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் அண்ணே....

  ReplyDelete
  Replies
  1. நண்பரே உங்களை பார்க்க முடியுமா?

   Delete
 8. நல்ல கருத்துகள்தான்

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ.பலகாரமெல்லாம் செய்து வாங்க

   Delete
 9. You are a well organized man Kannadasan!

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் வந்தால் மகிழ்ச்சியடைவேன்

   Delete
  2. வரலாம்தான் . ஆனால், கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை என்று யாரவது கேட்டால்? (smile)

   Delete
 10. நல்ல கருத்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வருகைப் பற்றி அறிந்துகொள்ள ஆவல்.தகவல் தெரிவிக்கவும் அல்லது நேரில் வரவும்

   Delete
 11. நல்ல சிந்தனைகள் அவசியமான அறிவுரைகள்

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் நேரில் வாங்க நண்பரே

   Delete
 12. நல்ல கருத்துகள்... அவசியமான அறிவுரைகள்... நன்று

  ReplyDelete
  Replies
  1. நான் எப்பவுமே நல்லதைத்தான் சொல்லுவேன்.மகிழ்ச்சி

   Delete
 13. சிறப்பாக நடைபெற நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 14. Replies
  1. வாழ்த்துக்கு நன்றிங்க

   Delete

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்