Saturday, 3 August 2013

கரும்பலகையைக் காணவில்லை

                     


                                                     கரும்பலகை(சிலேட்)


இன்னும் தவிர்க்க முடியாதது கரும்பலகை.இப்போதும் பலரும் தங்களின் குழந்தைகளுக்கு முதலில் எழுத்தக் கற்றுக் கொடுப்பது இது போன்ற கரும்பலகையில்தான்.

கணினியின் பயன்பாடு  எல்லோர் வீட்டிலும்  உபயோகத்தில் இருந்தாலும்  முதன் முதலில் எழுதக் கற்றுகொடுக்கும் சிலேட் எண்ணும் கரும்பலகையில்தான்  சொல்லித்தரும் வழக்கம் உள்ளது

நானும் இதுபோன்றதில் தான் எழுதிப் பழகினேன் .எனது அப்பா அப்போது என் கைபிடித்து சரியாக எழுதுவதுப் பற்றிச் சொல்லித்தந்தார்.அதன்பின்பே பள்ளியில் சேர்ந்து எழுதப் பழகிக் கொண்டேன்


  
எழுதிவிட்டு அழிப்பதற்கு சிறு துணியையோ கையாலோ அழித்த ஞாபகம் இன்னும்நினைவில் இருக்கிறது.மேலும் அப்போதே என்வயதிலிருந்த மாணவர்கள் தண்ணீர் தழை,கோவை இலை போன்றவற்றைக் கொண்டு அழித்தால் எழுத்துக்கள் மிக துல்லியமாகவும் எழுதும்போது விரைவாகவும் எழுத முடியும் என்பதால் அப்போதே அதை காசுக்கு விற்றுவருவார்கள்.
ஆனால் இப்போதெல்லாம் அவ்வாறான இலைத்தழைகளைப் நகரத்தில் பார்ப்பதே அரிதாகிவிட்டது

30 comments:

  1. ஆமாம் கரும்பலகை மறைந்து கொண்டுதான் இருக்கிறது..

    ReplyDelete
    Replies
    1. கல்வியாளரான உங்களுக்கு நன்றாய் தெரியுமே.

      Delete
  2. என்னுள்ளும் அந்த ஸ்லேட் ஞாபங்களை
    கிளறிப்போனது தங்கள் பகிர்வு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க சார்

      Delete
  3. அந்தக்கால இனிய நினைவுகள் ஞாபகம் வந்தது...

    ReplyDelete
    Replies
    1. பழைய நினைப்புதான் மீண்டும் வராதே

      Delete
  4. நானும் கரும்பலகையில் எழுதிய நாட்களுக்கு போய் வந்தேன். எல்லாம் சரி, எதுக்காக ஒரே கவிதையை 2 முறை?!

    ReplyDelete
    Replies
    1. யாரோ சூனியம் வைத்து விட்டார்கள் இப்படித்தான் தவறாக வந்துவிடுகிறது.மேலும் கீழுமாய் இழுக்கிறது

      Delete
  5. நகரங்களில் மட்டுமல்ல கிராமங்களில் கூடபலகை குறைந்துவருகிறது...

    பழைய ஞாபகம்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. சரியாய் சொன்னீர்கள் .ஆனாலும் வீட்டில் கையெழுத்து பயிற்சிக்கு இதுதான் சிறந்த வழி என்பதை யாரும் மறக்க முடியாது

      Delete
  6. சுழன்று மலர்ந்த சிலேட்டு நினைவுகள் அருமை!

    எல்லோரையும் கறுப்புக் கோடுகள் வட்டமாக வரையப்பட்ட வெள்ளைச் சக்கரத்தைச் சுழற்றிவிட வைத்துவிட்டீர்கள்!
    அருமை!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. யாராலும் மறக்க முடியாத மறுக்கக் கூடாத அனுபவமாச்சே

      Delete
  7. கரும்பலகை நினைவுகள் கரும்பலகை எழுத்தென அழிந்துபோகாமல் பசுமரத்தாணிபோல் என்றும் மனதில் நிரந்தரமாய்! நினைவுப் பகிரலுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் நன்றிங்கம்மா.முன்புபோல அடிக்கடி நீங்களும் வாங்க

      Delete
  8. சிறுவயது காலத்துக்கு கொண்டு சென்றுவிட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அன்றைய நாட்கள் மகிழ்வானவை

      Delete
  9. எச்சில் தொட்டு கூட அழிப்பதுண்டு!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் எனக்கும் அதுபோல அனுபவம் உண்டு ஆசிரியரிடம் அடிவாங்கியதும் உண்டு

      Delete
  10. கரும்பலகையில் எழுதியது அழிந்து போய் இருக்கலாம்.மனப்பலகையில் அல்லவா எழுதி வைத்துவிட்டீர்கள்.அதுதான் இப்போது பதிவாகி இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. அந்தநாள் ஞாபகம் வந்ததே நண்பனே

      Delete
  11. கரும் பலகையில் ஊமத்தம் பூவை அரைத்துப் பூசி அடிக்கடி சர்வீசும் நடந்ததை மறக்க முடியவில்லை !

    ReplyDelete
    Replies
    1. ஊமைத்தம்தழை,அடுப்புக்கரி அரைத்து பூசியதும் உண்மைதான்

      Delete
  12. எனக்கும் இந்த அனுபவம் உண்டு. கரும்பலகைக்கு மட்டுமல்ல வகுப்பறையிலிருக்கும் பெரிய கரும்பலைக்கும் கோவை இலைகளையும் அடுப்புக்கரியையும் கலந்து பூசியது நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர்களின் தொல்லை மாதமொருமுறை இருக்குமே மறக்க முடியுமா?

      Delete
  13. பள்ளிக் குழந்தை கைகளில் சிலேட்டை பார்க்க ஆசை....

    ம்ஹும்... ஆசை நிறைவேறவில்லை...


    சிறுவயது நியாபகங்கள் அசைபோட வைத்த பதிவு....

    ReplyDelete
    Replies
    1. இப்போதும் அம்மா அப்பா வீட்டில் சொல்லிதர உபயோகிக்கிறார்கள் என அறிவேன்

      Delete
  14. நான் எச்சில் தொட்டு அழித்த அந்த கணங்கள் நினைவுக்கு வருகின்றன, பகிர்வுக்கு நன்றி !

    ReplyDelete
    Replies
    1. யாருமே இல்லை என்று சொல்ல முடியாது.உங்கள் நேர்மையைப் பாராட்டுகிறேன்

      Delete

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்