தெய்வங்கள்

தெய்வங்கள்

ஆனந்த வாழ்வை பிரியோம்

உலகத்தில் எத்தனையோ மாற்றங்கள்
உருமாறும் காலங்கள் நேரங்கள்
உண்மையை புரிந்ததா மனிதம்
உலகமே அறியாத புதிராம்

பொய்த்துப் போன இயற்கை
புரியாத காலநிலை மாற்றம்
சொல்லிலே பேசும் செயற்கை
சோகமாய் மாறிவிட்ட நேர்மை

வெல்லுவோர் வீழ்த்து தோற்றவர்
சொல்லிலே விஷத்தை சேர்த்தவர்
நல்லதை நாளும் செய்பவர்
நாணயமே இல்லாத மனிதர்

வாழ்கையில் ஏமாற்றம் வரும்
வந்தபின் பணிந்து செல்லும்
வசந்தமும் வந்து வாழ்த்தும்
வாழ்ந்ததை சரித்திரம் சொல்லும்

இன்னும் உள்ளது மனிதம்
எப்படியும் மாறிவிடும் உலகம்
அப்படியே சுழற்சி நின்றிடாது
ஆழ்கடலும் வற்றிடாது அறியோம்

அன்பினை யாருமே மறுத்து
அறமே செய்வாரே பொறுத்து
நீதியும் நேர்மையும் செயிக்கும்
நித்தமும் மகிழ்ச்சியே பெருகும்

ஆனாலும் எல்லோரும் மகிழ்வோம்
ஆனந்த வாழ்வை பிரியோம்
இருக்கும் வரையே நமது
இறந்த பின்பு யாரறிவார்

Comments

  1. /// வாழ்கையில் ஏமாற்றம் வரும்
    வந்தபின் பணிந்து செல்லும்
    வசந்தமும் வந்து வாழ்த்தும்
    வாழ்ந்ததை சரித்திரம் சொல்லும் ///

    அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க நண்பரே

      Delete
  2. இருக்கும் வரை மகிழ்ச்சியோடு வாழ்வோம்....

    அழகிய வரிகள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க சௌந்தர் மகிழ்ச்சியே வாழ்வில் வேண்டுவோம்

      Delete
  3. "இன்னும் உள்ளது மனிதம்
    எப்படியும் மாறிவிடும் உலகம்
    அப்படியே சுழற்சி நின்றிடாது
    ஆழ்கடலும் வற்றிடாது அறியோம்"
    இந்த நம்பிக்கையில் தானே மனித வாழ்வே இயங்கிக் கொண்டிருக்கிறது.

    அழகான வரிகள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. நாமும் இயந்திரமாய் இருப்பதும் அதனால்தானோ?வந்தமைக்கு நன்றிங்க தமிழ் முகில்

      Delete
  4. ஆனாலும் எல்லோரும் மகிழ்வோம்
    ஆனந்த வாழ்வை பிரியோம்
    இருக்கும் வரை ..........!

    ReplyDelete
    Replies
    1. ஆனந்தமாக இருக்கவும் ஆரோக்கியமாக வாழவும் உறவுகள் நிச்சயம் வேண்டும்

      Delete
  5. //அன்பினை யாருமே மறுத்து
    அறமே செய்வாரே பொறுத்து
    நீதியும் நேர்மையும் செயிக்கும்
    நித்தமும் மகிழ்ச்சியே பெருகும்
    //

    அழகிய வரிகள்

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க ராஜா .தொடர்ந்து வாங்க

      Delete
  6. இன்றைய என் பதிவும் எதிர் மறை மனிதர்களைப் பற்றித்தான் ...
    உங்கள் சிந்தனைக்கும் பாராட்டுகள் !
    'சிரி'கவிதை!சிலர் நெஞ்சு முழுவதும் நஞ்சு ...காரணம் ?
    எல்லோருக்கும் பிறப்பின்போதே ...
    வெளியே தெரியும் நஞ்சுக் கொடி வெட்டப் பட்டுவிடும் !
    ஒரு சிலருக்கு மட்டும் ...
    நஞ்சுக் கொடி நெஞ்சுக்குழி வரை
    வேர்விட்டு பரவிவிடுமோ ?

    ReplyDelete
    Replies
    1. அப்படியும் சிலபேர் இருக்கத்தானே செய்கிறார்கள் நாம் என்ன செய்வது?இப்படி எழுதுவதைதவிர?

      Delete
  7. நல்ல சிந்தனைக் கவிதை. சிறப்பு!
    வாழ்த்துக்கள்!

    த ம. 7

    ReplyDelete
  8. //அன்பினை யாருமே மறுத்து
    அறமே செய்வாரே பொறுத்து
    நீதியும் நேர்மையும் செயிக்கும்
    நித்தமும் மகிழ்ச்சியே பெருகும்//- நன்று!

    த.ம-8

    ReplyDelete
  9. சிறந்த சிந்தனை
    சிறப்பான வரிகள்
    நன்றி அய்யா

    ReplyDelete
    Replies
    1. வந்தமைக்கும் கருத்துதந்தமைக்கும் நன்றிங்கயா

      Delete
  10. வாழ்கையில் ஏமாற்றம் வரும்
    வந்தபின் பணிந்து செல்லும்
    வசந்தமும் வந்து வாழ்த்தும்
    வாழ்ந்ததை சரித்திரம் சொல்லும்//

    அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்கம்மா

      Delete
  11. //நீதியும் நேர்மையும் செயிக்கும்
    நித்தமும் மகிழ்ச்சியே பெருகும்//

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க பிரியா தொடர்ந்து வாங்க

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more