தெய்வங்கள்

தெய்வங்கள்

மேகத்தின் சேதியது...










மேகத்தின் சேதியது
மேனியிலே பட்டவுடன்
தாகமெடுக்கிறதோ
தனிமை தவிக்கிறதோ?

பூவெல்லாம் பேசியதும்
புல்செடியும் கேட்டவுடன்
பூவைக்கு இனிக்கிறதோ
பூவைக்கத் துடிக்கிறதோ?

வழியெங்கும் பசுமரங்கள்
வாழ்த்தாக தூவியே
பூமழை பொழிகிறதோ
புதுப்பாதைத் தெரிகிறதோ

பச்சைக்கிளியும் புறாவும்
பக்கமாய்  நெருங்கியே
இச்சைச் செய்வது
இம்சையாய் இருக்கிறதோ?

இளம்மனது கருகியதால்
இன்பத்தை இழந்துவிட்டு
இப்போது ஏக்கத்தையே
இனிமையாக்க மறுப்பதோ?

தவறென்ன வாழ்கையில்
தைரியமாய் செய்யுங்கள்
உறவங்கே மறுத்தாலும்
உரிமையாய் தொடருங்கள்

வாழ்கையை தீர்மானிக்க
வயதுண்டு அறிந்துகொள்
வாழ்கையே உன்கைளில்
வாழ்வுமுந்தன் உரிமையே




Comments

  1. எப்படித்தான் உங்களால் தினமும் ஒன்றை
    யோசிக்கவும் தினமும் ஒரு அருமையான
    படைப்பைத் தரவும் முடிகிறதோ ?
    ஆச்சரியமாகத்தான் இருக்கிறது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அன்பும் ஆசியும் என்னை எப்போதும் உற்சாகப் படுத்துவதால் தினமும் எழுத தோன்றுகிறது.நீங்கள் கொடுக்கும் ஊக்கமும் உறுதுணையாய் இருக்கிறது.வாழ்த்துக்கு நன்றிங்க

      Delete
  2. அருமை... வாழ்த்துக்கள்...

    உறவங்கே மறுத்தாலும்...
    உரிமையாய் தொடருங்கள்...

    ReplyDelete
    Replies
    1. அறிவுரைதான் அவரவர் விருப்பம் ஆனாலும் ஆதரவு உண்டு.வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க

      Delete
  3. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க கருண்.தொடர்ந்து வாங்க

      Delete
  4. வாழ்கையை தீர்மானிக்க
    வயதுண்டு அறிந்துகொள்
    வாழ்கையே உன்கைளில்
    வாழ்வுமுந்தன் உரிமையே

    அருமையானா அறிவுரை
    சிறப்பான வரிகளுடன்
    வாழ்த்துக்கள் சகோதரரே
    மென்மேலும் தங்கள் கவிதை அழகு பெற !!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க .தொடர்ந்து வாங்க

      Delete
  5. வாழ்கையை தீர்மானிக்க
    வயதுண்டு அறிந்துகொள்
    வாழ்கையே உன்கைளில்
    வாழ்வுமுந்தன் உரிமையே


    உரிமை முழக்கம் ...!

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க .ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம்

      Delete
  6. பூவெல்லாம் பேசியதும்
    புல்செடியும் கேட்டவுடன்
    பூவைக்கு இனிக்கிறதோ
    பூவைக்கத் துடிக்கிறதோ?........ஆங்கில இலக்கியத்தில் கூட இப்படியொரு உவமைகளை படித்ததில்லை ....அருமை

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கருத்து எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.என்னை மேலும் ஊக்கப் படுத்துகிறது

      Delete
  7. உங்களது கருத்துரையை இன்றுதான் கண்டேன் .
    (http://seasonsnidur.com/2013/06/09/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF/#comment-894

    S.E.A.Mohamed Ali. "nidurali"

    அன்பு நண்பர் கவியாழி கண்ணதாசன் அவர்களுக்கு
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .உங்கள் வருகை தொடரட்டும்
    அன்புடன்)
    மிகவும் மகிழ்ந்து முகநூலில் உங்கள் நட்பை நாடி இங்கு வந்து உங்கள் கவிதை ஏழுதும் ஆற்றலைக் கண்டு மகிழ்ந்தேன் . நிறைவாக தருகிறீர்கள் .உங்கள் தொண்டு தொடரட்டும் .மக்கள் பயன் பெறட்டும்

    ReplyDelete
  8. அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்க சுரேஷ்

      Delete
  9. சளைக்காமல் கவி மழை பொழிகிறீர்களே?எப்படி?

    ReplyDelete
    Replies
    1. நினைக்கும்போது வருது நிம்மதியைத் தருது
      காகித்தில் மட்டுமல்ல கணினிக்குள்ளே புகுது
      கேள்விக்கு நன்றிங்க நண்பரே

      Delete
  10. நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க ஸ்ரீராம்.தொடர்ந்து வாங்க

      Delete
  11. \\வாழ்க்கையை தீர்மானிக்க
    வயதுண்டு அறிந்துகொள்
    வாழ்க்கையே உன்கைளில்
    வாழ்வுமுந்தன் உரிமையே\\

    மனந்தொட்ட வரிகள். பாராட்டுகள் ஐயா.


    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கும் பகிர்வுக்கும் நன்றிங்க தொடர்ந்து வாங்க

      Delete
  12. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more