தெய்வங்கள்

தெய்வங்கள்

தெய்வத்தின் கருணைக் கிடைத்திட.....

ஏழரைச் சனியின் தாக்கத்தால்
ஏற்றம் குறைந்ததாய் சொல்வோரே
காலையில் எழுந்ததும் கடவுளுக்கும்
கற்பூரம் காட்டி வணங்குவோரே

இறைவன் செயலைக் குறைப்பதற்கே
எல்லா கோவிலும் செல்வோரே
ஏழை எளியவர் தவிப்பதற்கு
இறைவன் காட்டும் வழியென்ன

வாழ்க்கைச் சக்கரம் இதுவன்றோ
மேலும் கீழும் வருமன்றோ
வாழும் முறையுயே என்றிருந்து
வந்தத் துயரையும் வென்றிடலாம்

உள்ளக் குறையை சரிசெய்தால்
உயரும் வழியைக் கண்டிடலாம்
நல்லச் செயலை நாள்தோறும்
நம்பிச் செய்தால் உயர்ந்திடலாம்

தெய்வம் தங்கும் கோவிலாக
தினமும் மனதை வைத்திருந்து
தெரிந்தோர் உயர வழிசெய்தால்
தெய்வத்தின் கருணைக் கிடைத்திடுமே




Comments

  1. //வாழ்க்கைச் சக்கரம் இதுவன்றோ...?
    மேலும் கீழும் வருமன்றோ...? //

    அருமையான வரிகள்... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. ஏற்றமும் இறக்கமும் வாழ்க்கையில் இருப்பது உண்மைதானே நண்பரே

      Delete
  2. ஆண்டவனை கோவிலில் உள்ளே வைத்து விட்டு மனிதன் வெளியே சாத்தானாக மாறிவிடுகிறான் இல்லையா...!

    ReplyDelete
    Replies
    1. இருந்தால் தான் சாத்தானா இல்லையா என்று கேள்விவரும்.தெரிந்தவர் யாரேனும் இருந்தால் சொல்லுங்களேன் நண்பரே

      Delete
  3. கட + உள் = கடவுள்.. பொருள் பொதிந்த கவிதை..

    ReplyDelete
    Replies
    1. புரிந்தமைக்கும் தெரிந்தமைஇகும் நன்றிங்க ஆவியே

      Delete
  4. உள்ளம் கோயில் என்பது உண்மை!

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்குத்தெரியாததா அய்யா?

      Delete
  5. உண்மை வரிகள்! சிறப்பான படைப்பு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிங்க சுரேஷ்

      Delete
  6. உள்ளே உறையும் அவனுக்கு
    உண்மையாய் நீயும் இருந்திட்டால்
    அள்ளக் குறையாது இன்பமென்றே
    அழகாய் சொன்னீர் அருமையிதே!

    நல்ல பொருட்செறிவு.! வாழ்த்துக்கள் சகோ!

    த ம.5

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க சகோ

      Delete
  7. கடவுளின் கருணையைப் பெரும் வழியை கவிதை ஆக்கி விட்டீர்கள். கவியாழியின் கவிதை எங்கேனும் கசக்குமோ?
    தமிழ்மணம் 5 ஆம் இடத்திற்கு முன்னேறியதற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க முரளிதரன்.ஐந்தாவது இடத்திற்கு வந்தமைக்கு நீங்கள் வாழ்த்தியமைக்கு நன்றிங்க

      Delete
  8. ****ஏழை எளியவர் தவிப்பதற்கு
    இறைவன் காட்டும் வழியென்ன***

    ஆண்டவனும் பக்தனும் சொல்கிறார்கள்: முன் ஜென்மத்தில் அவன் செய்த பாவம்! அனுபவிக்கிறான்! விடுங்க, சார் :))))


    ****தெய்வம் தங்கும் கோவிலாக
    தினமும் மனதை வைத்திருந்து
    தெரிந்தோர் உயர வழிசெய்தால்
    தெய்வத்தின் கருணைக் கிடைத்திடுமே****

    பக்தன் சொல்றான்: அப்படி எனக்கு கருணை கிடைக்க வழியில்லையே- மனதெல்லாம் பொறாமை, வயித்தெரிச்சல், பேராசை, சுயநலம்னு ஒரே குப்பையா இருக்கு. அதை சுத்தம் செய்ய வழியில்லை!

    எப்படியோ என் பகவானை, புகழ்ந்து, பாராட்டி, சரிக்கட்டினால்த்தான் அவன் ஏதாவது நல்வழி செய்வான்!

    ------------------
    இன்னொரு கண்ணதாசன் வரிகள்..

    கருணை மறந்தே வாழ்கின்றார். கடவுளைத் தேடி அலைகின்றார்!! :)))

    ReplyDelete
  9. Replies
    1. படித்துவிட்டேன் தெரிந்து கொண்டேன் என்ன செய்ய?

      Delete
  10. ஒவ்வொரு தனி மனிதனும் தன்னால் இயன்றதை தேவையுள்ள அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் பொழுது பயன்பெற்றவர்கள் அடையும் மன மகிழ்சியில் தான் இறைவனின் வழிபாடு உள்ளது.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்


    ReplyDelete
    Replies
    1. உதவி செய்யும் மனமிருந்தால் நீங்களும் தெய்வமாகலாம் .அதனால் உதவி செய்யுங்கள் தெய்வமாகுங்கள்

      Delete
  11. துயர் கடக்கும்
    எளிய வழியை
    அருமையாகச் சொன்னீர்கள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வந்தமைக்கும் தந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றிங்க சார்

      Delete
  12. அருமையான வரிகள் . வாழ்த்துகள் ஐயா ...

    ReplyDelete
  13. தேரிழுக்கச் செல்வாரில் தீயணைக்கச் செவ்ாரே
    நேருயர்ந்த மேலோர் நினை

    என்று பாடும் இளங்குமரனாரின் வரிகள் நினைவிற்கு
    வருகின்றன அய்யா. நன்றி

    ReplyDelete
    Replies
    1. அப்படிங்களா மிக்க மகிழ்ச்சி

      Delete
  14. //தெய்வம் தங்கும் கோவிலாக
    தினமும் மனதை வைத்திருந்து
    தெரிந்தோர் உயர வழிசெய்தால்
    தெய்வத்தின் கருணைக் கிடைத்திடுமே// அருமையா சொன்னீங்க ஐயா...

    ReplyDelete
    Replies
    1. உண்மையாக செய்திட்டால் அவர்கள் உயர வழி செய்திடலாம்.

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more