தெய்வங்கள்

தெய்வங்கள்

கல்விப்பணி செய்வீரே....

நல்ல உள்ளம் கொண்டோரே
நாளும் மகிழ்ச்சியைக் கேட்போரே
இல்லா நிலையில் உள்ளோர்க்கு
இதயம் கனிந்தே உதவிடுங்கள்

கல்விப் பணியைச் செய்திடுங்கள்
கருணைக் கொண்டே வாழ்ந்திடுங்கள்
நல்லச் செயலைச் செய்வதற்கு
நான்குபேரைத் தத்தெடுங்கள்

காசுப் பணமாய் கொடுக்காமல்
கட்டணம் மட்டும் செலுத்தினாலே
பேசும் உலகம் உங்களையே
போற்றி மகிழும் நற்செயலை

இன்றைய நாளில் தவிப்போரை
இயலா நிலையில் உள்ளோராம்
அருகில் சென்று கேட்டறிந்து
அவரை உயரச் செய்வீரே

கல்விப் பணியை முடிந்தவரை
கடமையாகச் செய்து வந்தால்
எல்லா தெய்வமும் துணைவந்தே
ஏற்றம் நன்றாய் கொடுத்திடுமே

Comments

  1. நல்ல கருத்துக்கள்... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க நண்பரே

      Delete
  2. இன்றைய சமூக சூழலுக்கு ஏற்ற கருத்து...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ப்ரியா அவர்களே

      Delete
  3. கல்விப் பணியை முடிந்தவரை
    கடமையாகச் செய்து வந்தால்
    எல்லா தெய்வமும் துணைவந்தே
    ஏற்றம் நன்றாய் கொடுத்திடுமே//

    காலத்துக்கு ஏற்ற கவிதை.

    ReplyDelete
    Replies
    1. நம்மால முடிந்த உதவி செய்தால் பரவாயில்லை

      Delete
  4. அருமையான கருத்துள்ள கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க

      Delete
  5. கண்ணெனப் போற்றும் கல்விதனை இல்லாதோர்க்கு
    உணர்ந்திரங்கி உதவுமென்று நன்றாய்ப்பாடினீர் சிறந்தே.

    அருமை. வாழ்த்துக்கள் சகோ!

    த ம.4

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க சகோ

      Delete
  6. அருமையானதொரு கருத்து ஐயா. வாழ்த்துகள் !!!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்கம்மா

      Delete
  7. கல்வி மட்டுமே
    மனிதனை
    கரை சேர்க்கும்
    அருமையான கவிதை அய்யா
    கல்விக் கண் திறக்க
    இயன்றவரை
    உதவுவோம்
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. கல்விக்கு உதவினால் கடவுளைக் காணலாம்

      Delete
  8. கல்விப் பணியை முடிந்தவரை
    கடமையாகச் செய்து வந்தால்
    எல்லா தெய்வமும் துணைவந்தே
    ஏற்றம் நன்றாய் கொடுத்திடுமே

    கடமை தவறாமல்
    கல்விப்பணி ஆற்ற அருமையான பகிர்வுகள்..

    ReplyDelete
    Replies
    1. நல்லதை நாலுபேருக்கு சொன்னால் ஒருவருக்காவது உதவிகிடைக்குமே என்ற நப்பாசைான்

      Delete
  9. தங்கள் கவிதைகளிலேயே என்னை மிகவும் ஈர்த்த, மிகவும் உயர்ந்த, சமுதாய நோக்கமுடைய கவிதை இது.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கையா
      முடிந்ததை
      சொல்வதுகடமைஅல்லவா

      Delete
  10. கோயில் கட்டுவதை விட பள்ளிக்கூடம் கட்டுவது மிகப்பெரிய சமூக என்கிறார்கள்,கல்ப்பணி மகத்தானது.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் கல்விப்பணி மகத்தானது

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more