தெய்வங்கள்

தெய்வங்கள்

அதிகாலைச் சூரியனே..


அதிகாலைச் சூரியனே
அன்பான வரவேற்பு

ஆண்டவனைத் தரிசிக்க
ஆர்வமுடன் வருகிறாயோ

இன்முகத்தில் நீ வந்து
இன்னல் தீர வேண்டுகிறாய்

ஈசனையும் பார்த்துவிட்டு
ஈகையோடு வாழ்த்துகிறாய்

என்ன தேடி வருகின்றாய்
எதற்காக  நீ கோபமுற்றாய்

ஏனிந்த தீக் கனலை
ஏற்றிவிட்டு தாக்குகிறாய்

ஐயமில்லை உன் கோபம்
ஐவருள் நீ அடக்கம்தானே

ஒற்றுமையாய்  பஞ்சபூதம்
ஒன்றி நன்மை செய்தாலே

ஓங்கி வரும் நல்லொழுக்கம்
ஒவ்வொருவரும் பேணுவார்கள்

அஃதே எல்லோருக்கும் நலமாம்




Comments

  1. உயிரெழுத்துகளை வைத்து... அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. காலை வணக்கம் ஐயா.. சூரியனுடன் சேர்ந்து தங்களது கவிதையும் என்னை எழுப்பியது...

    ReplyDelete
    Replies
    1. சீக்கிரம் பள்ளியில் (?)படிக்க கிளம்புங்க?

      Delete
  3. அருமை
    வித்தியாசமான அருமையான கவிதை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க சார்

      Delete
  4. பஞ்ச பூதத்திற்கும் ஒற்றுமையினை போதித்த
    நற்சிந்தனை அருமை

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க ஜெயக்குமார்

      Delete
  5. ஃ என்பதை q என்று தட்டச்சலாமே!

    ReplyDelete
    Replies
    1. மாற்றி விட்டேன் நன்றி

      Delete
  6. உயிரெழுத்துகளில் துவங்கி அருமையான கவிதை..உங்கள் திறமைக்கு வணங்குகிறேன்

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க கிரேஸ்.தொடர்ந்து வாங்க

      Delete
  7. உயிர் எழுத்துகளில் காலைக்கதிரவன் எனத்திகழும்
    அருமையான கவிதை ..!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கம்மா .இருந்தாலும் உங்களுக்கு பின்புதான் எல்லாமே

      Delete
    2. பாடலைவிட, பின்னூட்டத்திற்கான பதிலை, மிகவும் அனுபவித்து எழுதியுள்ளீர்கள் !!!!!!

      Delete
    3. அப்படிங்களா நன்றிங்க சார்

      Delete
    4. திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களும் ஓர் சூரியனே !

      அறிவினில் பிரகாஸிக்கும் அவர்கள் ஓர் ஞான சூரியன்.

      அதிகாலைச் சூரியன் நாள் தவறாமல் உலகில் உதித்து எழுவதுபோல, அதிகாலை 5 மணிக்கு இவர்களின் பதிவு ஒன்று வலையுலகில் உதித்து வருகிறது. அதனால் இவர்களும் சூரியன் போன்றவர்களே.

      அநீதிகளைச் சுட்டு எரிப்பதில், இவர்கள் உச்சி வெயில் சூரியன் போன்றவர்கள்.

      நல்லோர் சிலரின், நல்ல பதிவுகளுக்கு மட்டும், நியாயமாக கருத்தளிப்பதில், குளுமையான குதூகலமான மாலைச் சூரியன் போன்றவர்களும் இவர்களே.

      //இருந்தாலும் உங்களுக்கு பின்புதான் எல்லாமே//

      இருந்தாலும் இல்லாவிட்டாலும், சொன்னாலும் சொல்லாவிட்டாலும், அவர்களுக்குப்பின்பு தான் எல்லாமே + நாம் எல்லோருமே.

      ஆயிரமாவது பதிவினை எட்ட உள்ள அவர்களுக்கு நிகர் அவர்களே தான் என்று அடித்துச்சொல்வேன்.

      கோடி சூர்ய பிரகாஸத்துடன் அவர்கள் மேலும் ஜொலிக்க என் அன்பான வாழ்த்துகள்.

      Delete
    5. உண்மைதான் அம்மாவும் "அதிகாலைச் சூரியன்தான்"நானும் அவர்களை புகைப்படம் பார்த்ததில்லை ஆனாலும் வணங்குகிறேன்.

      Delete
  8. அ, ஆ, இ, ஈ..,ன்னு புது பாடல் எழுதி ஆண் ஔவ்வையார் அவதாரமே எடுத்திட்டிங்க சகோ!

    ReplyDelete
    Replies
    1. அப்படிங்களா? நல்லாயிருக்கா இல்லையா?

      Delete
  9. உயிரெழுத்து கவிதை மிகவும் அருமை

    ReplyDelete
    Replies
    1. வந்தமைக்கு நன்றிங்க

      Delete
  10. அழகான சூரியோதம் போன்ற அருமையான கவி தந்தீர்கள். வாழ்த்துக்கள் சகோ!...

    ஆதவனை வரவேற்ற கவியாழி கவிகண்டு
    மாதவம் இங்கு நாம் செய்தனமென்று
    பூதலமும் இணைந்த பரிவாரமும் பூரிக்க
    மாதிவள் வாழ்த்தினன் மகிழ்ந்தே!

    த ம. 7

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்க இளமதி

      Delete

  11. நல்ல முயற்சி! அருமை!

    ReplyDelete
  12. கவியாழி கண்ணதாசனின் கவிதையை நெஞ்சாரத் தழுவிக் கொள்ள வந்த உதயசூரியன்!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க இளங்கோ அவர்களே

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more