தெய்வங்கள்

தெய்வங்கள்

கலர்க்கலராய் ஆடைப் பார்த்து

மேனியெல்லாம் நகையைப் பூட்டி
மேல்சாதி என்று சொல்லுவான்
மீதுமுள்ள உடல் இடங்களுக்கு
மேலும் சாந்தும் பூசுவான்

கீழ்த்தட்டில் வாழும்  மக்களையே
கீழ்த்தரமாய் பார்த்து எண்ணுவான்
கீழிருந்து மேல்வரைப் உற்றுக்
கெட்ட வார்த்தைக் கூறுவான்

கலர்க்கலராய் ஆடைப் பார்த்து
கண் சிவந்து கொள்ளுவான்
கண்டபடி மனதில் எண்ணி
கஷ்டகாலமென்று  சொல்லுவான்

நாட்டுக்கு உழைக்கச் சொல்லி
நடித்தும்  நாடக மாடுவான்
நாறிப் போன மானத்துக்கு
நன்கொடைகள் பல செய்யுவான்

கோடிகோடிப் பணத்தை சேர்த்து
காவல் காத்து நில்லுவான்
கஷ்டப்படும் ஏழைக்கு காசை
வட்டிபோட்டு வாங்குவான்

கண்டபடி மாத்திரையை
மூன்று வேலை தின்னுவான்
கடைசியிலும் உடலை வருத்தி
கஷ்டமாக உயிரை நீக்குவான்






Comments

  1. முடிவில் சரியான தண்டனை தான்...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்.அதிகமாய் பணம் சேர்த்தால் ஆயுள் முழுதும் இப்படித்தான் மாத்திரையைத் தின்று வாழவேண்டும்

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
  2. வழமாக வாழாது
    பிணமாக போகின்றனரே
    உளமார உதவினால்
    எப்போதும் இனியவரே

    கனமான மனதுடன்
    கவிபாடி நொந்தீரே
    இதமாகச் சொன்னாலும்
    இவர்மாற மாட்டாரே...

    த ம. 3

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஆடம்பர வாழ்க்கை ஆபத்தில்தான் முடியும் .மாறினால் நல்லது மாறாவிட்டால் மாத்திரைதான் வலியது

      Delete
  3. பேராசையுடன் வாழ்பவன் பெரும் அவஸ்தையுடன் தான் வாழ்வான் என்பதை அழகாக சொல்லிவிட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. பேராசை மட்டுமல்ல மனித நேயம் இல்லாதவனுக்கும் மாத்திரையே துணையாகும் .உண்மைதான்

      Delete
  4. பேராசை பெருங்கஷ்டம்! பணம் சேர சேர வியாதியும் சேர்வதும் உண்மைதான்!

    ReplyDelete
    Replies
    1. பெரும் நஷ்டமும் வியாதியின் கஷ்டமும்தான் இறுதியில் வந்து சேரும்

      Delete
  5. பணத்திற்கு ஆசைப்பட்டோரின் நிலை
    பெரும்பாலும் இப்படித்தான் முடிகிறது
    நீங்கள் முடித்துள்ளதைப்போல...

    ReplyDelete
    Replies
    1. நல்ல உணவும் நட்பும் இல்லாமல் இறுதிகாலத்தில் இப்படித்தான் வாழ்கிறார்கள்.இருக்கும்போது உதவாமல் இருக்கும் சொத்து இறந்தபின் இருந்து யாருக்கப்பயன்.உங்கள் வருகைக்கு நன்றி

      Delete
  6. பேராசை பெரு நஷ்டம். அருமை

    ReplyDelete
    Replies
    1. சரியான வழியில் சம்பாதித்து முறையான வழியில் சாலவு செய்திட வேண்டும்

      Delete
  7. பணத்திற்கு பெருமை ஈகையே ..அருமை!

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க இருக்கும்போதே பலருக்கு ஏதாவதொரு வகையில் உதவனும்.இறந்தபின்பு அது உதவாது

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more