வேண்டும்நீ எனக்கு வேண்டும்....
ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும்
ஆசைக்குப் பிள்ளைகள் வாழ்ந்தாலும்
ஆம்பிளைத் துணைக்கு ஈடுண்டா
அவரின் இணைக்கு நிகருண்டா
பெற்றவர் பிறந்தவரி ருந்தாலும்
உற்றவர் அன்புக்கு விலையுண்டா
கற்றவருமே கண் கலங்குவார்
கல்லாதவரோ மனம் புழுங்குவார்
சொத்தும் சொந்தமு மெனனக்கு
சொல்லென்னா துயரம் தருமே
சுகமும் பணமும் வேண்டாமே
சொந்தமே என்னுயீரேநீ வேண்டுமே
வாழ்ந்த நாட்களை எண்ணியே
வாழ்வு முழுதும் நானிருப்பேன்
வாடிபோடி என்றழைத்தே நீயும்
வசைபாட வேண்டும் அன்பாக
மீண்டும் எழுந்து வருவாய்
மேனியில் எழுந்திடு உணர்வாய்
தாங்கியே அருகில் உன்னைத்
தாய்போல் காப்பேன் அன்பாய்
வேண்டும்நீ எனக்கு வேண்டும்
மீண்டும் துணைக்குநீ வேண்டும்
தாண்டும் வாழ்க்கையோடுநீ வேண்டும்
தைரியம் சொல்லநீ வேண்டும்
ஆசைக்குப் பிள்ளைகள் வாழ்ந்தாலும்
ஆம்பிளைத் துணைக்கு ஈடுண்டா
அவரின் இணைக்கு நிகருண்டா
பெற்றவர் பிறந்தவரி ருந்தாலும்
உற்றவர் அன்புக்கு விலையுண்டா
கற்றவருமே கண் கலங்குவார்
கல்லாதவரோ மனம் புழுங்குவார்
சொத்தும் சொந்தமு மெனனக்கு
சொல்லென்னா துயரம் தருமே
சுகமும் பணமும் வேண்டாமே
சொந்தமே என்னுயீரேநீ வேண்டுமே
வாழ்ந்த நாட்களை எண்ணியே
வாழ்வு முழுதும் நானிருப்பேன்
வாடிபோடி என்றழைத்தே நீயும்
வசைபாட வேண்டும் அன்பாக
மீண்டும் எழுந்து வருவாய்
மேனியில் எழுந்திடு உணர்வாய்
தாங்கியே அருகில் உன்னைத்
தாய்போல் காப்பேன் அன்பாய்
வேண்டும்நீ எனக்கு வேண்டும்
மீண்டும் துணைக்குநீ வேண்டும்
தாண்டும் வாழ்க்கையோடுநீ வேண்டும்
தைரியம் சொல்லநீ வேண்டும்
அருமை... வாழ்த்துக்கள் ஐயா...
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றிங்க தனபாலன்
Deleteகற்றவருமே கண் கலங்குவார்
ReplyDeleteகல்லாதவரோ மனம் புழுங்குவார்
துன்பம் ...
ஆம் பெண்ணின் துயரம் சொல்ல வார்த்தை இல்லாதது
Deletearumai vaazhththukkaL
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றிங்க சார்
Deletetha.ma 3
ReplyDelete''..மீண்டும் எழுந்து வருவாய்
ReplyDeleteமேனியில் எழுந்திடு உணர்வாய்
தாங்கியே அருகில் உன்னைத்
தாய்போல் காப்பேன் அன்பாய்...''
ஏக்கம் புரிகிறது..
அமைதி நிறையட்டும்.
வேதா. இலங்காதிலகம்.
படுக்கையில் இருக்கும் புருஷனை அழைக்கும் பெண்ணின் உணர்ச்சியின் பெருக்கு.
Deleteஇடையில் வரும் சொந்தம் ஆனால் இணையில்லா சொந்தம் . இணைந்தே வாழவும் இணைந்தே மாளவும் எண்ணத் தோன்றும் சொந்தம் . இப்போ தைரியம் வேண்டும் . அருமை .
ReplyDeleteஇறுதிவரை அன்புக்கு ஏங்கும் சொந்தம் கணவனின் மனைவியின் சொந்தமே .எதையும் தாங்கும் எப்போதுமே ஏங்கும்
Deleteஉணர்வதில் கலந்து உயிரெனவாக உள்ளத்திலுறைந்ததே
ReplyDeleteஉண்மையதை இங்கு உவகைதரவே உரைத்திட்டீரே
மணம் தந்தவாழ்வு மனதில்நிறைய மகிழ்வுதோன்றிடுமே
கணமேனும் பிரிவில்லை கனவிலும் நனவிலுமே!...
உணர்வுபூர்வமான கவிதை! வாழ்த்துக்கள் சகோதரரே!
த ம. 5
எப்போதும் அருகில் இருக்க வேண்டும் .இல்லாதிருந்தாலும் சொல்லாலே அழைக்க வேண்டும் .எல்லோரின் வாழ்வுபோல சிறக்க வேண்டும்
Deleteஉணர்வுகளை கிளர்ந்தெழவைக்கும் கவிதை அய்யா. நன்றி
ReplyDeleteஆமாங்க ,எவ்வளவு பணம் இருந்தாலும் விரும்பியவரின் துணை பெரிதல்லவா?
Deleteஉணர்வுபுர்வமான கவிதை...
ReplyDeleteவாழ்த்துக்கள் கவியாழி ஐயா.
உள்ளத்தில் ஏக்கமும் உதட்டில் உணர்ச்சியும் கொண்டு வாழ்க்கைக்காக ஏங்குபவரின் உணர்ச்சியின் வெளிப்பாடே
Deleteகணவன் அருகில் இருப்பதைத்தான் பெண் விரும்புவாள் அதை அழாகாக சொல்லி விட்டீர்கள்
ReplyDeleteஆம். என் நெஞ்சில் சுமந்த குழந்தை//வருத்தமான உடன்பிறவா சகோதரிக்கு இப்படியொரு நிலைமை
Deleteகவிதை அருமை!
ReplyDeleteநன்றிங்க ஜனா சார்
Deleteஇறந்தாலும் நீ வேண்டும்
ReplyDeleteஇவ்வுலகம் இடிந்தாலும் நீ வேண்டும் எனக்கு.. அழகிய கவிதை..
(viralkal.blogspot.com)
வருகைக்கு நன்றிங்க
Deleteமீண்டும் எழுந்து வருவாய்
ReplyDeleteமேனியில் எழுந்திடு உணர்வாய்
தாங்கியே அருகில் உன்னைத்
தாய்போல் காப்பேன் அன்பாய்//
அருமையான கவிதை.
உணர்வுபூர்வமான கவிதை.
உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்கம்மா
ReplyDeleteமிகவும் அருமை...
ReplyDeleteநன்றிங்கம்மா
Delete