ஒத்தைப் பிள்ளை வேண்டாமே
ஒத்தைப் பிள்ளை போதுமின்னு
ஒய்யாரம் செய்யும் நண்பா
சத்தியமா தப்பு தான்னு
இப்போதே சொல்லி விட்டேன்
சொத்து பத்து இல்லாட்டி
சொந்தம் மட்டும் இருந்தாலே
பத்துத் துயர் போக்கிடவே
பக்கத் துணை இருப்பாரே
மிச்சம்மீதி அன்பை எங்கே
மீண்டும் தேடித் போவதெங்கே
சொத்தப் புள்ளை ஒத்தையாக
சோகமாக இருக்கு நண்பா
உத்தரவும் போட வில்லை
உருப்படியா சொல்ல வில்லை
ஒத்தையாலே நெஞ்சைக் குத்தி
ஓய்வே இல்லாமப் போச்சி
சத்தியமா சொல்லி விட்டேன்
ஒத்தப் புள்ள வேண்டாங்க
மிச்ச உயிரும் போகுமுன்னே
சொச்சம் ஒன்னும் பெத்துக்கோங்க
ஒய்யாரம் செய்யும் நண்பா
சத்தியமா தப்பு தான்னு
இப்போதே சொல்லி விட்டேன்
சொத்து பத்து இல்லாட்டி
சொந்தம் மட்டும் இருந்தாலே
பத்துத் துயர் போக்கிடவே
பக்கத் துணை இருப்பாரே
மிச்சம்மீதி அன்பை எங்கே
மீண்டும் தேடித் போவதெங்கே
சொத்தப் புள்ளை ஒத்தையாக
சோகமாக இருக்கு நண்பா
உத்தரவும் போட வில்லை
உருப்படியா சொல்ல வில்லை
ஒத்தையாலே நெஞ்சைக் குத்தி
ஓய்வே இல்லாமப் போச்சி
சத்தியமா சொல்லி விட்டேன்
ஒத்தப் புள்ள வேண்டாங்க
மிச்ச உயிரும் போகுமுன்னே
சொச்சம் ஒன்னும் பெத்துக்கோங்க
/// சொத்து பத்து இல்லாட்டி
ReplyDeleteசொந்தம் மட்டும் இருந்தாலே
பத்துத் துயர் போக்கிடவே
பக்கத் துணை இருப்பாரே ///
உண்மை... அருமையான வரிகள்... வாழ்த்துக்கள்...
ஆமா நண்பரே ஒத்தபிள்ளை சொத்தைப் பிள்ளையா?வருகைக்கு நன்றி
Deleteஅண்ணன் தம்பி .சித்தப்பு பெரியப்பு
ReplyDeleteமாமன் மச்சுனன உறவெல்லாம்
இல்லாமல் போகுமோ எனத்தான்
பயமாயிருக்கிறது இப்போ உலகம் போகும் போக்கு
இன்றைச் சூழலைஅருமையாகச் சொல்லிப்போகும்
பதிவு அருமை.தொடர வாழ்த்துக்கள்
அதனாலத்தான் நான் சொல்லுறேன் ஒத்தப் புள்ள வேண்டாமுன்னு.சார் நீங்க வந்தமைக்கும் கருத்து தந்தமைக்கும் நன்றிங்க
Deletetha/ma 3
ReplyDeleteநன்றிங்க சார்
Deleteஐந்துமாதம் முடியும் முன்னே நூறு பதிவுகள் ..நண்பர்கள் அடுத்த பிள்ளை பெறுவதற்குள் ஆயிரம் பதிவுகள் பிரசவிக்க வாழ்த்துகள் !
ReplyDeleteஎனக்கே தெரியாததை தெரிவித்தமைக்கு நன்றிங்க பகவான்ஜி
Deleteஇரண்டு போதுங்க...
ReplyDeleteநல்லதொரு கவிதை...
இந்த ஆண்டின் 100-வது பதிவு... வாழ்த்துக்கள்
ஆமாம்.ஒன்று வேண்டாமுன்னுதான் எனதுவேண்டுகோள்.இப்போதெல்லாம் 2,3,4ன்னு தொடர்வது ஆரோக்கியமான விஷயம்.உங்க வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க
Deleteகால மாற்றம் பணத்தை குறி வைத்து ஓடும் வாழ்க்கையை கற்றுக்கொடுக்கும் போது எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் பயனில்லை நண்பரே....
ReplyDeleteஉறவுகள் இழப்பு என்பது வருத்தத்திற்குரியதாகத்தான் இருக்கிறது.... அந்த உறவுகளின் உன்னதம் உணரவைக்க வேண்டும்.
எங்க வீட்டில் ஒரு பையன் தான் ... அவனின் மாமா,அத்தை ,சித்தப்பா பிள்ளைகளிடையே அழகான அண்ணா,தம்பி ,அக்கா உறவை படர வைத்துள்ளோம்... பின்னாளிலும் தொடரும் என நம்புகிறேன்.
நல்லதே நடக்குமென நம்புவோம்.ஆனாலும் என்னைபோலவே யாரும் தப்புப் பண்ண வேண்டாமுன்னு வேண்டுகோள்தான்
Deleteஎனக்கு ஒத்த புள்ளதான் கண்ணதாசன் சார்
ReplyDeleteஇரட்டை சதத்தை தாண்டி வேகமாக போய்க்கிட்டிருக்கீங்க வாழ்த்துக்கள்.
எனக்கும் ஒரே ஒரு பொண்ணுதான் நண்பரே.நான் சொல்லியம்மைக்கு நிச்சயம் அர்த்தம் உங்களுக்கு புரிஞ்சிருக்கும்.வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க முரளிதரன்
Deleteஅருமையான கருத்துள்ள கவிதை! ஒத்தை புள்ளை இருந்தால் மற்ற உறவுகள் மறந்தும் மறத்தும் போக வாய்ப்புள்ளதுதான்! நன்றி!
ReplyDeleteஆமாம் தனியாளாய் தடம் பார்த்து செல்ல முடியாது.இருவர் துணை இருந்தால் எல்லாமே வெற்றியாக்கலாம்
Deleteமிக சிறப்பாய் சொன்னிர்கள்... ஒற்றையாய் வளர்வதால் நாங்கள் இழக்கும் விடயங்கள் என்ன என்பதை என்னை போன்ற ஒற்றை பிள்ளைகளே அறிவர்... உண்மையில் எனது தாயும் இப்பொழுது வருத்தப் படுகிறார் ஒரு பொண்ணே போதும்னு நெனச்சது தப்பு என்று... நானும் என் தோழிகளிடமும் உரைத்து கொண்டே இருக்கிறேன் நீங்கள் பிள்ளை பெரும் போது நிச்சயமாய் ஒன்றே போதுமென்று நினைக்காதீர்கள் என்று... நல்ல கவிதை
ReplyDeleteஎனக்கும் ஒன்னே ஒண்ணுதான் சில சமயம் நானும் வருத்தப்ப் படுவதுண்டு எனவேதான் இதை என்னால் உணர்ந்து எழுத முடிந்தது
Deleteசொந்த அனுபவம் தந்த கவிதையோ?
ReplyDeleteஆம் அய்யா,கவிதை(யாழ்)வந்தக் கவிதை தான்
Deleteஒன்று போதாது;இரண்டு கட்டாயம் வேண்டும்!
ReplyDeleteஒன்றுக்குமேல் இருப்பது நன்றுதான்
Delete'ஒன்றுக்கொன்று துணை இருக்கும்' என்பார்கள் முன்னோர்கள்.
ReplyDeleteஇக்காலம் துணை இருக்குமா என்பது கேள்விக்குறியும் ஆகலாம்.
சரியாச் சொன்னீர்கள் துணைவேண்டும் இப்போதுதான் புரிகிறது
Deleteநீங்க சொல்வதும் ஏற்றுக்கொள்ளும் உண்மையாத்தானிருக்கு.. எனக்கு ஒத்த பெண் பிள்ளைதான்.. வீட்டிலும் உங்க அட்வைஸையே சொல்வாங்க. இருந்தாலும் ,ஒத்த புள்ள போதும்னு முடிவு. உறவுகளை பகிர்ந்து கொள்ள அக்கா, அண்ணன் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்கிற சமாதானம்.
ReplyDeleteத.ம-8
என்ன இருந்தாலும் உடன்பிறன்தோர்க்கு ஈடாகுமா? இனிமேல் வரும் சந்ததியினருக்குத்தான் எனது வேண்டுகோள்
Deleteஉண்மையை உரைக்கும் கவிதை கவியாழி ஐயா.
ReplyDeleteநன்றிங்க அருணாசெல்வம்.அனுபவம்தான் இப்படிப் பேச வைக்கிறது
Deleteநல்ல கருத்துள்ள கவிதை.
ReplyDeleteநன்றிங்க கும்மாச்சி தொடர்ந்து வாங்க
Deleteஎன்ன ஐயா..
ReplyDeleteஇந்தியர்கள் அனைவரும் என் உடன் பிறந்தவர்கள்னு படிச்சதில்லையா? நம்ம யாருமே ஒத்தையாக பிறக்கலையே? :)
வருண் நீங்க சொல்வது நாட்டுக்கு.நான் சொல்வது வீட்டுக்கு
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஅன்புக்கும் ஒரு துணை கண்டிப்பாக வேண்டும்.....ஆசைக்கு ஒன்னு ஆஸ்திக்கு ஒண்ணுன்னு சொல்லலாம் இல்லையா...! அருமை...!
ReplyDeleteஉண்மைதான் எனது வேண்டுகோள் அன்புக்கு இன்னொன்னு இருந்தால் பரவாயில்லை
Deleteசிந்திக்கும்விதமாகச் சொன்னீர்கள் கவிஞரே.
ReplyDeleteஆமாங்க குணசீலன் எல்லோருக்குமே இதைப் பற்றி தெரிவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது
Deleteநல்லக்கருத்தை சொன்னீர்கள்.
ReplyDeleteஉங்கள் வருகைக்கு நன்றிங்கம்மா
Deleteநிறைய பேர்களின் மனதில் இருப்பதை கவிதையாக வடித்திருக்கிறீர்கள்.
ReplyDeleteஇப்போதெல்லாம் ஒன்றுதான்.அந்த ஒன்றே அதிகம் என்கிறார்கள், என்ன செய்வது?
எனக்கும் ஒன்றேதான் .நான் உணர்ந்து வருந்தி அறிவுறுத்துகிறேன்
Deleteஆமாங்க ஐயா , சகோதரனோ சகோதரியோ இருப்பது மிகவும் தேவை..நல்லாச் சொன்னீங்க! எனக்கு இரண்டு மகன்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் இருவருக்கும்.வாழ்க வளமுடன்
Delete