தெய்வங்கள்

தெய்வங்கள்

நேற்று -இன்று வாழ்க்கை


 கடந்த கால வாழ்க்கைமுறை



ஈரெட்டில் கல்லா கல்வி.

பதினாறு வயதுக்குள் கல்வியின் அவசியத்தைப் புரிந்து  படிக்கவேண்டும்

மூவெட்டில் ஆகாத்திருமணம்

இருபத்திநாலு வயதிற்குள் திருமணம் செய்யவேண்டும் அல்லது அதைப்பற்றி
முயற்சியும் வேண்டும் .இதற்குள்  செய்யும் திருமணம் இனிமையை  தரும் என்பதே சிறப்பு.

நாலெட்டில் பெறாப்பிள்ளை

முப்பத்திரெண்டு வயதிற்குள் பிள்ளைப்பேறு அடைந்திருக்க வேண்டும்  அல்லது தகுதியை நிருபிக்க வேண்டும்.அதற்குமேல் பெற்ற பிள்ளைக்கும் பெற்றோருக்கும் புரிதல் இருக்காது .


ஐயெட்டில் சேராச் செல்வம்

நாற்பது வயதிற்குள் தனியாக பணம் சேர்த்து வீட்டையும் கட்டி செல்வத்தையும் தேடி வைத்து விடவேண்டும்.

இதை பெரியோர்கள் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன்




ஆனால்....

இன்றைய வாழ்க்கை முறை

1-5       குழந்தைப் பருவம் மகிழ்ச்சியானது மகிழ்வார்கள்

5-25     படிப்பு படிப்பு வேறெதுவும்  முடியாது

25-35   வேலை கிடைத்தல்,திருமணம், உழைப்பு,சொத்து சேர்த்தல்

 35-40   சேமிப்பு  ,மனக்குழப்பம்

40-60 பிள்ளைகளின் வாழ்க்கைப் பற்றிய  நிம்மதியில்லாத நிலை

இறுதிவரை அவர்களின் நல்வாழ்வு குறித்தக் கவலைகளுடன்  தனிமையோ மனதில் வருத்தமோ கொண்டு காலத்தைக் கடத்துவது அல்லது முதுமையில் துணையின்றி முதியோர் இல்லம் சென்று விடுவது.

மாற்றம் வேண்டும் தான் மனித உறவுக்குமா? சிந்திப்பீர்!!!!


Comments

  1. ஈரெட்டு முடிவதற்குள் இப்படியும் நடந்து விடுகிறது ....வயசுப் பொண்ணுங்களுக்கு வரக் கூடாத கோளாறு !
    ''டாக்டர் ,என் மகளுக்கு வந்திருக்கிறது வயிற்றுக் கோளாறு இல்லே ,வயசுக் கோளாறுன்னு ஏன் சொல்றீங்க?''
    ''கல்யாணத்திற்கு முன்னாலே கர்ப்பமானா வேற எப்படிச் சொல்றது?''.
    இன்றைய 'ஜோக்காளியின் 'தின'சிரி'ஜோக்'கைப் போன்றே உங்கள் கருத்தும் அருமை !
    [

    ReplyDelete
    Replies
    1. உங்களது தின சிரியைப் பார்த்தேன் ரசித்தேன்

      Delete
  2. வணக்கம்

    சொன்னவிதம் மிக அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி,
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்க ரூபன்

      Delete
  3. கவிஞர் வைரமுத்து அவர்கள்
    எட்டு எட்டா உலக வாழ்வை பிரிச்சுக்கோ-
    அதில் எந்த எட்டில் நீ இருக்கே தெரிங்சுக்கோ
    என்கிற வரிகளை நினைவுறுத்திப் போனது பதிவு
    நான் எட்டாம் எட்டில் இருக்கிறதைப் புரிந்துதான்
    பதிவுகள் எழுதி வருகிறேன்
    அதுதான் பதிவுகள் கொஞ்சம் சுவாரஸ்யம் மற்றும்
    மொக்கைகள் குறைந்து இருக்கும்
    வாழ்த்துக்களுடன்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் .எப்போதும் போல உங்களின் விளக்கம் மிக அருமை இதை எல்லோருமே உணரனும்.

      Delete
  4. சிந்திக்க வேண்டும். நல்ல பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. ஆம்.உண்மைதான் நன்றி

      Delete
  5. 35-40 சேமிப்பு ,மனக்குழப்பம்

    40-60 பிள்ளைகளின் வாழ்க்கைப் பற்றிய நிம்மதியில்லாத நிலை

    இறுதிவரை அவர்களின் நல்வாழ்வு குறித்தக் கவலைகளுடன் தனிமையோ மனதில் வருத்தமோ கொண்டு காலத்தைக் கடத்துவது அல்லது முதுமையில் துணையின்றி முதியோர் இல்லம் சென்று விடுவது.//

    இதே போக்கு எல்லார் வாழ்விலும் என்று சொல்லிவிட முடியாது. முப்பது வயதுவரை நீங்கள் சொல்வது சரி... ஆனால் அதற்குப் பிறகு முற்பாதி வாழ்க்கையில் நாம் என்ன செய்தோம் எப்படி செய்தோம் என்பதை பொருத்தது. என்னுடன் சேர்ந்து நாங்க ஐவர். பெண்கள் யாரும் இல்லை. அனைவருமே பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டோம். யாருக்குமே மேலே சொன்னதுபோல் நடக்கவில்லை. நீங்கள் சொன்னதுபோல் வயதான காலத்தில் நிம்மதியின்றி அலைமோதுபவர்களையும் பார்த்திருக்கிறேன். அவர்களுடைய முற்பாதி வாழ்க்கையில் அவர்கள் ஆடிய ஆட்டத்தையும் பார்த்திருப்பதால் சொல்கிறேன். நாம் முப்பது வரை வாழும் வாழ்க்கைதான் நம்முடைய பிற்பாதி வாழ்க்கையை வடிவமைக்கும் என்பதை நான் அனுபவித்து, பார்த்து படித்த பாடம்.

    ReplyDelete
    Replies
    1. நான் சொல்வது அன்றைய வாழ்கையை நேற்று என்றும் இப்போதும் இனி வரப்போகும் சந்ததிக்கு இன்றும் என்றே குறிப்பிட்டிருக்கிறேன்.நீங்களும் நானும் நேற்றைய மனிதர்கள்

      Delete
  6. இப்படி அமைந்தால் வாழ்க்கை எப்போதும் மகிழ்வாய் தான் இருக்கும்
    என்பதில் சந்தேகமே இல்லை .சிறப்பான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
    சகோதரரே .

    ReplyDelete
  7. வாழ்க்கை ஒரு புத்தகம்.
    அதில் வயது ஒவ்வொரு பாடம்.
    அனுபவங்கள் பக்கமாகிறது.

    அந்தந்த வயதிற்குகந்த வகையில் இப்போது பலவிடயங்கள் அமையப்படுவதில்லை. காலமும் அதற்கேற்றாற்போல் இல்லாமல் சிறு வயதிலேயே மிகப்பெரிய சுமை அழுத்தங்கள் என மாறிப்போகின்றது.

    அமையாதவற்கு ஏக்கம் மட்டுமே எம்மிடம்.....

    அருமையான பதிவும் பகிர்வும். மிக்க நன்றி!
    வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. இப்போது நவீன உலகம் இப்படித்தான் இருக்கும் .நாம் தாத்தா பாட்டியோடு வாழ்ந்த வாழ்க்கை இன்றைய சந்ததிக்கு கிடையாது.

      Delete
  8. சிந்தனைக்கு உரிய சிறப்பான பதிவு ஐயா. நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க ஜெயகுமார் அய்யா

      Delete
  9. நல்லா சொன்னீங்க !

    ReplyDelete
    Replies
    1. நல்லா இருகிறதான்னு சொல்லலையே வைகோ சார்

      Delete
  10. என் அம்மா சொல்லும் கருத்தும் இதுதான், அது அது காலத்தில் நடந்தால் தான் நன்றாக இருக்கும் என்பார்கள்.

    அருமையான கருத்துக் கவிதை கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. காலாகாலத்தில் எல்லாமே நடக்கவேண்டும் என்பதுதான் உண்மை

      Delete
  11. கவிஞரின் புதிய சிந்தனை. ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரி.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க சார்.அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது

      Delete
  12. அருமையாய் சொன்னீர்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிங்கம்மா

      Delete
  13. நீங்கள் சொல்வதுபோல நடந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் எல்லோருக்கும் அமைந்துவிடாது. சிலருக்குத் திருமணம் தாமதமாகும். அதனால் எல்லாமே தாமதம் ஆகும். அதேபோலத் தான் முதுமையும். பெற்றோர்களை கண்ணுக்கு கண்ணாக பார்த்துக் கொள்ளும் பிள்ளைகளும் இருக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. அப்படிப் பெற்றோரைப் பார்க்கும் பிள்ளைகள் மகிழ்ச்சியானவர்களே என்பதில் ஐயமில்லை

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more